என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, April 19, 2013

விக்ரமின் டாப் 10 படங்கள் - ஒரு பார்வை

ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால் அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான். கிட்டத்தட்ட அனைத்து இயக்குநர்களிடமும் நடித்துள்ளார். ஆனால் விக்ரமிடம் உள்ள ஒரு பாலிசி புது இயக்குநர்களை மிரள வைக்கிறது. குறைந்தது மூன்று படமாவது இயக்கியவர்களுக்கே தனது கால்ஷீட் என்கிறார். விக்ரம் இதுவரை நடித்த படங்களில் முதன்மையான பத்துப் படங்கள் பற்றிய ஒரு பார்வை இது...


சேது பாலா இயக்கிய முதல் படம். ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது.


தில் தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் விக்ரமை சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டியது. அளவான நடிப்பு, அழுத்தமான சண்டை, அதிரடியான திருப்பங்கள் என விக்ரமுக்கு புதிய பரிமாணம் கொடுத்த படம் இது.

காசி பார்வையற்ற இளைஞர் வேடத்தில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், அதற்கெல்லாம் உச்சமாக அமைந்தது விக்ரம் நடித்து, வினயன் இயக்கியிருந்த காசி. விக்ரம் என்ற நடிகனைத் தாண்டி நிஜமான பார்வையற்ற இளைஞன் காசிதான் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரிந்தனர்
.

தூள் விக்ரமின் எவர்கிரீன் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு. எந்த கேள்வியும் கேட்கவிடாமல் பரபரவென ஓடிய இதன் திரைக் கதைக்கு உயிர் கொடுத்தவர் விக்ரம். நல்ல வசூலுடன் வெள்ளி விழா கண்ட படம் இது.

சாமி போலீஸ் கதையை மையமாக வைத்து வந்த படங்களில் சாமிக்கு தனி இடம் உண்டு. 'போலீஸ்னா இப்படித்தான்டா இருக்கணும்!' என்று சொல்ல வைத்த படம். வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஜெமினி விக்ரமின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திய படம் இந்த ஜெமினி. சரண் இயக்கியிருந்தார். ஏவி எம் நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்க உத்வேகமாக அமைந்தது இந்த ஜெமினி. இந்தப் படம் வெளியான பிறகு ரொம்ப நாளைக்கு விக்ரமும் ரசிகர்களும் ஓ போடு என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

பிதா மகன் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த இரண்டாவது படம் பிதாமகன். விக்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது இந்தப் படம். உடன் நடித்த சூர்யாவுக்கு இந்தப் படம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

அந்நியன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த முதல் படம் இது. அன்றைய நாளில் மிகப் பெரிய பட்ஜெட். ஐடிபிஐ வங்கியின் நிதியுதவியோடு இந்தப் படத்தை எடுத்திருந்தனர். தமிழில் ஆரம்பத்தில் சராசரியாகப் போன இந்தப் படம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.

ராவணன் மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் விக்ரமின் பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தாலும், நடிப்பில் அசத்தியிருந்தார்.

தெய்வத் திருமகள் இயக்குநர் விஜய்யும் விக்ரமும் கைகோர்த்த முதல் படம் இது. ஆட்டிசம் பாதித்தவராக விக்ரம் நடித்திருந்தார். ஐ யாம் சாம் படத்தின் தழுவல் என்று விமர்சிக்கப்பட்டாலும், விக்ரம் மற்றும் பேபி சாராவுக்காக குடும்பத்தோடு போய் பார்த்து கண்ணீர் விட்டு திரும்பினார்கள் தமிழ் ரசிகர்கள்.

ஐ கடந்த ஆண்டு விக்ரம் நடித்த இரண்டு படங்கள் ராஜபாட்டை, தாண்டவம் மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வந்த டேவிட் இரண்டுமே தோல்வியைத் தழுவின. இதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இப்போது ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்காக உழைத்து வருகிறார் விக்ரம்!

உலகின் 100 பிரபலங்கள்... ப.சிதம்பரம், அமீர்கான், மலாலா, மிஷேல் ஒபாமா, போப்

டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஒபாமா 8 வது இடம் டைம் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிபர் ஒபாமாவிற்கு 8 வது கொ உடன் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இந்த முறை இடம் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் மலாலா பெண்களின் கல்விக்காக போரடி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த மலாலாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஜெனிபர் லாரன்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் ஜெய் ஜீ Jay-Z, ஆஸ்கார் விருது வென்ற ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் இலான் முஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் மனைவி அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எட்டாவது இடம் இடம் கொடுத்த டைம் பத்திரிகை அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இந்த லிஸ்ட்டில் இணைத்துள்ளது.

போப் ஆண்டவரும் லிஸ்டில் போப்பாண்டவர், பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், ஆகியோரும் முக்கிய நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் ஆவர்.

ப.சிதம்பரத்தின் சாதனை பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்ற கண்ணோட்டம் மட்டுமே நிலவுகிறது. ஆனால் 67 வயதான ப.சிதம்பரம் தனது அலுவலகத்தில் நேர மேலாண்மையை திறம் பட அறிமுகப்படுத்தியுள்ளார் என்று டைம் இதழ் புகழ்ந்துள்ளது. இதற்காகவே 100 பேர் பட்டியலில் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார்


.

அமீர்கானுக்கு சிறப்பு தொலைக்காட்சியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிதான் அவரது பல்வேறு புகழுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இதுவே நூறு பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது
.

அமீர்கான் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் அமீர்கான் குறித்து ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்தையும் டைம் இதழ் வெளியிட்டுள்ளது. நல்ல சமூக அக்கறையுள்ள படங்களை கொடுப்பதில் அமீர்கானுக்கு இணையாக இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அவருடை தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜெயதே' மக்களிடம் மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Thursday, April 18, 2013

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்


கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.
இவ்வகையான சம்பவங்கள் இணையப் பாவனையின் போது அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு கணனிப் பாவனையாளர்களை அறியாமல் அவர்களது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடுடைய (ஆபாசமான) வீடியோ கோப்புக்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கான் மூலமாக கண்டறிந்து அவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Media Detective எனும் மென்பொருள் உதவுகின்றது.
எனினும் இம்மென்பொருளானது குறித்த கோப்பு வகைகள், அவற்றின் பெயர்கள், போன்றவற்றின் அடிப்படையிலேயே இச்செயன்முறையை மேற்கொள்ளுகின்றது.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் - புதிய தகவல்

உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவும்
உலகநாடுகளும் விடுதலைபுலிகளுக்கு ஏன் இன்னும் தடை விதிக்கிறார்கள் என்ற
கேள்விக்கு எதிரிகளுக்கு அதிர்ச்சியும் , சிங்க தமிழர்களாகிய எங்களுக்கு
மகிழ்ச்சியும் தந்த விடை ஒன்று கிடைத்திருக்கிறது. தலைவருடன் பாதுகாப்பு
பணியில் இருக்கிற சின்ன ரூபனின் உறவினர்கள் தமிழகத்தில் உள்ள தலைவர்களுக்கு
கொடுத்த செய்தியில் இந்த தகவலை கொடுத்துவிட்டு மின்னல்போல
சென்றிருகிறார்கள் என்ற அளவற்ற மகிச்சி செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள
பேராவல் படுகிறேன்....!


Tuesday, April 16, 2013

சினிமாவில் நண்பர்களை சம்பாதிப்பது தான் ரொம்ப கஷ்டம் : ‘555’ ஆடியோ பங்ஷனில் தனுஷ்!


சினிமாவில் நண்பர்களை சம்பாதிப்பது தான் ரொம்ப கஷ்டம் : ‘555’ ஆடியோ பங்ஷனில் தனுஷ்!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்டர் சசி 555 என்ற படத்தின் மூலம் கமர்ஷியல் ஏரியாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் டைரக்டர் ஷங்கர் படத்தின் ஆடியோ சிடியை வெளியிட நடிகர் ஷங்கர் தனுஷ் பெற்றுக்கொண்டார்.

