என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, December 3, 2012

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு-1



இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும்அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன. முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

12–ந் தேதி வெளிவருகிறது ‘‘சிவாஜி 3டி படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசு



‘‘சிவாஜி 3டி படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக வருகிற 12–ந் தேதி வெளிவருகிறது’’ என்று ரஜினிகாந்த் கூறினார்.
‘சிவாஜி 3டி’ படம்
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வெளிவந்த படம், ‘சிவாஜி.’ இந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் சேர்ந்து, பல கோடி ரூபாய் செலவில், ‘3டி டால்பி அட்மோஸ்’ என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.டால்பி அட்மோஸ் ஒலியுடன் வெளியாகும் இந்தியாவின் முதல் படம் இது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12–12–2012 அன்று படம் வெளிவர இருக்கிறது.
ரஜினிகாந்த் பேச்சு
‘சிவாஜி 3டி’ படத்தின் 2 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை சென்னை சத்யம் தியேட்டரில், நிருபர்களுக்காக நேற்று இரவு திரையிட்டு காண்பித்தார்கள். முன்னதாக, வீடியோவில் ரஜினிகாந்த் பேசிய காட்சி திரையிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:–‘‘நான் இப்போது ஊரில் இல்லை. வெளியூரில் இருக்கிறேன். ‘சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது.
3 படங்களின் செலவு
இப்போது அந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் இணைந்து மூன்று மடங்கு செலவு செய்து 3டி படமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த செலவில், 3 புதிய படங்களே எடுத்து விடலாம்.‘சிவாஜி 3டி’ படத்தை நான் பார்த்தேன். பிரமாதமாக இருக்கிறது. இதை என் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அளிக்கிறது. அதற்காக, ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’’இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோ படத்தில் பேசியிருக்கிறார்.
ஏவி.எம்.சரவணன்
சத்யம் தியேட்டரில் நேற்று இரவு நடந்த ‘சிவாஜி 3டி’ பட நிகழ்ச்சியில், பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன், டைரக்டர் ஷங்கர், ஒளிப்பதிவாளர்–டைரக்டர் கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் சுமன், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், ஜெயந்த்ரா, பிரசாத் லேப் சாய் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - விமர்சனம்

Cinema Group History

நடிகர்கள்: 
விஜய் சேதுபதி–காயத்ரி
இசை:   வேத்சங்கர்
 ஒளிப்பதிவு: பிரேம்குமார்
இயக்கம்:   பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு:   வி.எஸ்.ராஜ்குமார்



கதையின் கரு: தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்த இளைஞன்.
விஜய் சேதுபதி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். நான்கு பேரும் கிரிக்கெட் விளையாடும்போது, விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. அதில், அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு வருட நினைவுகளை இழந்து விடுகிறார். அதில், அவருடைய காதலி காயத்ரியுடனான காதல் மற்றும் திருமண ஏற்பாடுகள் முக்கியமானவை. விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டதும், அவர் இரண்டு வருட நினைவுகளை இழந்ததும் பெண் வீட்டாருக்கு தெரிந்தால், நடைபெற இருக்கும் காதல்–கலப்பு திருமணம் நின்று விடும். அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் மூன்று பேரும் மறைக்கிறார்கள்.
நண்பர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, விஜய் சேதுபதிக்கு நினைவு திரும்பியதா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’
வித்தியாசமான நகைச்சுவை படம்.
தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்த விஜய் சேதுபதியின் முகபாவனைகளும், நடிப்பும் சிரிக்க வைக்கிறது. ‘‘என்ன ஆச்சு? கிரிக்கெட் ஆடினோம். நீதான் அடிச்சே. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். தடுமாறி கீழே விழுந்தேன். இங்கதான் அடிபட்டது. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்’’ என்று அவர் நண்பர்களிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது, சூப்பர் காமெடி. அவரை நண்பர்கள் மூன்று பேரும் மனநல மருத்துவரிடம் அழைத்துப் போவதும், சமாதானப்படுத்தி மணமேடை வரை கொண்டு செல்வதும், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகள். காதலி சம்பந்தப்பட்ட நினைவுகளை அடியோடு மறந்து, மணமேடையில் தன் அருகில் நிற்கும் காயத்ரியை பார்த்து, ‘‘இந்த பொண்ணு யாரு?’’ என்று விஜய் சேதுபதி கேட்கும் இடத்தில், தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகுநேரமாகிறது.
காயத்ரிக்கு ஒப்பனை அதிகமாக இருப்பதை பார்த்து, ‘‘பேய் மாதிரி இருக்கு’’விஜய் சேதுபதி சொல்வது; அதைக்கேட்டு காயத்ரி விம்மி அழுவது; ‘‘டேய், நான் என்ன சொன்னாலும் கேட்பாய் இல்லையா?’’ என்று விஜய் சேதுபதியிடம் நண்பர் கேட்க– ‘‘நீ சொன்னா இந்த கட்டிடத்தில் இருந்து கூட குதிப்பேன்டா’’ என்று விஜய் சேதுபதி சொல்வது; அதைப்பயன்படுத்தி அவரை நண்பர் கட்டுப்படுத்துவது என நிமிடத்துக்கு நிமிடம் படத்தில், காமெடி ரகளை.
விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட பாதிப்பை பெண் வீட்டாரிடம் மறைப்பது சரி. அவர் பெற்றோர்களிடம் கூட சொல்லாமல், மூடி மறைப்பது ஏன்? என்ற கேள்விக்கு, படத்தில் பதில் இல்லை.
வேத்சங்கரின் பின்னணி இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கதையை வேகமாக நகர்த்தி செல்லும் அம்சங்கள். ஒரு வீடு, ஆஸ்பத்திரி, கல்யாண மண்டபம் ஆகிய மூன்று அரங்குக்குள் முழு கதையும் சொல்லப்படுகிறது. திரைக்கதை பலமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தால், சிக்கனமாக படம் எடுத்து ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார், டைரக்டர் பாலாஜி தரணிதரன்

Saturday, December 1, 2012

அடையாள அட்டை இல்லாத பயணிக்கு 2 மடங்கு அபராதம்

நாளை முதல் புதிய முறை அமல்: அடையாள அட்டை இல்லாத பயணிக்கு 2 மடங்கு அபராதம் சென்னை, நவ. 30-   அனைத்து முன்பதிவு பயணிகளும் நாளை முதல் பயணத்தின்போது அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என புதிய முறை அமலுக்கு வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.   ரெயில்களில், உயர் வகுப்பு முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் தற்போது அடையாள அட்டை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. 2-ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.   ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரெயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொத்தம் பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.   சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.   ஏ.சி உயர் வகுப்பு பயணிகள், முதல் வகுப்பு பயணிகள், 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை முன்பதிவு பயணிகள் அனைவரும் பயணத்தின் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நாளை (டிசம்பர் 1-ந்தேதி) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.   இதன் மூலம் இடைத்தரகர்களின் ‘தில்லு முல்லு’ முற்றிலும் ஒழியும். முறையாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே துறை நம்புகிறது.   நாளை முதல் முன்பதிவு பயணிகள் புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு, பான் கார்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை போன்றவற்றை பயணிகள் அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.   ஒரு டிக்கெட்டில் 5 அல்லது 6 பேர் மொத்தமாக பயணம் செய்தால் அதில் யாராவது ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் அடையாள அட்டை இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.   டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும்.   பயணம் செய்யும் டிக்கெடின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இருமடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.   ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.   எனவே ரெயில் பயணிகள் நாளை முதல் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதத்தை சந்திக்க வேண்டும். அபராத தொகை செலுத்த முடியாதவர்கள் மீது ரெயில்வே போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.  Source: http://www.maalaimalar.com/2012/11/30115320/new-method-implementation-dont.html


01.12.2012  முதல் புதிய முறை அமல்: அடையாள அட்டை இல்லாத பயணிக்கு 2 மடங்கு அபராதம்


அனைத்து முன்பதிவு பயணிகளும் நாளை முதல் பயணத்தின்போது அடையாள அட்டை கொ...
ண்டு செல்ல வேண்டும் என புதிய முறை அமலுக்கு வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

ரெயில்களில், உயர் வகுப்பு முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் தற்போது அடையாள அட்டை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. 2-ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரெயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொத்தம் பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.

சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

ஏ.சி உயர் வகுப்பு பயணிகள், முதல் வகுப்பு பயணிகள், 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை முன்பதிவு பயணிகள் அனைவரும் பயணத்தின் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நாளை (டிசம்பர் 1-ந்தேதி) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் இடைத்தரகர்களின் ‘தில்லு முல்லு’ முற்றிலும் ஒழியும். முறையாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று ரெயில்வே துறை நம்புகிறது.

நாளை முதல் முன்பதிவு பயணிகள் புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு, பான் கார்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை போன்றவற்றை பயணிகள் அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.

ஒரு டிக்கெட்டில் 5 அல்லது 6 பேர் மொத்தமாக பயணம் செய்தால் அதில் யாராவது ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் அடையாள அட்டை இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது இல்லை.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும்.

பயணம் செய்யும் டிக்கெடின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இருமடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.

ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே ரெயில் பயணிகள் நாளை முதல் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதத்தை சந்திக்க வேண்டும். அபராத தொகை செலுத்த முடியாதவர்கள் மீது ரெயில்வே போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது

ரஜினி பிறந்த நாள் 12.12.12

Cine Gossipsஇந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் வருகிற 12.12.12 அன்று வருவதாலும், இதன் கூட்டுத் தொகை 9 என்பதாலும், ரஜினி மருத்துவ சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்திருப்பதாலும் இந்த பிறந்நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ரஜினியின் பாடல்களை கொண்ட இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ரஜினி இசை ஆல்பம் வெளியிடுகிறார். ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டராக அலெக்ஸ் பாண்டியன் பெயரைக் கொண்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழா அன்று நடக்கிறது. ரஜினி ரசிகர் ஒருவர் தயாரித்துள்ள பயபுள்ள என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் ரஜினி பிறந்த நாள் அன்று நடக்கிறது. இந்தப் படத்தின் பாடல் சிடியோடு ரஜினியின் புகழ்பாடும் பாடல் சிடி ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொலைக்காட்சிகள் மூன்று நாட்களுக்கு ரஜினியின் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கிறது. இப்படி ரஜினியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இது மற்ற ஹீரோக்கள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பத்திரிகையிலிருந்து சிலர் ஒரு பெரிய நடிகரை சந்தித்து ரஜினிக்கு பிறந்த நாள் மலர் போடுகிறோம். கட்டுரை எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். கடுப்பான அந்த உயரமான ஹீரோ "ஏன் நாங்கள்லாம் பொறக்கலையா... அவர் மட்டுந்தான் பொறந்துருக்காரா... கமல் பிறந்த நாள் வந்துச்சே அதுக்கு மலர் போடலையா" என்று வந்தவர்களை காய்ச்சி எடுத்துட்டாராம். இதே மனநிலையில்தான் எல்லோ ஹீரோக்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிம் கார்டு பெறுவது இனிமேல் எளிதல்ல

 
தெருவின் முனைகளில்  குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.

உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும்.
நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.

மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும்.

தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன.மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.

விஜய் சேனல் உதயமாகிறது

Cine gossips: Vijay to start new channelஒரு காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும ஒவ்வொருவருக்கும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. அதன்மூலமாக கட்சியை பிரபலப்படுத்திக்கொண்டனர். ஆனால் இப்போதோ கட்சி ஆரம்பித்தால் கொடி வேண்டுமோ இல்லையோ அவசியம் ஒரு டி.வி சேனல் இருந்தாக வேண்டும் என்றாகி விட்டது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியானதும் தனது அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த கேப்டன் டி.வி என்றொரு சேனலை ஆரம்பித்தார்.

அதேபோல் அடுத்தபடியாக எதிர்கால அரசியலில் அங்கம் வகிக்க இருக்கும் விஜய்யையும் ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு அவரது அரசியல் அபிமானிகள் அவசரப்படுத்தி வருகின்றனர். கட்சிக்கு பெயர் வைத்தாயிற்று, கொடியும் பிடித்தாயிற்று. அடுத்து நம்மை உலகுக்கு காண்பிக்க ஒரு டி.வி சேனல் இருந்தால்தானே மென்மேலும் வளருவோம் என்று விஜய்யை உசுப்பேத்தி வருகிறார்களாம். ஆக, இத்தனை நாளும் துப்பாக்கி பரபரப்பில் இருந்த விஜய், அடுத்தகட்ட நடவடிக்கையாக கட்சி வளர்ச்சிப்பணிக்காக சேனல் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ நம்முடைய சமூக சேவைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லவாவது ஒரு சேனல் அவசியம்தானே என்று தந்தைகுலத்திடம் ஒரு ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறாராம். இதுபோதாதா அரசியல் அடிபொடிகளுக்கு, அப்படின்னா நம்ம சேனலுக்கு இளையதளபதின்னு பேரு வச்சிருவோம் என்று இப்போதே ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டனராம்

கம்ப்யூட்டருக்குப் புதியவரா!


பல்வேறு  அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கிடையே பயணம் செய்து தேவையான புரோகிராம்களில் கிளிக் செய்து திறக்கிறீர்கள். இதில் என்ன சிக்கல் என்றால் ஆல்ட் + டேப் அழுத்துகையில் அது இடது புறத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும். பின்னால் வராது. எடுத்துக் காட்டாக ஏழு புரோகிராம்களைத் திறந்திருக்கிறீர்கள். முதலாவதாக வேர்ட். அதனை அடுத்து இரண்டாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஐகான் உள்ளது. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சென்று விட்டால் மீண்டும் வேர்ட் வர அனைத்து புரோகிராம்களின் மீதும் தாவித்தான் வர முடியும். ஆனால் பேக் டிரைவிங் செல்ல ஒரு வழியும் உள்ளது. ஆல்ட் + டேப் கீகளுடன் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். உங்கள் கர்சர் பின் நோக்கி அடுத்தடுத்த ஐகான்களுக்குச் செல்லும். தேவையான புரோகிராம் கிடைக்கையில் நிறுத்தி அதனைத் திறக்கலாம்.

யூசர் இன்டர்பேஸ்
யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப்படையில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணைக்கும் வேலையை அறிமுக அடிப்படையில் செயல்படுவதே யூசர் இன்டர்பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட்ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல்லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்களுக்கு ஒரு லைட் ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர்பேஸ்.
பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன்படுத்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படியிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகிராமுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.

ரீசைக்கிள் பின்
பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.


விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10

அனைவரும்  எதிர்பார்த்தபடி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர் பதிப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கென வடிவமைத்து, அதன் வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை (IE10 Release Preview) நவம்பர் 13ல் வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மட்டும் தான். விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இணைந்தே தரப்படுகிறது. விஸ்டா மற்றும் முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இயங்காது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் வெளியான போது, அதன் இயக்கத்தினை, விஸ்டா மற்றும் எக்ஸ்பியிலிருந்து மைக்ரோசாப்ட் தள்ளியே வைத்தது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என அறிவித்த நிறுவனம் மைக்ரோசாப்ட் ஒன்றுதான்.
வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு எனத் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பினை மைக்ரோசாப்ட் அழைப்பதால், இந்த
பிரவுசரைப் பொறுத்தவரை, முழுமையான இறுதி வடிவத்தினை மைக்ரோசாப்ட் அமைத்துவிட்டது என்றே எதிர்பார்க்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்ட இ.எ. 9, ஒரு மாத கால அளவில், 2011 மார்ச் 14ல் வெளியானது. அதே போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இந்த ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் சிறப்பான, தொட்டு இயக்கும் வசதி, நிச்சயம் விண்டோஸ் 7க்கான பதிப்பில் கிடைக்காது. ஆனால், அதிகம் பேசப்படும் “Do Not Track” என்னும் தனிநபர் செல்லும் இணைய தளங்களைக் கணக்கெடுத்துப் பதியாத வசதி இதிலும் இணைந்தே கிடைக்கிறது. முதன் முதலில் இந்த பிரவுசரை இயக்குகையில், திரை ஒன்று காட்டப்பட்டு, இந்த வசதி தேவை இல்லாதவர்கள், தாங்கள் செல்லும் தளங்களைக் கண்டு கொண்டு பட்டியலிடும் வசதியை வேண்டுபவர்கள், அதற்கான தேர்வினை அமைக்க ஆப்ஷன் தரப்படுகிறது.
ஏற்கனவே, இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிடுபவர்கள், இந்த “Do Not Track” வசதி பிரவுசரில் இணைந்தே தரப்படுவதனை வர்த்தக ரீதியாக எதிர்த்தனர். இப்போதும் விண்டோஸ் 7 தொகுப்பான பிரவுசரிலும் இந்த வசதி தரப்படுவதால், எதிர்ப்பு வலுக்கலாம்.
தற்போது விண்டோஸ் 7, பன்னாட்டளவில் 45% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் தானாகவே அப்கிரேட் செய்யப்படும் வசதியின் மூலம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10க்கு மாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு மாறுகையில் “Do Not Track” வசதி தானாகவே இவர்களுக்குக் கிடைக்கும்.
இந்த வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், http://windows.microsoft.com/enUS/internetexplorer/downloadie என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளத்தை நாடலாம்.

ஆட்டுக்கறி அசைவம்; ஆடு கறி சாப்பிட்டா அது சைவமா




எங்க  ஏரியாவுல ஒரு  ஆடு, லெக் பீஸ் சாப்பிடுதுங்கோ!,''தகவல் வந்தபோது, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது; அதையும் பார்த்துவிடுவோமே என்று விலாசம் விசாரித்து நாம் சென்ற இடம், பேரூரை அடுத்த ஆறுமுக கவுண்டனூரிலுள்ள அழகுராஜ் என்ற விவசாயினுடைய வீடு. அவர் வளர்க்கும் 10 ஆடுகளில் ஒன்றுதான், சிக்கன், முட்டை, மீன் என்று எல்லைச்சாமியைப் போல எல்லாவற்றையும் வெளுத்து வாங்குகிறது.

ஆட்டைப் பார்க்க நாம் வருவது தெரிந்து, முட்டை அவியல், பொரித்த மீன், சிக்கன் லெக்பீஸ் (நண்டு கிடைக்கலையோ!) என சகல அசைவ வகைகளையும் சமைத்து வைத்திருந்தனர். நம் கண் முன்னே, அந்த ஆட்டுக்குட்டிக்கு அசைவ விருந்து படைக்கப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடம், தட்டு காலி."என் ராசாவின் மனசிலே' ராஜ்கிரண் ஸ்டைலில், தாடையை முன்னும் பின்னுமாக இழுத்து அசைத்து, தொடை பீஸ்சை அந்த ஆடு கடித்து துவம்சம் செய்ததைப் பார்த்தபோது, நம் தொடையும் கொஞ்சம் ஆடிப்போனது. அதிசய ஆட்டின் "ஓணர்' அழகுராஜிடம் பேசினோம்.

""இந்த ஆட்டோட பேரு தாரா. மூணு வயசான இந்த ஆடு, இதுவரைக்கும் ஆறு குட்டி போட்டிருக்கு. ஞாயித்துக்கிழமையில, வீட்டுல நாங்க சாப்பிட்டது போக மிச்சமாகுற சிக்கன், மட்டன், எலும்பையெல்லாம் நாய்க்குப் போடுவோம். ஒரு நாள், நாங்க போட்ட சிக்கனை இந்த ஆடும் சாப்பிட்டதைப் பார்த்தோம். அப்போதுல இருந்து, சிக்கன், மீன், முட்டை எதைப் போட்டாலும் சாப்பிடுது. இதுவரைக்கும் எந்த பாதிப்பும் வரலை. பால், புழுக்கையில ஒரு வித்தியாசமும் தெரியலை. அசைவம் சாப்பிட்டாலும், இலை தழையைச் சாப்பிடதையும் விடலை,'' என்றார் அவர்.

இயற்கைக்கு முரணான இந்த ஆட்டைப் பற்றி, கோவை கால்நடை பயிற்சி மைய இணை பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ""பொதுவாக ஆடுகளுக்கு நாம் தரக்கூடிய உணவில், சரிவிகித சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால், வழக்கத்தில் இல்லாத தீவனங்களை சாப்பிடுவது வழக்கம். இந்த ஆடு இலை, புல் போன்றவற்றுடன் அசைவ உணவுகள் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளது. இறைச்சியை நன்கு சமைத்து வேக வைத்து விடுவதால், ஜீரணப்பிரச்சனைகள், நஞ்சு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதனால் ஆட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும், இயற்கையில் இது ஓர் அதிசயம்தான்,'' என்றார்.

ஆட்டுக்கறியை நாம சாப்பிட்டா அசைவம். ஒரு ஆடே, கறி சாப்பிட்டா அது சைவமா, அசைவமா?

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்




 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

Yahoo
மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும். 


மேலே உள்ள DailymotionYahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்த

ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க


ஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க





ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?


மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Use) பகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)


மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth

Status Switch
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper

Live Wallpaper
ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets


ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டு

2012ல் உலகம் அழியுமா? சூரிய சுனாமி பூமியை தாக்குமா? (வீடியோ விவரங்கள் இணைப்பு

2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணைபடுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து மக்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இதனை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே பிரபலமடைய தவறுவதில்லை. அந்த வகையில் The Happening என்ற திரைப்படம் பெரும் பிரபலம் பெற்ற ஒன்றாகும். இது ஓர் அறிவியல் நிறைந்த திரைப்படம். விபரிக்க முடியாத ஓர் இயற்கை அழிவில் இருந்து தப்பு முயற்சிக்கும் ஒரு குழுவைச் சார்ந்து எடுக்கப்பட்டது இத்திரைப்படம். நைட் ஷியாமளன் என்பர் இத்திரைப்படத்தினை இயங்கி இருந்தார்.
அவரின் எதிர்வுகூறல் இதுவாகவே இருந்தது. அதாவது நச்சு வாயு நிரம்பி நரம்பு மண்டலம் ஒன்று உலகை சுற்றிக் கொண்டு இருந்தது இதில் மாட்டிக் கொள்பவர்கள் தற்கொலை செய்யது கொள்ள தூண்டும் விசத் தண்மை கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிறிய பகுதியில் உருவாகிய நச்சு நரப்பு மண்டலம் வட அமெரிக்கா முழுவதும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இதில் அறிவியல் ஆசிரியரான கதாநாயகன், கதாநாயகி மற்றும் பிறர் எவ்வாறு தப்பி செல்கி்ன்றனர் என நகருகின்றது திரைப்படம்.
2008ம் ஆண்டில் அவர் தெரிவித்தமை தற்போது சாத்தியப்பட வாய்பு உள்ளதோ என்று எண்ண தோண்றுகின்து. அதாவது இன்று உலகில் பல பாகங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலைகள் அவ்வாறு உள்ளது.
எடுத்துக்காட்ட உலகெங்கும் வன்முறைகளும், அழிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏன் எவ்வாறு இடம்பெறுகின்றது என அண்மைய ஆய்வும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாம் வாழும் இப் பூமியை சுற்றி காந்த சக்தி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சூரியனின்மேற்பரப்பில் புயல் ஒன்றின் காரணமாக இந்த காந்த விசை பாதிப்புக்கு உள்ளனது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் பூமியின் காந்தி விசையினை தாக்கி அதன் மூலம் வலுவான காந்த புயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காந்த புயலின் தாக்குதலானது மனித மனங்களை தாங்கி எதிர்மறையான சிந்தனையை தூண்டும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்கொலைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அச்சப்படுகிறது.
தற்போது சூரியனின் மேற்பரப்பில் அதிகளவான காந்த புயல்கள் உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2012 இல் இதன் போக்கு அதி உச்சத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக உலகின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்படும், இலத்திரனியல் சாதனங்கள் செயலிழக்கும், வானில் பறக்கும் விமானங்கள் பாதிப்புக்குள்ளாகும் அந்த சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி பூமி முழுவதையும் அழிக்க கூடிய அபாயம் உள்ளது.
சூரிய புயல் என்றால் என்ன?

உருண்டையான சூரியன் ஹரையன் வாயு மற்றும் கீலியம் வாயுவினால் உருவாக்கப்பட்டுள்ளதாகும். பொதுவாக நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில்
காந்த சக்திகள் சுற்றிக் காணப்படுகின்றது. இது வேறு கிரங்களில் இருந்து வரும் தாக்கங்களை தடுத்து நிறுத்தும் பணியை மேற் கொள்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் சூரியனில் ஏற்படும் அனர்த்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் பூமியை வந்து சேருகின்றது. அதாவது சூரியனில் ஏற்படும் புயலின் அலைகள் மிகப் பெரிதாக பூமியை வந்தடைகின்றது. இதன் போது பூமியை சுற்றி காந்த விசைகளில் உடைவுகள் ஏற்பட்டு பூமியை தாக்குகின்றது.
எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்தில் உலகம் அழித்து விட போகின்றது என்ற தோற்றப்பாடு வலுப் பெறுவதும் பின்னர் அடங்குவதும் வழமையே. ஆனால் 2012 மிக அண்மித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலகம் அழித்து விடும் என்ற பீதியும் வலுப்பெற்றுள்ளதை மறுப்பதற்கும் இல்லை.


Dec 21, 2012 – End of the World? – Part 1 – 6






இவ் ஆபத்தில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுவது என்பது பற்றி இக் காணொளி ஆலோசனை சொல்லுகின்றது. கேட்டுப் பாருங்கள்…

பேஸ்புக் முலம் விபசாரியாக்கிய கணவன்

புபேஸ்க் ஒரு சமூக வலைத்தளம்தான், ஆனா அதவச்சு நம்மாளுங்க என்னவெல்லாம் பண்ணுறாங்க எனப் பார்க்கும் போது தலையே சுத்துதுங்க, இங்கயும் ஒரு பக்கி தன் கள்ளக்காதலிக்காக தன்னோட மனைவியயே பேஸ்புக் மூலம் ஒரு விபச்சாரப் பெண்ணாக சித்தரித்து என்னவெல்லாம் சித்துவிளையாட்டுக் காட்டியிருக்குது எண்டு பாருங்களன்.
விவாகரத்து செய்வதற்காக மனைவியை இண்டர்நெட்டில் விபசாரப் பெண்ணாகக் காட்டி, பொய் தகவல் பரப்பிய கணவரும் அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகன் இருக்கிறான்.
இந் நிலையில் மகேசுக்கும் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் சுபாஷினி (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையறிந்த ஜெனிபர் தனது கணவரை கண்டித்தார். இதையடுத்து தன்னை விவாகரத்து செய்யுமாறு மனைவியிடம் மகேஷ் கூறினார். ஆனால், இதற்கு ஜெனிபர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து ஜெனிபரை சித்ரவதை செய்து வந்தார் மகேஷ். இதையறிந்த ஜெனிபரின் தந்தை அவரை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றாக வாழ்வதாக சம்மதித்தார் மகேஷ்.
இந்நிலையில் ஜெனிபரின் பேஸ்புக் இணையதள பக்கத்தில், அவரை விபச்சாரப் பெண்ணாக சித்தரிக்கும் வகையில் செய்தியும் படமும் தொலைபேசி எண்ணும் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்த ஜெனிபர் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி, மனைவியை விவாகரத்து செய்வதற்காக தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் மகேஷ் தான் இந்தச் செயலைச் செய்தார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மகேஷையும், சுபாஷினியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், சுபாஷினியை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக மனைவியிடம் விவாகரத்து கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். அதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு அவரது பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, அவரை கால்கேர்ள் என்று விளம்பரம் செய்தேன். இதைக் காட்டியே அவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவர் என் மீது போலீசில் புகார் தந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தார் விஜய்!!

 தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.
பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.
இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில்‌ சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ‌மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Skype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள்



















ஸ்கைப் (Skype) ஊடான மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புக்கள் அனைத்தையும் ஒலி-ஒளி வடிவமாக உயர் தரத்தில் (HD) பதிந்துகொள்ள (Record) உதவும் ஒரேயொரு சிறந்த மென்பொருளையே இன்று நீங்கள் தரவிறக்கப்போகிறீர்கள்.

சிறப்பம்சங்கள்.

வீடியோ கோல்களை நேரடியாக உங்கள் கணனியில் பதிந்துகொள்ள முடியும். ( ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் அழைப்புக்களையும் பதிந்துகொள்ள முடியும்! )
screen sharing இன் போதும் வீடியோவை பதிந்துகொள்ள முடியும். ( இது ஒன்லைன் கல்வியின் போது பயண்படும்)
தன்னியங்கி அழைப்பு பதிவு. (Automatic call recording )
தானியங்கி சட்டிங் பதில் அளிப்பு. (Automatic chat reply)
அளவு :10.6 MB

தரவிறக்க :Download Here