'4G'-ஐ விட 40 மடங்கு அதிக வேகம் கொண்ட இண்டர்நெட் தொழில்நுட்பம் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் ஊழியராக பணியாற்றி வரும் சஞ்சய் கோலி "Next Generation Data Network" என்ற மில்லிமீட்டர் ரேடியோ அலைகளால் இண்டர்நெட்டை வழங்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக காப்புரிமை பெற்றுள்ளார். கிளவ்டு பேஸ்டு ரூட்டிங் சிஸ்டம் வழியாக இந்த இண்டர்நெட் தொழில்நுட்பம் இயங்குகிறது. இதில் உள்ள, டிரான்ஸ்மிட் பவர், மாடுலேஷன், கோடிங், நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்கும் திறன், பாக்கெட் டெலிவரி ஆகியவை '4G'-ஐ விட 40 மடங்கு அதிக வேகத்தில் இண்டர்நெட் சேவையை வழங்க முடியும் என அந்த காப்புரிமையில் கூறப்பட்டுள்ளது.
இதை பேஸ்புக் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
கருத்துகள்
No comments:
Post a Comment