என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, December 28, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தில் தனுஷ்

Dhanush in A.R.Rahman Album
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், லேட்டஸ்டாக உருவாக இருக்கும் வந்தே மாதரம் ஆல்பத்தில் தனுஷ் பாடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 படத்தில் உள்ள கொலவெறி பாடல், தனுஷை உலகம் முழுக்க பிரபலமாக்கியுள்ளது. அவரே எழுதி, பாடியிருக்கும் இந்தபாடல், அதிகம் பேர் ரசித்த பாடல் என்ற சாதனையை படைத்திருக்கிறது. இளசு முதல் பெருசு வரை பலரையும் கவர்ந்துள்ள இந்த பாடலை, சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் ‌ரொம்பவே விரும்பி கேட்டாராம்.

இதனையடுத்து விரைவில் தன்னுடைய இசையில் உருவாக இருக்கும் லேட்டஸ்ட் வந்தே மாதரம் ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க நினைத்தாராம் ரஹ்மான். இதற்கு தனுஷூம் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே முதலில் கமல்ஹாசனை வைத்து தான் இந்த பாடலை இயக்க திட்டமிட்டு இருந்தாராம் ரஹ்மான். ஆனால் கமல் விஸ்வரூபம் படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆங்கிலம் கற்க வேண்டுமா.. புதுசு கண்ணா புதுசு


குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது.
ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம். இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில்......
A :APPLE

B: BLUETOOTH

C: CHAT

D: DOWNLOAD

E: EMAIL

F: FACEBOOK

G: GOOGLE

H: HP

I : IPHONE

J : JAVA

K: KINGSTON

L :LAPTOP

M: MESSENGER

N : NERO

O : ORKUT

P : PICASSA

Q : QUICK

H : HEAL

R: RAM

S: SERVER

T : TWITTER

U: USB

V: VISTA

W: WIFI

X: XP

Y: YOUTUBE

Z: ZORPIA

Saturday, December 24, 2011

வேற்றுகிரகத்தில் மனிதர்கள் இருக்கலாம்.

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார்.

நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:


வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.


ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது.


பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது.


ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள். இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது.


அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது. வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது “வாவ்’ என்று அறியப்பட்டது.


இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த “வாவ்’ சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம். ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்

புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு தரும் விஜய் ஆன்டனி-Real Hero

Vijay Antony

ஆர்வமுள்ள வாய்ப்பு தேடும் புதிய கவிஞர்களுக்கு நான் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பினை உருவாக்கித் தருகிறார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.

தான் நாயகனாக நடித்து இசையமைக்கும் புதிய படமான 'நான்' படத்தில் ஒரு பாடலை எழுத அனைவருக்குமே ஒரு திறந்த வாய்ப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்தப் பாடலுக்கான ட்யூனை அவர் தனது www.vijayantony.com என்ற தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார். இந்த ட்யூனை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ட்யூனுக்கு ஏற்ப பாடலை உருவாக்கு விஜய் ஆன்டனியின் (vijayantonylyrics@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பொருத்தமான பாடலை எழுதியவர்களுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளிக்கவும் விஜய் ஆன்டனி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இது நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த திட்டம். குறுகிய காலத்தில் 42 பாடகர்களை அறிமுகம் செய்துள்ளேன். ஆனால் பாடலாசிரியர்கள் விஷயத்தில் அப்படி செய்ய முடியவில்லை. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பாடலின் பல்லவியைக் கூட என்னுடைய இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளேன். அதற்குப் பொருத்தமாக சரணங்களை எழுதினால்போதும்.

இதன் மூலம் திறமையுள்ள நிறைய இளைஞர்களை அடையாளம் காண முடியும். அவர்களை தொடர்ந்து படங்களில் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்," என்றார்

Sunday, December 18, 2011

சென்னையில் படம் பார்த்தார் அன்னா ஹசாரே

சென்னையில் முதல்வர் மகாத்மா படம் பார்த்த அன்னா ஹசாரே...!
லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக சென்னை வந்த அன்னா ஹசாரே, பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தை பார்த்து ரசித்தார். கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு ஹசாரே பார்க்கும் படம் இது.

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து போராடி வருகிறார். இதற்கு ஆதரவு திரட்டும் விதமாக சென்னை வந்துள்ளார் ஹசாரே. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் முதலில் இயக்குநர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தின் இந்தி பதிப்பை, சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் அவருக்காக விஷேசமாக திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணன் ஏற்கனவே காமராஜர் என்ற படத்தை இயக்கியவர். முதல்வர் மகாத்மா படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் எடுத்துள்ளார். இப்படத்தின் விஷேச காட்சியை அன்னா ஹசாரே, கிரண்பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்ட பலர் பார்த்து, ரசித்து, பாராட்டினர்.

தன் நாடு பின்னோக்கி செல்வதை பார்த்த காந்தி, கடவுளிடம் வேண்டி மீண்டும் பூமியில் அவதரித்து, தன் நாட்டை முன்‌னேற்ற எப்படி பாடுபடுகிறார் என்பது தான் படத்தின் கதை. இந்தபடத்தில் காந்தியாக காமராஜர் படத்தில் நடித்த கனகராஜ் நடித்துள்ளார். காந்தியின் சீடராக பாலிவுட் நடிகர் அனுபம் கவுர் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஹசாரேயை சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர் பாலகிருஷ்ணா. அதன்படி சென்னை வந்த ஹசாரே இப்படத்தை பார்த்து, ரசித்து பாலகிருஷ்ணாவை பாராட்டியுள்ளா.

சென்னையில் அன்னா ஹசாரே

சிறை செல்ல தயாராகுங்கள்: மக்களுக்கு அன்னா ஹசாரே …
 இளைஞர்கள் சக்தியே நாட்டின் சக்தி என சென்னையில் நடந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்து வரும் ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இளைஞர்களின் சக்தியே நாட்டின் சக்தி. ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் உருவானதற்கு இளைஞர்களே காரணம் என்று தெரிவித்தார்

 லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., சேர்க்கப்படாவிடில், பொக்கைவாய்ப் புலி என்ற அளவிலேயே லோக்பால் மசோதா இருக்கும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்குமுன்பும், ஹசாரே இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். பார்லிமென்டின் இந்த கூட்டத்‌தொடரில், வலுவான லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டும், இல்லையனில், திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதுவரை, பார்லிமென்டில் 8 முறை லோக்பால் மசோதா குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை இவ்விவகாரத்தில் எவ்வித தீர்க்கமான முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

30வயது குழந்தை பாத்துருக்கிங்களா

என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று ஆண்கள் பெண்கள் அனைவரிடத்திலும் இருக்கும் ஆசை. ஆனால் உங்களுக்கு 30 வயதை தாண்டிவிட்டாலே போதும் முதுமை என்று மற்றவர்கள் கேலி பண்ணத்தொடங்கிவிடுவார்கள். ஆனால் நாம் தரும் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருக்கும். ஆம் 31 வயது நிறைந்த ஒரு பெண்மணி இன்னும் 9 மாதக்குழந்தையாகவே இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
பிறேசில் நாட்டில் மே மாதம் 1981 ம் ஆண்டு பிறந்தவர் maria audete என்பவர். இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தைகள் போன்றே பிறந்திருக்கிறார். இருப்பினும் இவரை தாக்கிய விசித்திரமான நோயினால் இவரின் வளர்ச்சி குன்றி 31 வயதாகிய பின்னரும் சின்னக்குழந்தையின் தோற்றத்துடனையே காணப்படுகிறார். கிட்டத்தட்ட 9 மாதக்குழந்தை எப்படியிருக்குமோ அப்படித்தான் இவரும் இருக்கிறார். இவரின் நிலமையைப்பார்க்கும் போது மிக்க பரிதாபமாகவே உள்ளது. எனினும் என்றும் இளைமையாக இருக்கிறாரே என்று பெருமைப்பட்டுக்கொள்வதை விட அவருக்கு வேற எந்த ஆறுதலும் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short story,Stories,Birthday Horoscope,Monthly Horoscope, Weekly horoscope, yoga, Kavithai Aaragam, Zoom, Tourism
no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short story,Stories,Birthday Horoscope,Monthly Horoscope, Weekly horoscope, yoga, Kavithai Aaragam, Zoom, Tourism

ஒருநாள் சம்பளம் ஒரு கோடி சூர்யாவுக்கு

முன்னணி தமிழ் சேனல் ஒளிபரப்பயிருக்கும் பிரமாண்ட கேம் ஷோவை விஜய் தொகுத்து வழங்குவார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது விஜய் இடத்தில் சூர்யா. என்ன நடந்தது? இந்தியில் அமிதாப், ஷாருக், சல்மான் என்று முன்னணி நடிகர்கள் தொலைக்காட்சியிலும் கலக்கி வருகிறார்கள். அந்தக் கலா‌ச்சாரத்தின் முதல்படியாக விஜய்யை வைத்து கேம் ஷோ ஒன்றை நடத்த அந்த முன்னணி சானல் ஆர்வம் காட்டியது. இப்போது அந்த இடத்தை சூர்யா பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு அவருக்கு சம்பளம்... மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள், ஒரு கோடி ரூபாயாம்.

Saturday, December 17, 2011

உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க


 உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை.

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவை எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும்.

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும்.

அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம். அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும்.

உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் சர்க்கரை, பருமன் குறையும். உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன, ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம். தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி.

சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை.

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம்

உலகம் அழியுமா இல்லையா..? அழியும் ஆனால் அழியாது என்ற கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது காலமும் நேரமும். புதிதாக உலக அழிவு பற்றி புதிய வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறார் ஒரு சித்தர்.காணொளிகளை பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும். ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள். சுனாமி. நிலநடுக்கம். மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது. பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் பலித்து வருகின்றன.அமெரிக்கா விண்வெளிக்கு விட்ட விண் கலத்தை வீழ்த்திய சித்தர் .பத்துநிமிடத்தில் கோடையில் மழையினை வரவழைத்த பிரம்மரிசியின் திகில் சாகசம் .. நம்ப முடியவில்லை ..நம்பிதான் ஆகவேண்டும் .. நெடுநாள் வாழ ஆசை படுபவர்கள் கட்டாயம் இந்த காணொளி காட்சி பாருங்கள்.

நன்றி- தமிழ் சி.என்.என்

நிர்வாணமாக்கி காட்டும் மென்பொருள்


என்ன கொடுமைடா இது... இனிமேல் வெளி இடங்களில் யார் போன் வைத்திருந்தாலும் சந்தேகமாத்தான் பார்ப்பார்கள் போல இருக்கே?முக்கியமா i phone வைத்திருப்பவர்களைப்பற்றி இனிமேல் எப்படிப்பட்ட அபிமானம் இருக்கும் என்று இதை பார்த்துவிட்டு நீங்களே உணருவீர்கள்.இந்தா காணொளியைப்பாருங்கள் ஆட்களை எப்படி நிர்வாணமாக காட்டுகிறது என்று... மனட்சாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் தயாரிக்கிறார்கள்.


Friday, December 16, 2011

Windows 7 -Internet வேகம் அதிகரிக்க

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.

கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

"gpedit.msc"


இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.


இப்போ OK or APPLY செய்யவும்.
அவ்ளோதான்

குஜராத்...நடுத்தெருவில் விவசாயிகள்


கார்பிரேட் பிடியில் குஜராத்...நடுத்தெருவில் விவசாயிகள்...!

“குஜராத்தைப் பார்! ம...ோடி ஆட்சியின் சாதனையைப் பார்! ’’என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக்
கொண்டாடுகின்றன வடநாட்டு ஊடகங்கள். ஆனால் அதன் மறுப்பக்கத்தை யாரும் பார்ப்பதில்லை.
இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்கின்றார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குஜராத் போல தமிழ்நாடு விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், குஜராத்தில் விவசாயம் வளர்ந்த அளவுக்கு விவசாயிகள் வளரவில்லை. வளமான விவசாய நிலங்கள் கார்பிரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. விவசாயிகள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள். பாரம்பரிய விவசாய முறையை மாற்றியதால், கால்நடைகள் அழிந்து போய்விட்டன. உழவு செய்ய மாடுகள் கிடைப்பதில்லை. மாட்டுக்கு பதில் மனிதர்களை பூட்டி உழவு செய்யும் அவலம் நடந்து வருகிறது.
ஆனால், இன்று குஜராத்தில் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.
இன்னும் சில ஆண்டுகளில் குஜராத் மக்களின் மறுபக்கம் வெளி உலகத்திற்கு தெரியும்..

கூடங்குளம் அணு உலை விரைவில் இயங்கும்


ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், இன்னும் ஒரு சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.


தமிழகம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன், அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதல் இரண்டு யூனிட்களின் பணிகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கவிருந்த நிலையில், கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கினர். "ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது, புக்குஷிமா அணு மின் நிலையம் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்ற ஒரு பாதிப்பு, எங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அணு மின் நிலையத்தால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதனால், அணு மின் நிலையத்தில் நடந்து வந்த பணிகள் ஓரளவு நிறுத்தி வைக்கப்பட்டன. அதேசமயம் இந்த அணுமின் நிலையம் அதிக பாதுகாப்புடன் அமைந்தது என்ற தகவலும், இத்துறை வல்லுனர்களால் தரப்பட்டது.



இந்நிலையில், மூன்று நாள் நல்லெண்ண நட்புப் பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். நேற்று அவர், ரஷ்ய அதிபர் மெட்வதேவை சந்தித்துப் பேசினார். இதன் பின், இருவரும் கூட்டாக சேர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மன்மோகன் சிங் கூறியதாவது: அடுத்த சில வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், அடுத்த சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து, எந்தவிதமான அச்சத்துக்கும் இடமில்லை. பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து, கூடங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். போராட்டம் நடத்துபவர்கள் எழுப்பும் கவலைகள் அகற்றப்படும். அந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் வெளிவருவோம்.



அதிகபட்ச பாதுகாப்பு: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் யூனிட்டிலும், இரண்டாவது யூனிட்டிலும், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த இரண்டு யூனிட்களும், உற்பத்தியை துவங்கும் நிலையில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, இரு நாடுகளும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை, இந்தியாவும், ரஷ்யாவும் திட்டமிட்டபடி, உறுதியாக இவ்விஷயத்தில் மேற்கொள்ளும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.



3 மற்றும் 4வது யூனிட்கள் எப்போது? கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்று மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே, நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஒப்பந்தம், நேற்று கையெழுத்தாகவில்லை. என்றாலும், மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான நிபந்தனை குறிப்புகள், நேற்று இறுதி செய்யப்பட்டன. இதுகுறித்து, ரஷ்ய அணுசக்தி ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் செர்ஜி கிரியென்கோ கூறுகையில்,"கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, இந்திய தரப்பு தயாராக உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை' என்றார்.



அணு நீர்மூழ்கிக் கப்பல் மாத இறுதிக்குள் "சப்ளை': "அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல், இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிடம் வழங்கப்படும்' என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் மெட்வதேவுடன் நேற்று பேச்சு நடத்தினார். இதன் பின், ரஷ்ய ராணுவ ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப தலைவர் மிகாலி டிமிட்ரியேவ் கூறியதாவது: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் திறனுடைய நீர்மூழ்கி கப்பல், விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்த கப்பல் வழங்கப்படவுள்ளது. இந்தக் கப்பலில் 22 அணு ஆயுத ஏவுகணைகளை வைத்திருக்க முடியும். இந்த கப்பலில் இருந்து, 3,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். பல மாதங்களுக்கு நீருக்குள்ளேயே இருக்கும் திறனும், இந்த கப்பலுக்கு உண்டு. இவ்வாறு மிகாலி டிமிட்ரியேவ் கூறினார்.

Thursday, December 15, 2011

விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள் : ஆய்வில் அதிர்சி தகவல்!

இங்கிலாந்தில், அந்நாட்டு அரசு, மானியங்களை குறைத்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததுடன், கல்வி கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்தி விட்டது. இதனால், அந்நாட்டு மாணவிகள், தங்கள் படிப்புச் செலவை ஈடுகட்ட விபசாரத்தில் குதித்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான நல அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவர்களில் 25 சதவீதம் பேர் மாணவிகள் என்று லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. விபசாரம் மட்டுமின்றி, சூதாட்டம் மற்றும் ஆபத்தான பணிகளில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக தாய்மார்களும் விபசார குழியில் தள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

 முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.


  • 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
  • 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.
  • 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.
  • 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறந்து.மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.
  • 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
  • யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.
  • 1700+ பயர்பாக்ஸ் உலவி டவுன்லோட் செய்யப்படுகிறது.
  • ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி, தேர்வுகள் வரும் மார்ச் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கின்றன. இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை இயக்குனரகம், முழு வீச்சில் செய்து வருகிறது. மாணவர்களும், பொதுத் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு தேர்வுகளுக்கும், தேர்வு மையங்களை அமைப்பதற்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 மாணவியர், 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்.

கடந்த ஆண்டை விட, ஒரு வாரம் தாமதமாக தேர்வு துவக்கம் : பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு கூட, அது போல தான் முடிவடைந்தது. ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு மட்டும், ஒரு வாரம் தாமதமாக துவங்கி, தேர்வு முழுவதும் ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, ""பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது'' என்றார்.

Wednesday, December 14, 2011

ரஜினியின் கோச்சடையான் வெளியாகும் தேதி

ராணா படம் இப்போதைக்கு இல்லை என முடிவானப் பிறகு ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அவதார் போல 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் என அறிவிக்கப்பட்டது.

