என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, January 26, 2011

2010 தமிழ் திரைப்பட நடிகைகளின் தரவரிசை

வெகு ஜன சினிமா ரசிகர்களும் சரி, எதார்த்த சினிமா ரசிகர்களும் சரி அஞ்சலி பெயரைத்தான் சென்ற வருடம் அதிகமாய் உச்சரித்திருப்பார்கள். அங்காடித்தெரு படத்தின் மூலம் அனைவரின் இதயத்தையும் நெகிழ வைத்தவர்.

பார்க்குறதுக்கு நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரியே இல்ல என்று சொல்லும் அளவிற்கு அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ற அடக்கமான அழகு. சென்ற வருடம் ரெட்டைசுழி, அங்காடி தெரு, மகிழ்ச்சி என்ற மூன்று படங்கள். இதையெல்லாம் விட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப் பாடலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது இவருக்கு இன்னொரு ஹைலைட். இந்த வருடம் விரைவில் வெளிவர இருக்கும் தூங்கா நகரம், கோ, தம்பி வெட்டோத்தி சுந்தரம் என வெரைட்டியான படங்கள் காத்திருக்கின்றன.
அடுத்தது ரஞ்சிதா, இவர் ஹீரோயினா நடித்தப் படங்கள் கூட அந்த அளவிற்கு ஓடியிருக்காது. ஆனால் சென்ற வருடம் இவர் நித்யானந்தாவுடன் இருந்த உல்லாச வீடியோ டி.வி.யிலும் இணைய தளங்களிலும் மெகா ஹிட். ரஞ்சிதாவை யார் என்று தெரியாவர்கள் கூட தேடிக் கண்டுபிடித்து இவர் முகத்தைப் பார்த்தனர். இணையதள தேடல்களிலும் ரஞ்சிதாவை தேடாத ஆட்கள் இல்லை.

சென்ற வருடம் வெளியான ராவணன் திரைப்படத்தில் ரஞ்சிதா ரெண்டு காட்சிகளுக்கு வந்து போனார். எப்பா! தியேட்டர்ல எவ்வளோ விசில், அந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாவுக்கு கூட அப்படி ஒரு ஆரவாரம் இல்லை. இப்போ இருக்கிற நிலைமைக்கு இவர் ஒரு படத்தில் நடித்தில் படம் சூப்பர் ஹிட். என செய்வது அதெல்லாம் நடக்குற காரியமா?

வயசு ஆக ஆக அழகு கூடிகிட்டே போகுது ஐஸ்வர்யா ராயின் மேனிக்கு. சென்ற வருடம் ராவணன், எந்திரன் என்று தமிழில் இரண்டு பெரிய படங்களில் நடித்தார். இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் கனவு சென்ற வருடம் நிறைவேறியது. தண்ணீரில் நனைந்தபடி உதட்டை சுழிக்கும் போது ரசிகர்களின் உசுரே போனது…

அமலா பால் என்றால் சிலருக்கு தான் தெரியும், மைனா என்றால் எல்லோருக்கும் தெரியும். மைனா படத்தில் மைனாவாகவே வாழ்ந்தவர் இவர். மைனா படத்திற்கு முன் இரண்டு படத்தில் நடித்திருந்தாலும் இவர் வாழ்வில் விளக்கேற்றி வைத்தது மைனா தான். இப்போது முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர இருப்பதாக பேச்சு. விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

போன வருடத்துக்கு முந்தின வருடம் வேட்டைக்காரன் படத்தில் ரசிகர்களை வேட்டையாடியவர். இந்த வருடம் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் தமிழில் வந்ததோ ஒரே ஒரு படம் சிங்கம். காரணம் அனுஷ்கா சென்ற வருடம் தெலுங்கில் ரொம்ப பிஸி. இந்த வருடம் தான் சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் வேட்டை என தமிழில் கவனம் செலுத்துகிறார். இருந்தாலும் சிங்கம் படத்தின் கமர்ஷியல் வெற்றியில் சென்ற வருடத்தில் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

தமன்னாவுக்கு அது என்ன நேரமோ! சூர்யா, விஜய் என முன்னனி நடிகர்களின் கவனதை தன் பக்கம் திருப்பினார். சென்ற வருடம் சுறா, தில்லாலங்கடி, பையா என மூன்று படங்கள். பையா சூப்பர் ஹிட். மழையில் தமன்னா போட்ட ஆட்டம்… அடடா மழைடா… செம டா! தனுஷுடன் வேங்கை, கார்த்தியுடன் சிறுத்தை என்று தமன்னாவின் இரண்டு கமர்ஷியல் ட்ரீட் காத்திருக்கிறது. மற்றபடி தெலுங்கில் இந்த வருடம் அம்மணி ரொம்ப பிஸியாம்!

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அயல்நாட்டு அழகி எமி ஜாக்சன். நன்றாக நடித்தது மட்டும் இல்லாது சில தமிழ் வார்த்தைகளையும் பாடல் வரிகளையும் உச்சரித்தார். எமியின் குழந்தைத்தனமான அழகில் உருகிப் போனவர்கள் பலர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோயின்.

சென்ற வருடம் இந்தி பக்கம் போனார் திரிஷா. ஆனா, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அசினை ஆராதித்த இந்தி உலகம் திரிஷாவிற்கு டாட்டா சொல்லிவிட்டது. திரிஷாவா இது! என்று சொல்லும் அளவிற்கு வேற ஒரு திரிஷாவை காண்பித்தார் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். படமும் சூப்பர் ஹிட். சிம்புவிற்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. திரிஷாவுக்கு நித்தம் நித்தம் முத்தம் வைத்தார். அடுத்து வந்த மன்மதன் அம்பு படத்தில் ரசிகர்கள் ரொம்பவும் ஏமாந்து போனார்கள். இந்த வருடம் அஜித்துடன் மங்காத்தா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு ஒரு சவாலான கேரக்டர். வில்லியாக கலக்கினார். இவரிடம் இருந்து அப்படி ஒரு நடிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்து இவரின் வாய்க் கொழுப்பால் அவை தவறிப்போனதாம். அளவுக்கு மேல ஆசைப் பட்டால் இப்படித்தான்!

நயன்தாரா என்று சொன்னாலே… அட அதை விடுங்க வேற ஏதாவது புதுசா பேசுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டனர் ரசிகர்கள். கொழு கொழு என்று இருந்த நயன்தாரா சுருங்கி போன கன்னத்துடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தார். படம் ஹிட், ஆனால் ஆளைப் பார்க்க சகிக்கலை. பிரபுதேவாவுடன் காதல் விவகாரத்தில் ஏதோ வெடிக்கப் போகிறது என்று பார்த்தால், வரும் ஆனா வராது கணக்கா இழுத்துக் கொண்டே போகிறது காதல் மேட்டர். அநேகமா இந்த வருடத்தில் கல்யாணத்தில் முடியலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment