ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், லேட்டஸ்டாக உருவாக இருக்கும் வந்தே மாதரம் ஆல்பத்தில் தனுஷ் பாடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 படத்தில் உள்ள கொலவெறி பாடல், தனுஷை உலகம் முழுக்க பிரபலமாக்கியுள்ளது. அவரே எழுதி, பாடியிருக்கும் இந்தபாடல், அதிகம் பேர் ரசித்த பாடல் என்ற சாதனையை படைத்திருக்கிறது. இளசு முதல் பெருசு வரை பலரையும் கவர்ந்துள்ள இந்த பாடலை, சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் ரொம்பவே விரும்பி கேட்டாராம்.
இதனையடுத்து விரைவில் தன்னுடைய இசையில் உருவாக இருக்கும் லேட்டஸ்ட் வந்தே மாதரம் ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க நினைத்தாராம் ரஹ்மான். இதற்கு தனுஷூம் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே முதலில் கமல்ஹாசனை வைத்து தான் இந்த பாடலை இயக்க திட்டமிட்டு இருந்தாராம் ரஹ்மான். ஆனால் கமல் விஸ்வரூபம் படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம்.
No comments:
Post a Comment