Sunday, April 14, 2013

இரண்டே நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்த எதிர்நீச்சல் படத்தின் புதிய தியேட்டர் ட்ரைலர்

இரண்டே நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்த எதிர்நீச்சல் படத்தின் புதிய தியேட்டர் ட்ரைலர்








Friday, April 12, 2013

Windows 8 க்கான VLC மீடியா பிளேயர்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ள பல வாசகர்கள், அதில் டிவிடி படங்களை இயக்கவுள்ள சாப்ட்வேர் புரோகிராம் எந்த போல்டரில் இருக்கிறது. அதனை எப்படி இயக்குவது? எனக் கேள்விகள் கொண்ட கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதற்கான பதிலை இங்கு தருகிறேன்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், வீடியோ பிளேயர் சாப்ட்வேர் இணைத்துத் தரப்படவில்லை. சென்ற ஆண்டில், தன் இணைய தள வெளியீடு ஒன்றில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கான காரணத்தை வெளியிட்டது.

ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி ஆஜர்

ஐதராபாத்:தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும் கவலை கொண்டனர்.நடிகை அஞ்சலி நிலை குறித்து, ஐதராபாத்தில் இருக்கும், அவரது அண்ணன் ரவிசங்கர், நேற்று மதியம் தெரிவித்ததாவது:அஞ்சலி விவகாரத்தில், எங்கள் குடும்பத்தினருடன் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. சித்தி பாரதி தேவி, இயக்குனர் களஞ்சியத்துடன் இருக்கும் பிரச்னைகள், சுமுகமாக பேசி முடிக்கப்பட்டால், அஞ்சலியின் பிரச்னை முடிவிற்கு வரும்.


Thursday, April 11, 2013

சாதியை பற்றிய பிரகாஷ்ராஜின் பேச்சு- (விடியோ இணைப்பு )


சாதி'ங்கிறது ஒரு ஊரைத்தாண்டி, மக்களைத் தாண்டி இப்போ இன்டெர்நெட் வரைக்கும் வந்துடுச்சி’ என்று கூறினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
'தோனி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கும் புதிய படம் தான் ’கெளரவம்’. அவருடைய கம்பெனி டைரக்டரான ராதாமோகன் டைரக்ட் செய்திருக்கும் இந்தப்படத்தில் முதல் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான அல்லு சிரிஸ். ‘விக்கி டோனர்' புகழ் யாமினி குப்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வருகிற 19-ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் - ராஜகுமாரன்

யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது


. தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.

Wednesday, April 10, 2013

உண்மைய சொன்ன ராஜபக்ச- 30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்


தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!


ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலா

வடிவேலுவின் உருக்கமான பேட்டி - காமெடியனா விஜயகாந்த்கிட்ட தோத்துட்டேன்


திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்!
சொகமா?
”நல்லா இருக்கேண்ணே… நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா… ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).”
ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?
”ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக்கவனிச்சுக் கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்.”

1500 கோடி பேர் பார்த்த முதலிடத்தை பிடித்த கங்னம் ஸ்டைல் உலக சாதனை


யூட்யூப்பில் கண்ணாபின்னாவென பிரபலம் அடைந்த கொரியன் 'கொலவெறி' வீடியோ தான் இந்த "கங்னம் ஸ்டைல்".
இன்று அது ஒரு பில்லியன் இலக்கை கடந்தது. அதாவது 1,511,820,175 பேர் அந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளனர். இதுவரை எந்த வீடியோவும் இந்த இலக்கை தொட்டதேயில்லை.
உதாரணத்துக்கு நம்ம தனுஷின் கொலவெறி டீ வீடியோவை ரிலீஸான அன்றிலிருத்து இன்னிக்கு வரையான சுமார் ஒரு வருட காலத்தில் 6 கோடி பேர் பார்த்திருக்காங்க. ஆனா இந்த கங்னம் ஸ்டைல் வீடியோ 5 மாசத்துல இந்த 100 கோடி சாதனையை அடைஞ்சிருக்கு. அதுல ஆடுன Psy என்ற கொரியன் நடிகர் இப்போ அமெரிக்காவிலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஏகப்பட்ட சொத்துக்களை அங்கே வாங்கிக் குவிக்கிறார்.
இதுவரை பார்க்கலேன்னா, அப்படி என்னதான் இருக்கு இந்த வீடியோவுலன்னு நீங்களும் பார்த்து குழம்புங்க..ஆனா என்னன்னே புரியாம மறுபடி மறுபடி பார்க்க ஆரம்பிச்சிடுவீங்க..அந்த அளவுக்கு addicting. 
இங்கே.

ரஜினியவே விடல தனுஷை விடுவோமா -அன்புமணி ராமதாஸ்.


தனுஷ் நடிக்கும் மரியான் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இருப்பதாகவும், இது அரசின் சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாமகவின் அன்புமணி ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  ‘’ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாரத் பாலா இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'மரியான்' எனும் திரைப்படத்தின் விளம்பரம் நாளிதழ்களில் 7.4.2013 அன்று வெளியாகியுள்ளது.

'மரியான்' திரப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைபிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெறுவது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். ஆண்டுதோரும் லட்சக்கணக்கான தமது வாடிக்கையாளர்கள் இறந்துபோவதால் புதிய வாடிக்கை யாளர்களைப் பிடிக்க வேண்டியக் கட்டாயத்தில் சிகரெட், பீடி நிறுவனங்கள் உள்ளன. தனது வாடிக்கையாளரைத் தானே கொன்றுவிடுவதால் பல கோடி செலவிட்டு மறைமுக விளம்பரங்கள் மூலம் புதிய வாடிக்கையாளரைப் பிடிக்கின்றனர்.
சிறுவர்களையும், இளஞர்களையும் புகைபிடிக்கும் கொடிய பழக்கத்திற்கு அடிமையாக்க சிகரெட், பீடி நிறுவனங்கள் முயல்கின்றன. சட்டபூர்வமான விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுவிட்டதால் திரைப் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன.
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் அரசாணை 14.11.2011 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது.(இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சக அரசாணை எண்: GSR 786, நாள் 27.10.2011)
இந்த அரசாணையின் பிரிவு 9 (2) இல் திரைப்பட விளம்பரங்களில் எந்தவிதமான புகையிலைப் பொருளும் இடம்பெறக்கூடாது. புகைபிடிக்கும் காட்சிகளும் இடம்பெறக்கூடாது என விளம்பரங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் 8.3.2012 ஆம் நாளிட்ட கடிதத்தில் 'திரைப்பட விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் அனுமதிக்கப்படாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
7.12.2011 அன்று தமிழ்நாடு அரசின் 'புகையிலை எதிர்ப்புக் குழுக் கூட்டம்' கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை செயல்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இவ்வாறாக, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்கைளில் புகைபிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'மரியான்' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் 'மரியான்' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை இடம்பெறச் செய்திருப்பது அப்பட்டமான சட்டமீறல்.
இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான வகையில் விளம்பரம் செய்வதை கைவிடுமாறும், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் 'மரியான்' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தடுப்பதன் மூலம் ரஜினிகாந்த்தின் நல்ல முன்னு தாரணத்தை நடிகர் தனுஷ் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அஞ்சலி படிக்கும்போதே ஒரு பையனுடன் ஓடிவிட்டாள் : பாரதி தேவி பரபரப்பு (விடியோ)





நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். மேலும் இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்த பாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார் என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். 
இதுகுறித்து அவருடைய சித்தி பாரதி தேவி,  ‘’அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில் ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார். 
ஒரு ஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார். அக்காள் பார்வதி தேவி இரண்டாம்தாரமாக வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பெற்றார். 
இந்த நிலையில், பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஸ்ரீராம் என்ற பையனுடன் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து அவளை கண்டுபிடித்தார்கள். 
சென்னையில் வசித்து வந்த நான் ஜெகன்பேட்டைக்குப் போய் அஞ்சலியை கட்டிய பாவாடை-தாவணியுடன் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால், அஞ்சலியை என் மகள் போல் வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகை ஆக்கினேன். டைரக்டர் களஞ்சியம்தான் அவளுக்கு 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். 
அஞ்சலி முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இன்னொரு தெலுங்கு படத்திலும் சம்பளமே இல்லாமல் நடித்தாள். அந்த படமும் தோல்வி அடைந்தது. 
அவள் முதன்முதலாக சம்பளம் வாங்கியது, ஒரு கன்னட படத்தில்தான். அந்த படத்துக்காக அவளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள். அதன்பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்து, ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாள். 


தமிழில் அறிமுகமான ‘கற்றது தமிழ்‘ படத்துக்கு சம்பளம் கிடையாது. ‘ஆயுதம் செய்வோம்‘ என்ற படத்துக்காக ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார்கள். ‘கருங்காலி’ படத்தில், ரூ.8 லட்சம் சம்பளம். ‘சேட்டை’ படத்துக்குத்தான் பெரிய சம்பளம் வாங்கினாள். அந்த படத்துக்காக ரூ.20 லட்சம் கொடுத்தார்கள். 
அவள் சம்பாதித்த பணத்தை கொண்டு அவள் பெயருக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். இதற்கிடையில், அஞ்சலி எத்தனை முறை வீட்டை விட்டு ஓடிப்போனாள் என்பது எனக்குத்தான் தெரியும். 
ஒருமுறை என்னை வீட்டில் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பரத்ஷா என்ற கன்னட டைரக்டருடன் அஞ்சலி ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து, கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று, பெங்களூர் பஸ்சில் இருந்த அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு நட்சத்திர நடிகையாக அவளை கொண்டு வந்தேன். அதற்கு பரிசாக, என்னை சித்தி என்று சொல்லி விட்டாள்’’என்று கூறினார்.

Tuesday, April 9, 2013

நீங்க பஸுன்ன நாங்க வேன்ல கற்பழிப்போம்- பிரேசில்


அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் தங்கி போர்ச்சுக்கல் மொழி படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் தனது உடன் படிக்கும் பிரான்ஸ் நண்பருடன் ஒரு வேனில் பயணம் செய்தார். அதில், பயணம் செய்த அனைவரும் வேனில் இருந்து இறங்கிவிட்டனர்.

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா என்பதனை கண்டுபிடிப்பது எப்படி..


mobile

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்

Monday, April 8, 2013

அஞ்சலி உயிருக்கு ஆபத்து - கதறி அழுதார்

பிரபல நடிகை அஞ்சலி, "தன் உயிருக்கு சித்தி மற்றும் இயக்குனர் ஒருவரால் ஆபத்து' என, நேற்று திடீரென கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. "கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை, வத்திக்குச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், நடிகை அஞ்சலி. தற்போது, இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில், "ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.



சினிமா, "ஷுட்டிங்'கிற்கு அஞ்சலி வரும் போது, கூட ஒரு பெண்ணும் துணைக்கு வருவார். அவரை அஞ்சலி தன் அம்மா என்று தான், சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வந்தார். ஆனால், "அவர் அம்மா இல்லை; சித்தி. சித்தியும், சினிமா இயக்குனர் களஞ்சியமும் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்' என, நேற்று காலை, பத்திரிகை நிருபர்களிடம், அலைபேசி மூலம், நடிகை அஞ்சலி பேசி அழுததால், கோலிவுட் பரபரப்பானது.



தற்போது, நடிகை அஞ்சலி, ஆந்திராவில், ஐதராபாத்தில் இருக்கிறார். அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நடிகை அஞ்சலி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில், 22 படங்களில் நடித்திருக்கிறேன். மற்ற மொழிகளை விட, தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு பிடித்திருந்தது. ஆந்திராவிலிருந்து துணைக்கு, சித்தி பாரதியை அழைத்து வந்தேன். சித்தியை, என் அம்மா என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் என் அம்மா இல்லை; சித்தி. எனக்கு நல்லது செய்வார் என நினைத்து, அவரை, என் அம்மாவாகவே பாவித்து வந்தேன். வர வர சித்தியின் போக்கு சரியில்லை. நான் படத்தில் நடித்து சம்பாதித்ததை எல்லாம், அவரே எடுத்துக் கொண்டார். என் வீட்டாரிடம் கூட பேச, என்னை அனுமதிப்பதில்லை. என் குடும்பத்தாருக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.



தமிழில், நல்ல நடிகையாக பேசப்படுகிறேன். நிஜ வாழ்க்கையில், நிறைய, வெளியே சொல்ல முடியாத துயரங்களை சந்தித்திருக்கிறேன். தற்போது, திரைப்பட இயக்குனர் களஞ்சியமும், என் சித்தியும் சேர்ந்து கொண்டு, எனக்கு துரோகம் செய்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக என்னை நினைக்கின்றனர். சித்தியின் கொடுமையை, இனியும் என்னால், பொறுத்துக் கொள்ள முடியாது.

நான் மேஜரான பெண்; என் இஷ்டத்திற்கு, என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். இனி, என் சித்திக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது. என் உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும், உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டாலும், இதற்கு என் சித்தி பாரதியும், இயக்குனர் களஞ்சியமும் தான் பொறுப்பு. இவ்வாறு, அஞ்சலி தெரிவித்துள்ளார்.





அஞ்சலி குற்றச்சாட்டு குறித்து, இயக்குனர் களஞ்சியம் கூறியதாவது: எனக்கும், அஞ்சலிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. "கருங்காலி' படத்தில் அஞ்சலி நடித்தார். அதற்கு பேசப்பட்டபடி சம்பளம் கொடுத்து விட்டேன். ஒரு நடிகை என்ற முறையில் அவரிடம் பேசியிருக்கிறேன். மற்றபடி, அவரது நடவடிக்கைகள் எதிலும், நான் தலையிட்டதில்லை. தற்போது, "ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை எடுத்து வருகிறேன். நான் நாயகனாக நடிக்கிறேன். அஞ்சலி நாயகி.

இதுவரை, 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு, வரும், 24ம் தேதியிலிருந்து, "கால்ஷீட்' கொடுத்திருக்கிறார். பேசப்பட்டபடி சம்பளமும் கொடுத்திருக்கிறேன். ஆந்திராவில், என் பட "ஷுட்டிங்' முடித்து விட்டு சந்தோஷமாகத் தான் ஐதராபாத் சென்றார். நான் அடுத்த கட்ட படப்பிடிப்பிறகு இடம் பார்த்து விட்டு, நேற்று தான் ஊர் திரும்பினேன்.

அஞ்சலி என் மீது குற்றச்சாட்டு கூறியது குறித்து, பத்திரிகை நிருபர்கள் மூலம் தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் கிடையாது. அவரது சொந்த பிரச்னையில் என்னை ஏன் இழுக்கிறார் என, தெரியவில்லை. அஞ்சலி, ஐதராபாத் சென்ற போது என்ன நடந்தது என தெரியவில்லை. என்னை குறை சொல்லியதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல், சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் மேற்கொள்வேன். இவ்வாறு, களஞ்சியம் கூறினார்.



இப்பிரச்னை குறித்து கேட்பதற்கு, ஆந்திராவிலிருக்கும், அஞ்சலியின் சித்தி பாரதியை தொடர்பு கொண்ட போது, அவரது அலைபேசிக்கு இணைப்பு கிடைக்கவில்லை.







Sunday, April 7, 2013

சூப்பர் வண்டிப்பா.. பார்கிங் பிரச்சனையே இல்ல..

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சினை சன நெருக்கடி நிறைந்த ஒரு நகரத்திற்கு வேலை நிமித்தம் சென்றால் அங்கு ஏற்படும் பார்க்கிங் பிரச்சினைதான். அதிகரித்த சனத்தொகை மற்றும் வாகனங்களின் வளர்ச்சியினால் வாகனங்களை பார்க் பண்ணக்கூடிய வசதிகள் இன்று நிலத்துக்கு கீழும் பல மாடிகளுக்கு மேலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எல்லாவற்றையும் தடுக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது புததம் புதிய மோட்டார் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.







மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த வண்டி 55 பவுண்டுகள் எடை கொண்டுள்ளது. பெட்டரியில் ஓடக்கூடிய இந்த வண்டியின் சிறப்பு அம்சம் பார்க் பண்ண தேவையில்லை கையில் மடித்து நீங்கள் எடுத்து செல்லலாம்.. என்ன வியப்பாக இருக்கிறதா? படங்களை பாருங்கள் உங்களுக்கு புரியும்..

Scanner Mouse அறிமுகம்

கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.















கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.




இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.





USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது. இதற்காக குறித்த சுட்டியுடன் தரப்பட்டுள்ள ஸ்கான் செய்வதற்கான பொத்தானை அழுத்தியதும் சுட்டி காணப்படும் மேற்பரப்பிலுள்ள எழுத்துக்கள் ஸ்கான் செய்யப்படும். இந் நவீன ரக சுட்டிகளை 79 அமெரிக்க டொலர் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.

இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை - சவுதி

சவுதி அரேபிய குடிமக்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களில் 10 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிடாகட் சட்டத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனால், அந்நாட்டில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப நேரிட்டது.





சவூதியில் இருந்து திரும்பிவரும் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவுவதற்கென்றே, கேரள அரசு, அந்நாட்டின் மூன்று சர்வதேச விமான நிலையங்களிலும், அவசர உதவி மையங்களைத் திறந்துள்ளது. இது மட்டுமின்றி, உரிய ஆவணங்களின்றி சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடித்து உடனடியாக வெளியேற்றவும் சவுதி அரசு உத்தரவிட்டது.



இந்த உத்தரவையடுத்து, பிடிபடும் நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடிந்த பின்னர், அவரவரது நாட்டு தூதரகம் மூலமாக சவுதியில் இருந்து வெளியேற்றப்படுவர்கள்.



'நிட்டாகட்' திட்டத்தின் மூலம் உரிய ஆவணங்களோடு பணியாற்றுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஒருபுறமும், கள்ளத் தனமாக தங்கியுள்ளவர்களை தண்டிக்கும் நடவடிக்கை மறுபுறமும் நடைபெற்று வருவதால் சவுதியில் தங்கியுள்ள இந்தியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.



இந்நிலையில், இவர்களை வெளியேற்றுவது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை கைவிட்டு, வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை முறைபடுத்திக் கொள்ளும் வகையில் 3 மாத கால அவகாசம் வழங்குமாறு சவுதி நாட்டின் தொழிலாளர் நலத்துறை மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோருக்கு சவுதி மன்னர் அப்துல்லா நேற்று உத்தரவிட்டார்.



சவுதி அரசின் இந்த புதிய நடவடிக்கையின் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 2 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றபட்டதாகவும் சுமார் 6 லட்சம் சவுதி குடிமக்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Saturday, April 6, 2013

இண்டர்நெட்டும் 1 - நிமிடமும்.........


இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில்.

உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன.

மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.
ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.10 476,7 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.

இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்

ஆபாச படம் பார்த்தால் அதை உறவினர்கள், நண்பர்களுக்கு உடனே அறிவிக்கும் BlackBerry Z10


BlackBerry நிற்வனம், தனக்கு என வாடிக்கையாளர் வங்கியை கொண்டுள்ளது. ஆனால் அப்பிள், சம்சுங் கலக்ஸ்ஸி என்பவற்றின் வருகையால் அது தனது வாடிக்கையாளர் மத்தியில் பின்னடைவை சந்தித்திருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க BlackBerry Z10 என்ற நவீன ஸ்மார்ட் போனை இவ் வருட ஆரம்பத்தில் வெளியிட்டது.
ஆனால் அத் தொலபேசியில் உள்ள சுவாரஸ்யமான குறைபாடு தொடர்பில் தற்போது பரபரக்கப்படுகின்றது.
BlackBerry நிறுவனம் மெசெஞ்சருக்கு பிரபல்யமானது. தம்முடைய BlackBerry பயன்படுத்தும் உறவினர்கள், நண்பர்கள் இடையே நெருக்கமான மெசேச் தொடர்புகளை இதன்மூலம் பேணமுடியும்.
BlackBerry Z10 இன் மெசெஞ்சரில், BlackBerry நிறுவனம் ”show what I’m listening to” என்ற நவீன வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
இவ் வசதியை செயற்படுத்தியிருந்தால், நீங்கள் BlackBerry Z10 இல் ஒன்லைனில் ஏதாவது பாடல்களை கேட்டாலோ, வீடியோவை பார்த்தாலோ அது தொடர்பான இணையதளத்தின் விபரம் மெசெஞ்சர் ஊடாக அதனுடன் தொடர்பில் இருக்கும் போன்களுக்கு மெசேச் களாக பகிரப்பட்டுவிடும்.
இதனால், ஆபாச தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை பார்த்தால் அது தொடர்பான விபரங்கள் தானாக பகிரப்பட்டு உங்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிடும்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள Crackberry forum தளம், அது தொடர்பன ஸ்கிரீன் சொட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
ஆனால் இவ் வசதியை விரும்பாவிட்டால் அதை நிறுத்திக்கொள்ளும் வசதி தரபட்டுள்ளதாக BlackBerry நிறுவன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது

Tuesday, April 2, 2013

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !




நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!



நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு



இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.


கற்பிழந்த இந்திய ஆர்மி !




மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.



உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !


சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !


ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு


1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Monday, April 1, 2013

மீண்டும் ஷங்கர் – ஐஸ்வர்யா காம்பினேஷனில்… உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார்!


01-rajini-aishwarya-rai-300சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு இதைவிட பெரிய செய்தி வேறொன்றுமிருக்காது… ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஷங்கரும் கைகோர்க்கிறார்கள். குழந்தைப் பெற்ற பிறகு குண்டான உடம்பை மீண்டும் ஸ்லிம்மாக்கிக் கொண்டுள்ள உலக அழகி ஐஸ்வர்யாதான் இதில் ரஜினிக்கு ஜோடி.
இந்தத் தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினியே உறுதி செய்திருப்பதுதான் ஹைலைட்!
ரஜினி, ஷங்கர் காம்பினேஷனில் இதுவரை சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்கள் வந்தன. இவை இரண்டுமே இந்திய சினிமா வர்த்தகத்தை உலக அளவுக்கு கொண்டு போய் வரலாறு படைத்தன.
எந்திரனுக்குப் பிறகு இரண்டு மூன்று படங்களை ரஜினி அறிவித்து, அதில் கோச்சடையான் மட்டும் ரிலீஸை நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அதுவும் முழுமையான படம் அல்ல. எனவே ரஜினியை பாட்ஷா, முத்து, படையப்பா மாதிரி முழுநீள ஆக்ஷன் பொழுதுபோக்குப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இதுபுரிந்த ரஜினி, தனது அடுத்த படம் எது என்பது குறித்து தீவிர யோசனையில் இருந்தார். கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ, மீண்டும் ஷங்கரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு ஜோடியாகிறார். அவருடன் மேலும் ஒரு இளம் கதாநாயகி நடிக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய ஈராஸ் நிறுவனத்தின் நிதி அலுவலர் கமல் ஜெயின், “இந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை ரஜினியே முடிவு செய்தார். கோச்சடையானுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கும். அதற்குப் பிறகுதான் ராணா,” என்றார்.
குறிப்பு: ஏங்க… ஏப்ரல் ஒண்ணாந்தேதியும் அதுவுமா எத்தனையோ பேர்கிட்ட ஏமாந்துகிட்டேதான் இருக்கீங்க… அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டுப் போகட்டுமே.. ஹிஹிஹி

கருணாநிதியைக் கலாய்த்த மணிவண்ணன்!..


இளைஞன் என்றொரு படம், அன்றைய முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ஒருமுறை கருணாநிதி தளத்துக்கு வந்திருக்கிறார்.
அப்போது தனக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடலை நேற்று இப்படி வர்ணிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.
முதல்வர் கலைஞர்: என்னய்யா மணிவண்ணன்.. என்ன ஓரமா நிக்கிற.. வாய்யா...
மணிவண்ணன்: இருக்கட்டும் தலைவரே... நான் இப்படியே நிக்கிறேன்..
கலைஞர்: (இயக்குநரைப் பார்த்து) நம்மாளுய்யா மணிவண்ணன்... ஆமா, ஏன் நொண்டி நொண்டி நடக்கிறே, என்னாச்சி..
மணிவண்ணன்: அது வந்து தலைவரே.. முதுகு தண்டுவடத்துல ஒரு எலும்பு உடைஞ்சு போச்சுங்க... அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். அதான்.
கலைஞர்: ஆக, உனக்கும் எனக்கும் ஒரே வியாதிதான்...
மணிவண்ணன்: வியாதி ஒண்ணுதானுங்க... ஆனா உங்ககிட்ட இருக்கிற பாஸ்புக் அளவுக்குகூட என்கிட்டே பணம் இல்லைங்ண்ணா!
கலைஞர்: யோவ்... இவ்ளோ வயசாகியும் உன் குசும்பு போகல பாத்தியா!!
அமைதிப்படை 2(நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,) இசை வெளியீட்டு விழாவில் மணிவண்ணன் பேசியதாகும்.
இந்தப் படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம்:
கேரக்டர் 1: நான் மகளிர் அணித் தலைவராகிடப் போறேன்.
கேரக்டர் 2: யோவ் நீ எப்படிய்யா மகளிர் அணித் தலைவராக முடியும்...
கேரக்டர் 1: ஆமா... வயசானவங்கள்லாம் இளைஞர் அணித் தலைவரா இருக்கும்போது, நான் மகளிர் அணி தலைவராக முடியாதா! இது ஒரு சாம்பிள்தான்!..