இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் வருகிற 12.12.12 அன்று வருவதாலும், இதன் கூட்டுத் தொகை 9 என்பதாலும், ரஜினி மருத்துவ சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்திருப்பதாலும் இந்த பிறந்நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ரஜினியின் பாடல்களை கொண்ட இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ரஜினி இசை ஆல்பம் வெளியிடுகிறார். ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டராக அலெக்ஸ் பாண்டியன் பெயரைக் கொண்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழா அன்று நடக்கிறது. ரஜினி ரசிகர் ஒருவர் தயாரித்துள்ள பயபுள்ள என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் ரஜினி பிறந்த நாள் அன்று நடக்கிறது. இந்தப் படத்தின் பாடல் சிடியோடு ரஜினியின் புகழ்பாடும் பாடல் சிடி ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூன்று நாட்களுக்கு ரஜினியின் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கிறது. இப்படி ரஜினியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இது மற்ற ஹீரோக்கள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பத்திரிகையிலிருந்து சிலர் ஒரு பெரிய நடிகரை சந்தித்து ரஜினிக்கு பிறந்த நாள் மலர் போடுகிறோம். கட்டுரை எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். கடுப்பான அந்த உயரமான ஹீரோ "ஏன் நாங்கள்லாம் பொறக்கலையா... அவர் மட்டுந்தான் பொறந்துருக்காரா... கமல் பிறந்த நாள் வந்துச்சே அதுக்கு மலர் போடலையா" என்று வந்தவர்களை காய்ச்சி எடுத்துட்டாராம். இதே மனநிலையில்தான் எல்லோ ஹீரோக்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment