என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, December 15, 2011

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி, தேர்வுகள் வரும் மார்ச் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கின்றன. இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை இயக்குனரகம், முழு வீச்சில் செய்து வருகிறது. மாணவர்களும், பொதுத் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு தேர்வுகளுக்கும், தேர்வு மையங்களை அமைப்பதற்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 மாணவியர், 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்.

கடந்த ஆண்டை விட, ஒரு வாரம் தாமதமாக தேர்வு துவக்கம் : பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு கூட, அது போல தான் முடிவடைந்தது. ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு மட்டும், ஒரு வாரம் தாமதமாக துவங்கி, தேர்வு முழுவதும் ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, ""பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment