யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது
. தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.
இத்திரைப்படத்தின் பாடல்களை அருப்புக்கோட்டை தவசிமணி - மொரப்பூர் ஓவியன் - அந்தியூர் நித்யா ஆகியோர் எழுத, கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்தே போன எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
ஆனால் எந்த நிறுவனமும் திருமதி தமிழ் திரைப்படத்தின் இசை உரிமையை வாங்க முன்வரவில்லையாம். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, "திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்," என்றார் ஆதங்கத்துடன்.
அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது!)
திருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது. எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது," என்றார். பிதாவே, தாம் செய்வது என்னவென்று தெரியாமல் இவர்கள் செய்யும் பாவங்களை மன்னியும்!

No comments:
Post a Comment