என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, April 1, 2013

கருணாநிதியைக் கலாய்த்த மணிவண்ணன்!..


இளைஞன் என்றொரு படம், அன்றைய முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ஒருமுறை கருணாநிதி தளத்துக்கு வந்திருக்கிறார்.
அப்போது தனக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடலை நேற்று இப்படி வர்ணிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.
முதல்வர் கலைஞர்: என்னய்யா மணிவண்ணன்.. என்ன ஓரமா நிக்கிற.. வாய்யா...
மணிவண்ணன்: இருக்கட்டும் தலைவரே... நான் இப்படியே நிக்கிறேன்..
கலைஞர்: (இயக்குநரைப் பார்த்து) நம்மாளுய்யா மணிவண்ணன்... ஆமா, ஏன் நொண்டி நொண்டி நடக்கிறே, என்னாச்சி..
மணிவண்ணன்: அது வந்து தலைவரே.. முதுகு தண்டுவடத்துல ஒரு எலும்பு உடைஞ்சு போச்சுங்க... அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். அதான்.
கலைஞர்: ஆக, உனக்கும் எனக்கும் ஒரே வியாதிதான்...
மணிவண்ணன்: வியாதி ஒண்ணுதானுங்க... ஆனா உங்ககிட்ட இருக்கிற பாஸ்புக் அளவுக்குகூட என்கிட்டே பணம் இல்லைங்ண்ணா!
கலைஞர்: யோவ்... இவ்ளோ வயசாகியும் உன் குசும்பு போகல பாத்தியா!!
அமைதிப்படை 2(நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,) இசை வெளியீட்டு விழாவில் மணிவண்ணன் பேசியதாகும்.
இந்தப் படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம்:
கேரக்டர் 1: நான் மகளிர் அணித் தலைவராகிடப் போறேன்.
கேரக்டர் 2: யோவ் நீ எப்படிய்யா மகளிர் அணித் தலைவராக முடியும்...
கேரக்டர் 1: ஆமா... வயசானவங்கள்லாம் இளைஞர் அணித் தலைவரா இருக்கும்போது, நான் மகளிர் அணி தலைவராக முடியாதா! இது ஒரு சாம்பிள்தான்!..

No comments:

Post a Comment