தொழில் என்றால் போட்டி, பொறாமை எல்லாம் இல்லாமல் போகுமா என்ன!! அப்படித்தான் ஆகி விட்டது விமல் - சிவ கார்த்திகேயன் கதையும். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி விமலை விம்ம வைத்திருப்பதாக ஊரெங்கும் ஒரே பேச்சு.
விசாரித்தால், விமலை பொறுத்தவரை அவரது கால்ஷீட் காலண்டர் ஓவர் டைம் பார்த்தால் கூட போதாது என்பது போல் நிரம்பி இருக்கிறதாம்.அவர். யார் தயாரிப்பாளர், யார் டைரக்டர் என்றெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கால்ஷீட் கொடுக்க முன்வந்ததன் விளைவு கைவசம் சுமார் ஏழு படங்கள் இருக்கிறது இப்போது. இந்த லட்சணத்தில் வாய்மொழியாக கொடுத்திருக்கிற உறுதிமொழி வேறு ஏகப்பட்ட இயக்குனர்களை இவர் பின்னால் சுற்ற வைத்திருக்கிறதாம். இப்படி விமல் கால்ஷீட்டை பெற முடியாத பல இயக்குநர்கள் சிவ கார்த்திகேயன் பக்கம் திரும்பி வருகின்றனராம்.
இது மட்டும் அல்ல, அண்மையில் ஜெய் கேட்ட சம்பளம் பொறுக்காமல் தனது கம்பெனி தயாரிக்கும் படத்தில் விமலை ஒப்பந்தம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் கூட கால்ஷீட் குழப்பம் காரணமாக விமலை நீக்கிவிட்டு சிவ கார்த்திகேயனை ஒப்பந்தம் செய்துவிட்டார் என்பது தான் விமலின் விம்மலுக்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம். அடடா விமல் சார்..வட போச்சே...!?
No comments:
Post a Comment