என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Sunday, December 18, 2011

சென்னையில் படம் பார்த்தார் அன்னா ஹசாரே

சென்னையில் முதல்வர் மகாத்மா படம் பார்த்த அன்னா ஹசாரே...!
லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக சென்னை வந்த அன்னா ஹசாரே, பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தை பார்த்து ரசித்தார். கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு ஹசாரே பார்க்கும் படம் இது.

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து போராடி வருகிறார். இதற்கு ஆதரவு திரட்டும் விதமாக சென்னை வந்துள்ளார் ஹசாரே. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் முதலில் இயக்குநர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்வர் மகாத்மா என்ற படத்தின் இந்தி பதிப்பை, சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் அவருக்காக விஷேசமாக திரையிடப்பட்டது. பாலகிருஷ்ணன் ஏற்கனவே காமராஜர் என்ற படத்தை இயக்கியவர். முதல்வர் மகாத்மா படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் எடுத்துள்ளார். இப்படத்தின் விஷேச காட்சியை அன்னா ஹசாரே, கிரண்பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்ட பலர் பார்த்து, ரசித்து, பாராட்டினர்.

தன் நாடு பின்னோக்கி செல்வதை பார்த்த காந்தி, கடவுளிடம் வேண்டி மீண்டும் பூமியில் அவதரித்து, தன் நாட்டை முன்‌னேற்ற எப்படி பாடுபடுகிறார் என்பது தான் படத்தின் கதை. இந்தபடத்தில் காந்தியாக காமராஜர் படத்தில் நடித்த கனகராஜ் நடித்துள்ளார். காந்தியின் சீடராக பாலிவுட் நடிகர் அனுபம் கவுர் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஹசாரேயை சந்தித்து பேசியுள்ளார் இயக்குநர் பாலகிருஷ்ணா. அதன்படி சென்னை வந்த ஹசாரே இப்படத்தை பார்த்து, ரசித்து பாலகிருஷ்ணாவை பாராட்டியுள்ளா.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete