01.12.2012 முதல் புதிய முறை அமல்: அடையாள அட்டை இல்லாத பயணிக்கு 2 மடங்கு அபராதம்
அனைத்து முன்பதிவு பயணிகளும் நாளை முதல் பயணத்தின்போது அடையாள அட்டை கொ...
ண்டு செல்ல வேண்டும் என புதிய முறை அமலுக்கு வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
ரெயில்களில், உயர் வகுப்பு முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் தற்போது அடையாள அட்டை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. 2-ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரெயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொத்தம் பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
ஏ.சி உயர் வகுப்பு பயணிகள், முதல் வகுப்பு பயணிகள், 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை முன்பதிவு பயணிகள் அனைவரும் பயணத்தின் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நாளை (டிசம்பர் 1-ந்தேதி) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் இடைத்தரகர்களின் ‘தில்லு முல்லு’ முற்றிலும் ஒழியும். முறையாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே துறை நம்புகிறது.
நாளை முதல் முன்பதிவு பயணிகள் புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு, பான் கார்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை போன்றவற்றை பயணிகள் அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.
ஒரு டிக்கெட்டில் 5 அல்லது 6 பேர் மொத்தமாக பயணம் செய்தால் அதில் யாராவது ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் அடையாள அட்டை இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும்.
பயணம் செய்யும் டிக்கெடின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இருமடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.
ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே ரெயில் பயணிகள் நாளை முதல் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதத்தை சந்திக்க வேண்டும். அபராத தொகை செலுத்த முடியாதவர்கள் மீது ரெயில்வே போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது

No comments:
Post a Comment