மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்டர் சசி 555 என்ற படத்தின் மூலம் கமர்ஷியல் ஏரியாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் டைரக்டர் ஷங்கர் படத்தின் ஆடியோ சிடியை வெளியிட நடிகர் ஷங்கர் தனுஷ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ் “இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டியது என்னுடைய கடமை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்போ இங்க இருக்கிற எல்லாரையும் விட படத்தோட மியூசிக் டைரக்டர் சைமனுக்குத் தான் ஸ்பெஷலா இருக்கும். மியூசிக்ல இப்போ நிறைய இளைஞர்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. ஜிப்ரான்,அனிருத், அந்த வரிசையில சைமன் வந்திருக்கார். அவரும் நல்ல பாடல்களை கொடுப்பார்னு நம்புறேன்.
‘மாப்பிள்ளை’ன்னு நான் நடிச்ச ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸுக்கு நான்பரத்தை கூப்பிடக் கூட செய்யல, ஆனா அவர் அந்த பங்ஷன்ல வந்து கலந்துக்கிட்டாரு. அது என்னோட மெமரில ரொம்ப ஸ்ட்ராங்க்கா இருக்கு. அந்த வகையில அவரோட இந்தப்படத்தோட ஆடியோ ரிலீஸ்ல நான் கலந்துகிட்டது என்னோட டூட்டியாகத்தான் நினைக்கிறேன்.
‘மாப்பிள்ளை’ன்னு நான் நடிச்ச ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸுக்கு நான்பரத்தை கூப்பிடக் கூட செய்யல, ஆனா அவர் அந்த பங்ஷன்ல வந்து கலந்துக்கிட்டாரு. அது என்னோட மெமரில ரொம்ப ஸ்ட்ராங்க்கா இருக்கு. அந்த வகையில அவரோட இந்தப்படத்தோட ஆடியோ ரிலீஸ்ல நான் கலந்துகிட்டது என்னோட டூட்டியாகத்தான் நினைக்கிறேன்.
‘மெய் வருத்த கூலி தரும்’னு சொல்வாங்க, மெய் வருத்தியிருக்கீங்க, அது கண்டிப்பா உங்களுக்கு கூலியை தரும்.
டைரக்டர் சசி சாரைப் பார்த்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரியில பணம் சம்பாதிக்கிறது ரொம்ப ஈஸி, புகழ் சம்பாதிக்கிறது ரொம்ப ஈஸி, ஆனா நண்பர்களை சம்பாதிக்கிறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். இங்க மேடையில பேசுற எல்லாருமே “ நண்பர் நண்பர் நண்பர்னு மனசுல இருந்து சொல்றாங்க” அந்த வகையில நீங்க எங்க எல்லாரையும் விட நெறையவே சம்பாதிச்சிருக்கீங்க, அது மாதிரியே இந்தப்படமும் வெற்றியடையணும்னு வாழ்த்துறேன்.
இவ்வாறு தனுஷ் பேசினார். தனுஷ் மற்றும் இயக்குநர் ஷங்கரின் முழுப்பேச்சு வீடியோவை இங்கே காணலாம்.
No comments:
Post a Comment