சென்னை,பிப்.08 (டி.என்.எஸ்) ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கபாலி’ படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்க, ரஜினின் மகள் வேடத்தில் தன்ஷிகா நடிக்கிறார்.
மலேசியா, கோவா மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த படப்பிடிப்போடு ‘கபாலி’ படத்தில் தன்ஷிகாவின் காட்சிகள் முடிவடைந்ததால், அவர் படப்பிடிப்பில் இருந்து விலகினார். ‘கபாலி’ படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment