இளைஞர்கள் சக்தியே நாட்டின் சக்தி என சென்னையில் நடந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்து வரும் ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இளைஞர்களின் சக்தியே நாட்டின் சக்தி. ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் உருவானதற்கு இளைஞர்களே காரணம் என்று தெரிவித்தார்
லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., சேர்க்கப்படாவிடில், பொக்கைவாய்ப் புலி என்ற அளவிலேயே லோக்பால் மசோதா இருக்கும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்குமுன்பும், ஹசாரே இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். பார்லிமென்டின் இந்த கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டும், இல்லையனில், திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதுவரை, பார்லிமென்டில் 8 முறை லோக்பால் மசோதா குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை இவ்விவகாரத்தில் எவ்வித தீர்க்கமான முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.