ஒரு காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. அதன்மூலமாக கட்சியை பிரபலப்படுத்திக்கொண்டனர். ஆனால் இப்போதோ கட்சி ஆரம்பித்தால் கொடி வேண்டுமோ இல்லையோ அவசியம் ஒரு டி.வி சேனல் இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியானதும் தனது அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த கேப்டன் டி.வி என்றொரு சேனலை ஆரம்பித்தார்.
அதேபோல் அடுத்தபடியாக எதிர்கால அரசியலில் அங்கம் வகிக்க இருக்கும் விஜய்யையும் ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு அவரது அரசியல் அபிமானிகள் அவசரப்படுத்தி வருகின்றனர். கட்சிக்கு பெயர் வைத்தாயிற்று, கொடியும் பிடித்தாயிற்று. அடுத்து நம்மை உலகுக்கு காண்பிக்க ஒரு டி.வி சேனல் இருந்தால்தானே மென்மேலும் வளருவோம் என்று விஜய்யை உசுப்பேத்தி வருகிறார்களாம். ஆக, இத்தனை நாளும் துப்பாக்கி பரபரப்பில் இருந்த விஜய், அடுத்தகட்ட நடவடிக்கையாக கட்சி வளர்ச்சிப்பணிக்காக சேனல் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ நம்முடைய சமூக சேவைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லவாவது ஒரு சேனல் அவசியம்தானே என்று தந்தைகுலத்திடம் ஒரு ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறாராம். இதுபோதாதா அரசியல் அடிபொடிகளுக்கு, அப்படின்னா நம்ம சேனலுக்கு இளையதளபதின்னு பேரு வச்சிருவோம் என்று இப்போதே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டனராம்

No comments:
Post a Comment