கோச்சடையான் என்பவர் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவார். பயங்கர வீரம், தீரம் மிக்க அவனது வரலாற்றை அடிப்படையாக கொண்டே இந்தப் படம் தயாரிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி இந்தப் இயக்குகிறார். டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.கோச்சடையான் படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையின் இந்தப் படத்தில் நடிப்பவர்கள் பற்றி நாளொரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இசையமைப்பாளர் மட்டும் தயாரிப்புத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த வருடம் ஏ. ஆர். ரஹ்மான் எந்த ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை . இந்த வருட இறுதியில் ரஜினியின் ராணாவுக்கு மட்டும் ஒப்புக் கொண்டார். அந்த ராணாப் படமும் அடுத்த ஆண்டுக்கு(?) தள்ளிப் போன நிலையில், ஏ.ஆர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ள ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான். ரஜினியின் படங்களான முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்தில் தான் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ரஹ்மான்.

சிவாஜியில் கலக்கிய பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

அடுத்து இந்தப் படத்தில் ரஜிகாந்தின் தங்கையாக நடிகை புன்னகை இளவரசி சினேகா நடிப்பதாகத் தெரிகிறது.

இந்தப்படத்தின் கதாநாயகி யார் என்பதில்தான் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. 
போன வாரம் முழுதும் நடிகை அனுஷ்கா நடிப்பார்கள் என செய்திகள் வெளிவரத் தொடங்கியது. ஆனால் அவரிட கால்ஷீட் இல்லை எனவும் சொல்லப்பட்டது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்திலும், கார்த்தி ஜோடியாக பெயரிடப் படாத ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றிலிருந்து ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை அசினுக்கு கைவசம் எதுவும் பெரிதாக படங்கள் இல்லை. இந்தியில் மட்டும் ஒரு படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

எந்தப் பிரச்சனையும் இப்போது அசினுக்கு இல்லாததால் அவர் இந்தப் படத்தில் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.

பார்ப்போம் தலைவர் படம் என்றால் தினம் ஒரு பரபரப்புத் தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. பல கோடி ரஜினி ரசிகர்களில் நானும் ஒரு ரஜினி ரசிகனாக முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

Sunday, December 11, 2011

3டி., ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டி., டிவி

3டி., ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டி., டிவிலண்டன் : தற்போது பிரபலமாகி வரும் 3டி டிவிக்களுக்கு பதிலாக க்யூ.டி.,டிவி எனப்படும் புதிய தலைமுறைக்கான டிவி.,யை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதிய டிவியை மடத்து, எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த க்யூ.டி., டிவி, மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாவும்ல வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது பிளாட் ஸ்கிரீன் டிவி., விட தொழில்நுட்ப திறன் அதிகம் கொண்டதாகும். இந்த க்யூ.டி.,டிவிக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 2, 2011

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


 இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு பார்மலிட்டீஸ் எல்லாம் முடிந்த பின்னர், திகார் சிறைக்கு உத்தரவு அனுப்பப்படும்.

இதன் பின்னரே கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இவை எல்லாம் இன்றே நடந்து முடிய வாய்ப்பில்லை என்பதால், நாளை தான் இவர்கள் சிறையிலிருந்து வெளியே வருவர் என்று தெரிகிறது.

இந்த 2ஜி வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்! – தலையின் மனிதநேயத்தை காட்டும் வெளியில் கசிந்த இன்னுமொரு செய்தி

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம். 

மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். 
படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் இருவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம். பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை. 
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..
இவரோ குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.
விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம். கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும், எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும், மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.
அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சி கண்ணீர் வரவைத்து விட்டது. நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின் மனதிற்கும், செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து.

ஸ்மார்ட்போன்களில் மறைந்திருந்து தகவல் சேமிக்கும் நிரலிகள் இயங்குவதாக அதிர்ச்சித் தகவல்

அண்ட்ராய்டு போன்கள் உட்பட ஏனைய ஸ்மார்ட் போன்களில் அவற்றை பயன்படுத்துபவரின்
தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து சேகரித்து அனுப்பிவைக்கும் நிரலிகள் நிறுவப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறைந்த அளவிலான அணுகலினால் இயங்கும் இந்த நிரலிகளால் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.


'Rootkit' அல்லது Carrier IQ என்று பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிரலிகள் நிறுவப்பட்டுள்ள போன்களை பயன்படுத்தும் போது எந்த கீகளை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். எஸ்.எம்.எஸ் களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எவை போன்ற என்னும் பல தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன்கொண்டவையாகும்.

Monday, October 24, 2011

ஊராட்சி மன்ற தேர்தல் முடிவுகள்

தமிழகத்தில் அக்டோபர் 17, 19ல் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது

தேர்தல் முடிவுகள்

Friday, July 22, 2011

ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களின் பட்டியல்

1. அபூர்வ ராகங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 18-08-1975

2. கதா சங்கமா - (கன்னடம் - புத்தண்ணா) - 23-01-1976

3. அந்துலேனி கதா - (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 27-02-1976

4. மூன்று முடிச்சு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 22-10-1976

5. பாலு ஜேனு - (கன்னடம் - குன்னிகல் நாக பூஷணம் பாலன்) - 10-12-1976

6. அவர்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 25-02-1977

7. கவிக்குயில் - (தமிழ் - தேவராஜ், மோகன்) - 29-07-1977

8. ரகுபதி ராகவன் ராஜாராம் - (தமிழ் - துரை) - 12-08-1977

9. சிலக்கம்மா செப்பண்டி - (தெலுங்கு - எரங்கி சர்மா) - 13-08-1977

10. புவனா ஒரு கேள்விக்குறி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 02-09-1977

11. ஒண்டு பிரேமதா கதா - (கன்னடம் - எஸ்.எம். ஜோ சிமோன்) - 02-09-1977

12. 16 வயதினிலே - (தமிழ் - பாரதிராஜா) - 15-09-1977

13. சகோதர சவல் - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 16-09-1977

14. ஆடு புலி ஆட்டம் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 30-09-1977

15. காயத்ரி - (தமிழ் - ஆர். பட்டாபிராமன்) - 07-10-1977

16. குங்கும ரக்சே - (கன்னடம் - எஸ்.கே.ஏ. சாரி) - 14-10-1977

17. ஆறு புஷ்பங்கள் - (தமிழ் - கே.எம். பாலகிருஷ்ணன்) - 10-11-1977

18. தொலிரேயி கடிச்சிண்டி - (தெலுங்கு - கே.எஸ். ராமி ரெட்டி) - 17-11-1977

19. ஆமே கதா - (தெலுங்கு - கே. ராகவேந்திர ராவ்) - 18-11-1977

20. கலாட்டா சம்சாரா - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 02-12-1977

21. சங்கர் சலீம் சைமன் - (தமிழ் - பி. மாதவன்) - 10-02-1978

22. கில்லாட் கிட்டு - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978

23. அன்னடம்முளு சவால் - (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978

24. ஆயிரம் ஜன்மங்கள் - (தமிழ் - துரை) - 10-03-1978

25. மாது தப்படமகா - (கன்னடம் - பெக்கட்டி சிவராம்) - 31-03-1978

26. மாங்குடி மைனர் - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 02-06-1978

27. பைரவி - (தமிழ் - எம். பாஸ்கர்) - 02-06-1978

28. இளமை ஊஞ்சலாடுகிறது - (தமிழ் - ஸ்ரீதர்) - 09-06-1978

29. சதுரங்கம் - (தமிழ் - துரை) - 30-06-1978

30. வணக்கத்துக்குரிய காதலியே - (தமிழ் - திரிலோகசந்தர்) - 14-07-1978

31. வயசு பிலிசிண்டி - (தெலுங்கு - ஸ்ரீதர்) - 04-08-1978
32. முள்ளும் மலரும் - (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1978
33. இறைவன் கொடுத்த வரம் - (தமிழ் - ஏ. பீம்சிங்) - 22-09-1978
34. தப்பிட தலா - (கன்னடம் - கே. பாலச்சந்தர்) - 06-10-1978
35. தப்புத் தாளங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 30-10-1978
36. அவள் அப்படித்தான் - (தமிழ் - சி. ருத்ரய்யா) - 30-10-1978
37. தாய் மீது சத்தியம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 30-10-1978
38. என் கேள்விக்கு என்ன பதில் - (தமிழ் - ஆர். மாதவன்) - 09-12-1978
39. ஜஸ்டிஸ் கோபிநாத் - (தமிழ் - யோகானந்த்) - 16-12-1978
40. ப்ரியா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-12-1978
41. ப்ரியா - (கன்னடம் - எஸ்.பி. முத்துராமன்) - 12-01-1979
42. குப்பத்து ராஜா - (தமிழ் - ராமண்ணா) - 12-01-1979
43. இதாரு அசாத்யுலே (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 25-01-1979
44. அலாவுதினும் அற்புத விளக்கும் - (மலையாளம் - ஐ.வி. சசி) - 14-04-1979
45. நினைத்தாலே இனிக்கும் (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 14-04-1979
46. அந்தமைனா அனுபவம் (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 19-04-1979
47. அலாவுதினும் அற்புத விளக்கும் - (தமிழ் - ஐ.வி.சசி) - 08-06-1979
48. தர்ம யுத்தம் - (தமிழ் - ஆர்.சி. சக்தி) - 29-06-1979
49. நான் வாழவைப்பேன் - (தமிழ் - டி. யோகானந்த்) - 10-08-1979
50. டைகர் - (தெலுங்கு - என். ரமேஷ்) - 05-09-1979
51. ஆறிலிருந்து அறுபது வரை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-09-1979
52. அன்னை ஓர் ஆலயம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 19-10-1979
53. அம்மா எவரிக்கைன அம்மா - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 08-11-1979
54. பில்லா - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1980
55. ராம் ராபர்ட் ரஹீம் - (தெலுங்கு - விஜய நிர்மலா) - 31-05-1980
56. அன்புக்கு நான் அடிமை - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 04-06-1980
57. காளி - (தமிழ் - ஐ.வி. சசி) - 03-07-1980
58. மாயதாரி கிருஷ்ணடு - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 19-07-1980
59. நான் போட்ட சவால் - (தமிழ் - புரட்சிதாசன்) - 07-08-1980
60. ஜானி (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1980
61. காளி (தெலுங்கு - ஐ.வி. சசி) - 19-09-1980
62. எல்லாம் உன் கைராசி - (தமிழ் - எம்.ஏ. திருமுகம்) - 09-10-1980
63. பொல்லாதவன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 06-11-1980
64. முரட்டு காளை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-12-1980
65. தீ - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1981
66. கழுகு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 06-03-1981
67. தில்லு முல்லு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 01-05-1981
68. கர்ஜனை - (தமிழ் - சி.வி. ராஜேந்திரன்) - 06-08-1981
69. கர்ஜனம் - (மலையாளம் - சி.வி. ராஜேந்திரன்) - 14-08-1981
70. நெற்றிக்கண் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-08-1981
71. கர்ஜனே - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 23-10-1981
72. ராணுவ வீரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 26-10-1981
73. போக்கிரி ராஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1982
74. தனிக்காட்டு ராஜா - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 12-03-1982
75. ரங்கா - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1982
76. புதுக்கவிதை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 11-06-1982
77. எங்கேயோ கேட்ட குரல் - (தமிழ் - எஸ்.பி.முத்துராமன்) - 14-08-1982
78. மூன்று முகம் - (தமிழ் - ஏ. ஜகந்நாதன்) - 01-10-1982
79. பாயும் புலி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1983
80. துடிக்கும் கரங்கள் - (தமிழ் - ஸ்ரீதர்) - 04-03-1983
81. அந்தா கானூன் - (இந்தி - டி. ராம ராவ்) - 07-04-1983
82. தாய் வீடு - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1983
83. சிவப்பு சூரியன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 27-05-1983
84. ஜீத் ஹமாரி - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 17-06-1983
85. அடுத்த வாரிசு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-07-1983
86. தங்க மகன் - (தமிழ் - ஏ. ஜெகந்நாதன்) - 04-11-1983
87. மேரி அதாலத் - (இந்தி - ஏ.டி. ரகு) - 13-01-1984
88. நான் மகான் அல்ல - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1984
89. தம்பிக்கு எந்த ஊரு - (தமிழ் - ராஜசேகர்) - 20-04-1984
90. கை கொடுக்கும் கை - (தமிழ் - மகேந்திரன்) - 15-06-1984
91. எதே நாசவல் - (தெலுங்கு - புரட்சிதாசன்) - 15-06-1984
92. அன்புள்ள ரஜினிகாந்த் - (தமிழ் - கே. நட்ராஜ்) - 02-08-1984
93. கங்குவா - (இந்தி - ராஜசேகர்) - 14-09-1984
94. நல்லவனுக்கு நல்லவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-10-1984
95. ஜான் ஜானி ஜனார்த்தன் - (இந்தி - டி. ராம ராவ்) - 26-10-1984
96. நான் சிகப்பு மனிதன் - (தமிழ் - எஸ். ஏ. சந்திரசேகர்) - 12-04-1985
97. மஹாகுரு - (இந்தி - எஸ். எஸ். ரவிச்சந்திரா) - 26-04-1985
98. உன் கண்ணில் நீர் வழிந்தால் (தமிழ் - பாலுமகேந்திரா) - 20-06-1985
99. வபாதார் - (இந்தி - தாசரி நாராயண ராவ்) - 01-09-1985
100. ஸ்ரீராகவேந்திரா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 01-09-1985

101. பேவஃபாய் - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 20-09-1985
102. படிக்காதவன் - (தமிழ் - ராஜசேகர்) - 11-11-1985
103. மிஸ்டர் பாரத் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 10-01-1986
104. நான் அடிமை இல்லை - (தமிழ் - துவாரகீஷ்) - 01-03-1986
105. ஜீவன போராட்டம் - (தெலுங்கு - ராஜசந்திரா) - 10-04-1986
106. விடுதலை - (தமிழ் - கே. விஜயன்) - 11-04-1986
107. பகவான் தாதா - (இந்தி - ஜே. ஓம் பிரகாஷ்) - 25-04-1986
108. அசலி நக்லி - (இந்தி - சுதர்சன் நாக்) - 17-10-1986
109. தோஸ்தி துஸ்மன் - (இந்தி - டி. ராம ராவ்) - 31-10-1986
110. மாவீரன் - (தமிழ் - ராஜசேகர்) - 01-11-1986
111. வேலைக்காரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-03-1987
112. இன்சாப் கோன் கரேகா - (இந்தி - சுதர்சன் நாக்) - 19-06-1987
113. ஊர்க்காவலன் - (தமிழ் - மனோபாலா) - 04-09-1987
114. மனிதன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 21-10-1987
115. உத்தர் தக்ஷின் - (இந்தி - பிரபாத் கன்னா) - 13-11-1987
116. தமாசா - (இந்தி - ரமேஷ் அஹுஜா) - 26-02-1988
117. குரு சிஷ்யன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 13-04-1988
118. தர்மத்தின் தலைவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 24-09-1988
119. பிளட் ஸ்டோன் - (ஆங்கிலம் - டுவைட் லிட்டில்) - 07-10-1988
120. கொடி பறக்குது - (தமிழ் - பாரதிராஜா) - 08-11-1988
121. ராஜாதி ராஜா - (தமிழ் - ஆர். சுந்தர் ராஜன்) - 04-03-1989
122. சிவா - (தமிழ் - அமீர்ஜான்) - 05-05-1989
123. ராஜா சின்ன ரோஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-07-1989
124. மாப்பிள்ளை - (தமிழ் - ராஜசேகர்) - 28-10-1989
125. பிரஸ்டாச்சார் - (இந்தி - ரமேஷ் சிப்பி) - 01-12-1989
126. சால்பாஸ் - (இந்தி - பங்கஜ் பராசார்) - 08-12-1989
127. பணக்காரன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1990
128. அதிசய பிறவி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-06-1990
129. தர்மதுரை - (தமிழ் - ராஜசேகர்) - 14-01-1991
130. ஹம் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-02-1991
131. பரிஸ்தே - (இந்தி - அனில் சர்மா) - 22-02-1991
132. கூன் கா கர்ஜ் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-03-1991
133. பூல் பனே அங்காரே - (இந்தி - கே.சி. பொகாடியா) - 12-07-1991
134. நாட்டுக்கு ஒரு நல்லவன் - (தமிழ் - வி. ரவிச்சந்திரன்) - 02-10-1991
135. தளபதி - (தமிழ் - மணிரத்னம்) - 05-11-1991
136. மன்னன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1992
137. தியாகி - (இந்தி - கே.சி. பகோடியா) - 29-05-1992
138. அண்ணாமலை - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 27-06-1992
139. பாண்டியன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 25-10-1992
140. இன்சானியத் கே தேவ்தா - (இந்தி - கே.சி. பகோடியா) - 12-02-1993
141. எஜமான் - (தமிழ் - ஆர்.வி. உதயகுமார்) - 18-02-1993
142. உழைப்பாளி - (தமிழ் - பி. வாசு) - 24-06-1993
143. வள்ளி - (தமிழ் - கே. நட்ராஜ்) - 24-06-1993
144. வீரா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 14-04-1994
145. பாட்ஷா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 12-01-1995
146. பெத்தராயுடு - (தெலுங்கு - பி. ரவிராஜ்) - 15-06-1995
147. ஆதங்க் ஹீ ஆதங்க் - (இந்தி - திலீப் சங்கர்) - 04-08-1995
148. முத்து - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 23-10-1995
149. பாக்யதேவ்தா - (பெங்காலி - ரகுராம்) - 23-12-1995
150. அருணாச்சலம் - (தமிழ் - சுந்தர்.சி) - 10-04-1997
151. படையப்பா - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 10-04-1999
152. பாபா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 15-08-2002
153. சந்திரமுகி - (தமிழ் - பி. வாசு) - 14-04-2005
154. சிவாஜி - (தமிழ் - சங்கர்) - 15-06-2007
155. குசேலன் - (தமிழ் - பி. வாசு) - 01-08-2008
156. எந்திரன் - (தமிழ் - சங்கர்) - 2010