இந்த சம்பவம் நடந்த இடம் எது என்று தெரியவில்லை. இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், மலையாளத்தில் பேசுவது, வீடியோ படத்தில் பதிவாகி இருப்பதால், இது கேரளாவில் நடந்திருக்கக்கூடும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அநாகரீக செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டறிந்து, கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்வரை பரிசு வழங்கப்படும் என்றும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியை தண்டிக்குமாறு கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரிடம் அந்த விலங்குகள் நல அமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
Thursday, February 18, 2016
ஒரு நாய்க்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ காட்சி, ‘வாட்ஸ்அப்’பில்
இந்த சம்பவம் நடந்த இடம் எது என்று தெரியவில்லை. இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், மலையாளத்தில் பேசுவது, வீடியோ படத்தில் பதிவாகி இருப்பதால், இது கேரளாவில் நடந்திருக்கக்கூடும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அநாகரீக செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டறிந்து, கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்வரை பரிசு வழங்கப்படும் என்றும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியை தண்டிக்குமாறு கேரள போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரிடம் அந்த விலங்குகள் நல அமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
Thursday, February 11, 2016
'4G'-ஐ விட 40 மடங்கு அதிக வேகம் கொண்ட இண்டர்நெட்
'4G'-ஐ விட 40 மடங்கு அதிக வேகம் கொண்ட இண்டர்நெட் தொழில்நுட்பம் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் ஊழியராக பணியாற்றி வரும் சஞ்சய் கோலி "Next Generation Data Network" என்ற மில்லிமீட்டர் ரேடியோ அலைகளால் இண்டர்நெட்டை வழங்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக காப்புரிமை பெற்றுள்ளார். கிளவ்டு பேஸ்டு ரூட்டிங் சிஸ்டம் வழியாக இந்த இண்டர்நெட் தொழில்நுட்பம் இயங்குகிறது. இதில் உள்ள, டிரான்ஸ்மிட் பவர், மாடுலேஷன், கோடிங், நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்கும் திறன், பாக்கெட் டெலிவரி ஆகியவை '4G'-ஐ விட 40 மடங்கு அதிக வேகத்தில் இண்டர்நெட் சேவையை வழங்க முடியும் என அந்த காப்புரிமையில் கூறப்பட்டுள்ளது.
இதை பேஸ்புக் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
கருத்துகள்
பிப்ரவரி 12 வெளியாகும் திரைபடங்கள்
பிப்ரவரி 12ம் தேதி நாளை, “ஜில் ஜங் ஜக், வில் அம்பு, அஞ்சல, இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்கள் நாளை வெளிவருகின்றன.
கடந்த மாதக் கடைசியில் வெளிவந்த 'அரண்மனை 2' படம் சித்தார்த்துக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இருந்தாலும் அந்தப் படத்தில் அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை. படத்தின் நாயகனாக சுந்தர் .சி தான் தெரிந்தார். தனி ஹீரோவாக ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சித்தார்த் சொந்தமாகத் தயாரித்த படம் 'ஜில் ஜங் ஜக்' படம் நாளை வெளியாகிறது. மல்டி பிளக்ஸ் தவிர்த்து இந்தப் படம் மற்ற ஏரியாக்களில் போய் சேருமா என்பதுதான் பெரிய கேள்வி.
ஒரு சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்கள். இயக்குனர் சுசீந்திரன் இந்தப் படத்தை வழங்குவதால் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதை இந்தப் படம் பூர்த்தி செய்யுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
விமல், பசுபதி, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'அஞ்சல'. ஒரு டீக்கடையைச் சுற்றி முழு படமும் நகரும் கதை. 'மஞ்சப் பை' படத்திற்குப் பிறகு விமலுக்கு எந்தப் படமுமே வெற்றிப் படமாக அமையவில்லை. அதை இந்தப் படம் மாற்றினாலே போதும்.
கடந்த வாரம் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட 'இரண்டு மனம் வேண்டும்' படம் சில காரணங்களால் கடந்த வாரம் வெளியாகவில்லை, நாளை வெளியாகிறது.
நாளை வெளிவரும் நான்கு படங்களுமே முன்னணி ஹீரோக்கள் இல்லாத சிறு பட்ஜெட் படங்கள்தான், ரசிகர்கள் இந்தப் படங்களை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்பது இன்றே யூகிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.
Wednesday, February 10, 2016
கபாலி’ படத்தில் இருந்து வெளியேறிய தன்ஷிகா..
சென்னை,பிப்.08 (டி.என்.எஸ்) ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கபாலி’ படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்க, ரஜினின் மகள் வேடத்தில் தன்ஷிகா நடிக்கிறார்.
மலேசியா, கோவா மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த படப்பிடிப்போடு ‘கபாலி’ படத்தில் தன்ஷிகாவின் காட்சிகள் முடிவடைந்ததால், அவர் படப்பிடிப்பில் இருந்து விலகினார். ‘கபாலி’ படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Thursday, February 4, 2016
மொபைல் நம்பரை தெரியாமல் மறைக்க
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டுள்ளது. நாள்தோறும் ஏற்படும் வளர்ச்சியில் ஆச்சர்யம் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. அந்த வகையில் ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.
மொபைல் எண்ணை மறைத்து பேச...
உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படியும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.
மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.
பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். மற்றபடி பிளாக் மெயில் செய்வதோ, மிரட்டுவதோ... வேறு பல சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ செய்யலாம் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயில் கம்பியை எண்ண வேண்டியதுதான்..
நன்றி.