என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, April 12, 2013

ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி ஆஜர்

ஐதராபாத்:தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும் கவலை கொண்டனர்.நடிகை அஞ்சலி நிலை குறித்து, ஐதராபாத்தில் இருக்கும், அவரது அண்ணன் ரவிசங்கர், நேற்று மதியம் தெரிவித்ததாவது:அஞ்சலி விவகாரத்தில், எங்கள் குடும்பத்தினருடன் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியத்துடன் இருக்கும் பிரச்னைகள், சுமுகமாக பேசி முடிக்கப்பட்டால், அஞ்சலியின் பிரச்னை முடிவிற்கு வரும்.


சித்தி பாரதி தேவி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால், அஞ்சலி கடும் கோபத்தில் இருக்கிறார். ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு, வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம், என்னோடு பேசிய போது, இது குறித்து ஏதும் பேசவில்லை. அவர் எங்கிருக்கிறார் என, எனக்கு தெரியாது. 


அவர், இன்று, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கிறேன்.அஞ்சலியின் மொபைல் போன், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. இதனால், அவராக என்னுடன் பேசினால் தான், உண்டு. அது வரை, அஞ்சலி குறித்து, வேறு எதுவும் பேசுவதற்கில்லை.இவ்வாறு, ரவிசங்கர் கூறினார்.சித்தி பாரதிதேவி, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால், தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன்பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலை தகவல் வெளியானது. அதன் படி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற அஞ்சலி, தன்னை யாரும் கடத்தவில்லை; விரும்பித் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளித்தார்.களஞ்சியம் அவதூறு வழக்கு:இந்நிலையில், திரைப்பட இயக்குனர் களஞ்சியம், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில், அஞ்சலி மீது, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். "அஞ்சலி என்னை பற்றி அவதூறாக பேசியதால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்படவேண்டும்' என, மனு செய்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வரும், 19ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
நடிகை அஞ்சலியை, கண்டுபிடித்து, ஒப்படைக்கக் கோரி, தாக்கல் செய்த மனுவுக்கு, இரண்டு வாரங்களில், போலீஸ் தரப்பில், விளக்கம் பெறும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment