BlackBerry நிற்வனம், தனக்கு என வாடிக்கையாளர் வங்கியை கொண்டுள்ளது. ஆனால் அப்பிள், சம்சுங் கலக்ஸ்ஸி என்பவற்றின் வருகையால் அது தனது வாடிக்கையாளர் மத்தியில் பின்னடைவை சந்தித்திருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க BlackBerry Z10 என்ற நவீன ஸ்மார்ட் போனை இவ் வருட ஆரம்பத்தில் வெளியிட்டது.
ஆனால் அத் தொலபேசியில் உள்ள சுவாரஸ்யமான குறைபாடு தொடர்பில் தற்போது பரபரக்கப்படுகின்றது.
BlackBerry நிறுவனம் மெசெஞ்சருக்கு பிரபல்யமானது. தம்முடைய BlackBerry பயன்படுத்தும் உறவினர்கள், நண்பர்கள் இடையே நெருக்கமான மெசேச் தொடர்புகளை இதன்மூலம் பேணமுடியும்.
BlackBerry Z10 இன் மெசெஞ்சரில், BlackBerry நிறுவனம் ”show what I’m listening to” என்ற நவீன வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
இவ் வசதியை செயற்படுத்தியிருந்தால், நீங்கள் BlackBerry Z10 இல் ஒன்லைனில் ஏதாவது பாடல்களை கேட்டாலோ, வீடியோவை பார்த்தாலோ அது தொடர்பான இணையதளத்தின் விபரம் மெசெஞ்சர் ஊடாக அதனுடன் தொடர்பில் இருக்கும் போன்களுக்கு மெசேச் களாக பகிரப்பட்டுவிடும்.
இதனால், ஆபாச தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை பார்த்தால் அது தொடர்பான விபரங்கள் தானாக பகிரப்பட்டு உங்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிடும்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள Crackberry forum தளம், அது தொடர்பன ஸ்கிரீன் சொட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
ஆனால் இவ் வசதியை விரும்பாவிட்டால் அதை நிறுத்திக்கொள்ளும் வசதி தரபட்டுள்ளதாக BlackBerry நிறுவன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment