சவுதி அரேபிய குடிமக்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களில் 10 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிடாகட் சட்டத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனால், அந்நாட்டில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப நேரிட்டது.
சவூதியில் இருந்து திரும்பிவரும் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவுவதற்கென்றே, கேரள அரசு, அந்நாட்டின் மூன்று சர்வதேச விமான நிலையங்களிலும், அவசர உதவி மையங்களைத் திறந்துள்ளது. இது மட்டுமின்றி, உரிய ஆவணங்களின்றி சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடித்து உடனடியாக வெளியேற்றவும் சவுதி அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, பிடிபடும் நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடிந்த பின்னர், அவரவரது நாட்டு தூதரகம் மூலமாக சவுதியில் இருந்து வெளியேற்றப்படுவர்கள்.
'நிட்டாகட்' திட்டத்தின் மூலம் உரிய ஆவணங்களோடு பணியாற்றுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஒருபுறமும், கள்ளத் தனமாக தங்கியுள்ளவர்களை தண்டிக்கும் நடவடிக்கை மறுபுறமும் நடைபெற்று வருவதால் சவுதியில் தங்கியுள்ள இந்தியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களை வெளியேற்றுவது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை கைவிட்டு, வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை முறைபடுத்திக் கொள்ளும் வகையில் 3 மாத கால அவகாசம் வழங்குமாறு சவுதி நாட்டின் தொழிலாளர் நலத்துறை மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோருக்கு சவுதி மன்னர் அப்துல்லா நேற்று உத்தரவிட்டார்.
சவுதி அரசின் இந்த புதிய நடவடிக்கையின் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 2 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றபட்டதாகவும் சுமார் 6 லட்சம் சவுதி குடிமக்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment