யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 450 காலியிடங்கள்
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் புரபேஷனரி அதிகாரி பணிகளில் சேர 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டர் பிரிவில் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். 2011-ல் நடத்தப்பட்ட வங்கிப் பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஓ.பி.சி. பிரிவினர் 125 மதிப்பெண்களும், பொதுப் பிரிவினர் 138 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு IBPS நடத்திய வங்கிப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50 (ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ மாற்றுத்திறனாளி பிரிவினர்), ரூ.200 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2012
விவரங்களுக்கு: http://www.unitedbankofindia.com/
செயில் நிறுவனத்தில் 523 டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிட்டர், எலெக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ், ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏ.சி., டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2012
விவரங்களுக்கு: http://www.sail.shine.com/
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் 345 காலியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிர்வாக அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.17,240
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2012
விவரங்களுக்கு: http://www.nationalinsuranceindia.com/
டிரெய்னி பைலட் பணியிடங்கள்
மத்திய அரசின்கீழ் செயல்படும் கேபினெட் செக்ரட்டரியேட்டில் டிரெய்னி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் அல்லது ஹெலிகாப்டர் பைலட் கமர்ஷியல் லைசென்ஸ் பெற்றிருக்கவேண்டும். 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். மாத ஊதியம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2012
விவரங்களுக்கு: http://www.velaikal.blogsport.in/
2,195 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்
எ ல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, சாஷாஸ்ட்ரா சீமா பால் ஆகிய நிறுவனங்களில் காலியாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) தேர்வை நடத்தவுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR),
Staff Selection Commssion, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu - 600006
விவரங்களுக்கு: http://ssc.nic/ in
இ.சி.ஜி.சி. நிறுவனத்தில் புரபேஷனரி எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி பணியிடங்கள்
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் புரபேஷனரி எக்ஸிக்யூட்டிவ் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு 2011-ல் IBPS நடத்திய வங்கிப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதல் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம் அல்லது 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2012
விவரங்களுக்கு: www.ecgc.in
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சார்
தொடர்ந்து வேலை வாய்ப்பு செய்திகளை வழங்குங்கள் ....
ReplyDeleteஇந்திய அரசு மற்றும் ஸ்விஃப்ட் குறியீடு, MICR குறியீடு, கிளை முழு முகவரி, விவரங்கள், வங்கி வாடிக்கையாளர் பாதுகாப்பு இணைந்து தனியார் அனைத்து வங்கிகளும் Code என்ன குறியீடு பட்டியலில் இல்லை, கட்டணமில்லா எந்த, மின்னஞ்சல் ஐடி முதலியன கண்டுபிடிக்க
http://www.codebankifsc.com/