என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, December 3, 2012

12–ந் தேதி வெளிவருகிறது ‘‘சிவாஜி 3டி படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசு



‘‘சிவாஜி 3டி படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக வருகிற 12–ந் தேதி வெளிவருகிறது’’ என்று ரஜினிகாந்த் கூறினார்.
‘சிவாஜி 3டி’ படம்
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வெளிவந்த படம், ‘சிவாஜி.’ இந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் சேர்ந்து, பல கோடி ரூபாய் செலவில், ‘3டி டால்பி அட்மோஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.டால்பி அட்மோஸ் ஒலியுடன் வெளியாகும் இந்தியாவின் முதல் படம் இது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12–12–2012 அன்று படம் வெளிவர இருக்கிறது.
ரஜினிகாந்த் பேச்சு
‘சிவாஜி 3டி’ படத்தின் 2 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை சென்னை சத்யம் தியேட்டரில், நிருபர்களுக்காக நேற்று இரவு திரையிட்டு காண்பித்தார்கள். முன்னதாக, வீடியோவில் ரஜினிகாந்த் பேசிய காட்சி திரையிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:–‘‘நான் இப்போது ஊரில் இல்லை. வெளியூரில் இருக்கிறேன். ‘சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது.
3 படங்களின் செலவு
இப்போது அந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் இணைந்து மூன்று மடங்கு செலவு செய்து 3டி படமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த செலவில், 3 புதிய படங்களே எடுத்து விடலாம்.‘சிவாஜி 3டி’ படத்தை நான் பார்த்தேன். பிரமாதமாக இருக்கிறது. இதை என் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அளிக்கிறது. அதற்காக, ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’’இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோ படத்தில் பேசியிருக்கிறார்.
ஏவி.எம்.சரவணன்
சத்யம் தியேட்டரில் நேற்று இரவு நடந்த ‘சிவாஜி 3டி’ பட நிகழ்ச்சியில், பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன், டைரக்டர் ஷங்கர், ஒளிப்பதிவாளர்–டைரக்டர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் சுமன், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், ஜெயந்த்ரா, பிரசாத் லேப் சாய் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment