என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, March 27, 2013

சாப்பிடும்போது இந்த மேட்டரைப் படிக்காதீங்க


ப்ப நாங்க நின்னுக்கிட்டு இருக்குற இந்த இடம் தென் அமெரிக்காவுல இருக்குற உலகின் அடர்ந்த காடான அமேஸான் மழைக் காட்டோட நடுப் பகுதி. அனகோண்டா பாம்புகளும் ராட்சத முதலைகளும் கொடிய மிருகங்களும் வாழுகிற இந்தக் காட்டுக்குள்ள எப்படி நாங்க உயிர் தப்பிப் பிழைக்கப்போறோம்கிறதை உங்களுக்குச் செயல் விளக்கம் கொடுக்கப் போறோம். இங்கே உயிர் வாழ்றது ரொம்ப சவாலான விஷயம் மட்டும் இல்லை. சாகசமும்கூட!''

'இந்தக் காதல் தம்பதியர் தங்களது திருமண வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்’ என பில்ட்-அப் வார்த்தைகளால் நம் எல்லோரின் பல்ஸ் ஏற்றும் மைக்கேல் ஹாக் -ரூத் இங்கிலாந்து தம்பதியை நீங்கள் டிஸ்கவரி சேனலின் 'மேன் வுமன் வைல்டு’ நிகழ்ச்சியில் பார்த்திருக்கக்கூடும். உண்மையில் நடுச் சாமத்தில் ஒன்பாத்ரூம் எழுந்து போகக்கூட பயப்படும் என்னைப் போன்றவைக்குக் கண்டம்விட்டு கண்டம்போய் இப்படிக் காட்டுக்குள்ளே கிடந்து தொலைந்து தொலைந்து விளையாடுறதுல என்னடா சாகசம்னு கேட்கணும்போல இருக்கும். நல்ல கொலைப் பசியில் டிபன் சாப்பிட உட்கார்ந்தும் சாப்பிட முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கே... அய்ய்யோயய்யோயய்யோ! இதோ அந்தக் காதல் தம்பதியரின் சாம்பிள் அட்ராசிட்டி.
ஒருமுறை கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் போரியல் காட்டுக்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள் மைக்கேல்-ரூத் தம்பதி. காட்டுக்குள் எவ்வளவு தேடியும் உணவு கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆர்மியில் வேலைபார்த்த மைக்கேலுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். வாகான ஒரு இடத்தில் மரம் மட்டைகளை வைத்துத் தூங்குவதற்குக் கூடாரம் அமைத்துவிடுகிறார். ஒரு கவட்டக் கம்பை வெட்டி ஈட்டிபோல ஒன்றைத் தயார் செய்து மீனைப் பிடிக்க காட்டுக்குள்ளே இருக்கும் ஓடைக்குப் போகிறார். அதில் மீனைத் தவிர மற்ற எல்லாம் மாட்டிக்கொள்கின்றன. 'இன்னிக்கு எங்களுக்குத் துரதிர்ஷ்டமான நாள். ரூத் ரொம்ப ரொம்ப வருத்தப்படுவா’ என்பார் கேமராவைப் பார்த்தபடி. அடுத்து அங்கு ஓடும் புனுகுப் பூனையை வேட்டையாட பொறி வைப்பார். மாட்டிக்கொண்டால், 'எங்களை மன்னிச்சுடு’ என்றபடி சோடி போட்டுத் தின்பார்கள். ஒருவேளை புனுகுப் பூனை எஸ்ஸாகிவிட்டால், 'என்னை மன்னிச்சிரு’ என்றபடி ரூத்துக்குப் பாச முத்தம் கொடுப்பார். 'பரவாயில்லை மைக்கேல். நேத்து சாப்பிட்ட கேப்ரியல் தவளை இன்னும் நெஞ்சுக்குள் இருக்கு’ என்பார் பாசக்கார பத்தினி. இரவு தூங்கப் போகும்முன் நூல் கொண்டு பொறி அமைப்பார். மறுநாள் எலிக்குப் பதில் எலிப்புழுக்கை மட்டுமே இருக்கும். 'ஓஓஓஓவ்... கடவுளே... இப்ப நாம இக்கட்டான நிலைமையில இருக்கோம்னு நினைக்கிறேன்’ என்று பரிதாபமாக முகத்தை வைத்தபடி சொல்வார் மைக்கேல். 'ஐயோ மைக்கேல், ஏதாச்சும் சாப்பிட ரெடி பண்ணுங்க’ என்பார் சூழலை உணராத ரூத். 'ரூத் பசி தாங்க மாட்டா. இந்தக் காட்டுக்குள்ள பெனிசியானு ஒரு பூச்சி இருக்கு. அதோட தலையையும் கொடுக்கையும் இப்படிப் பிச்சிப் போட்டுட்டா, ஈஸியா சாப்பிடலாம். இதுல புரோட்டீனும் கால்சியமும் நிறைய இருக்கு’ என்றபடி ஒரு வண்டைப் பிடித்து அப்படியே கபளீகரம் செய்வார். நம்மைப்போலவே வாந்தி எடுக்கத் தயாராகும் முகபாவத்தோடு ரூத், 'உவ்வே’ என்பார். அதெல்லாம் செம போங்கு. கொஞ்ச நேரத்தில், 'ம்ம்ம்ம்.... செம்ம டேஸ்ட்டா இர்ர்ர்ர்க்கு!... இதோட சுவை அழுகின பூசணிக்காயையும் இதோட இறைச்சி கரப்பான் பூச்சியைப்போலவும் இருக்கு’ என ஃபுல் கட்டு கட்டுவார்.
சில காடுகளில் இலை தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் இவர்கள் நியூசிலாந்தின் ராயல் காட்டுக்குள் ஓர் ஆமையைப் பிடித்துவிடு கிறார்கள். ரூத்துக்கு அதை வளர்க்க ஆசை.  மைக்கேலுக்கு அதை வறுத்துத் தின்ன ஆசை. இப்படி வருத்தப்படும் மனைவியையும் வறுத்துத் தின்னும் கணவனையும் உலகில் எங்கேயாவது பார்த்திருக் கீங்களா பாஸ்? 'எனக்கு ரொம்பப் பாரமா இருக்குறது, இப்போதைக்கு நீதான் ரூத்’ என்று சீண்டுவார் மைக்கேல். 'ஓ... அப்படினா நான் உங்களுக்குப் பாரமாவா இருக் கேன்...? உங்களுக்கு என் மேல காதலே இல்லை’ என்று செல்லக் கோபம் காட்டுவார் ரூத். 'ஆஹா... ஆஹா... இவிய்ங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதைப் பார்த்தா, அந்த சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும் சண்டை போடுற மாதிரியே இருக்குல்ல?’- இது நம்மோட மைண்ட் வாய்ஸ். எல்லாம் சரி, இவிய்ங்க எப்பவுமே இப்படித் தான்னு 'மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை ஒரு சேஞ்சுக்குப் பார்த்தால் அங்கே பேர் க்ரில்ஸ் செமத்தியான செயல் விளக்கம் கொடுத்து நம்மை டரியல் ஆக்குவார்.
'உலகத்திலேயே கடினமான விஷயம் நம்மோட உடம்புல நீர் வற்றிப் போகாம பார்த்துக்கிறதுதான். இதோ இந்த கலஹாரிப் பாலை வனத்துல தண்ணிக்கு வழி இல்லாததால என்னோட சிறுநீரையே நான் குடிக்....!’
ஐயய்யோ... கொடுமை, கொடுமைனு கோயிலுக்குப் போனா..

முதல்வரை முத்தமிட்டாரா பவர் ஸ்டார்


புதுச்சேரியில் பவர் ஸ்டார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு. பக்கத்திலேயே செகரட்ட‌ரி. பட்டு சால்வை வாங்கி படாரென்று உள்ளே நுழைந்து முதல்வர் ரங்கசாமியிக்கு சால்வை அணிவித்து கௌரவித்திருக்கிறார் பவர் ஸ்டார். இந்த சந்திப்பில் அவர் ரங்கசாமியின் கையில் முத்தமிட்டு ம‌ரியாதை செலுத்தியதாக தகவல். வேகம் தணிந்ததா?


நான் சரக்கு நீ ஊறுகாய் என்ற காவியத்தை அண்ணா விருது வாங்கிய ராம.நாராயணன் இயக்கி வருகிறார். ஹீரோ நம் பவர் ஸ்டார் சீனிவாசன். இதன் படப்பிடிப்பு புதுச்சpயில் நடந்து வருகிறது (ஆஹா சரக்குப் படத்துக்கு இதைவிட ச‌ரியான லொகேஷன் அமையாது). மேலே உள்ள முதல்வருடனான சந்திப்பு நிகழ இந்த படப்பிடிப்புதான் காரணம்.

போகிற போக்கைப் பார்த்தால் சீனிவாசன் சீக்கிரமே சிஎம் ஆனாலும் ஆச்ச‌ரியமில்லை. தமிழனோட ரசனை அப்படி.

Wednesday, March 13, 2013

பரதேசியில் பாலாவின் உண்மையான முகம்: அதிர்ச்சியளிக்கும் காணொளி


ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படங்களை உருவாக்குவதில் எவ்வளவு மெனக்கெடுவார்கள் என்பதற்கு இயக்குனர் பாலா சிறந்த உதாரணம்.
வரும் 15ம் திகதி வெளியாகவுள்ள பாலாவின் பரதேசி படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அதர்வா, தன்ஷிகா, வேதிகா இணைந்துள்ள இப்படம், தேயிலை தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை பற்றியது.
இந்நிலையில் பரதேசி படப்பிடிப்பில் பதிவு செய்யப்பட்ட ஒரு டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துமென தெரிகிறது. பாலாவின் மெனக்கெடல், அவருடைய கோபம், ஒரு கதாப்பாத்திரத்தை வெளிக்கொணரும் விதம் என அனைத்தும் பார்ப்பவர்களை இவர் இப்படியா? என யோசிக்க வைக்கிறது.

Tuesday, March 12, 2013

செல்போனை SMS மூலம் சார்ஜ் செய்யலாம்



நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
ஆனால் செல்போன் பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை சார்ஜ் செய்ய எங்காவது மின்சார சுவீட்சைத்தான் தேடிப்போக வேண்டும். இனி இந்த சிரமம் வேண்டாம். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
லண்டனைச் சேர்ந்த பப்பல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். செய்த உடனே சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே சார்ஜ் ஆகும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக செல் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் இருப்பிடங்களில் டெவிஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். அதன்மூலம் சூரியஒளி மின்சார நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது.
ஒரு போனில் பேட்டரி சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இதற்காக அதிக செலவு ஆகாது என்று பப்பல்லோ கிரிட் நிர்வாகி டேனியல் பெக்கேரா தெரிவித்தா

உங்கள் லேப்டாப் அதிகம் சூடாகிறதா.? தடுக்கலாம் வாங்க..!


கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.




தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.


அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.








பிரபாகரனும் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்: திடுக்கிடும் தகவல்கள்


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்தது. அப்போது சுமார் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ஈவுஇரக்கமின்றி இலங்கை ராணுவத்தினரால் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
எனவே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் விரைவில் கூட இருக்கின்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு கண்டன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது.
prabhakaran dead body பிரபாகரனும் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்: திடுக்கிடும் தகவல்கள்
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவம் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதை இங்கிலாந்தை சேர்ந்த “சேனல்-4” டி.வி. சமீபத்தில் அம்பலப்படுத்தியது. பால்வடியும் முகத்துடன் கூடிய பச்சிளம் பாலகனான பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுவது போன்றும், உடலில் 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது. ஆனால் போர் நடந்தபோது பாலசந்திரன் கொல்லப்பட்டான் என இலங்கை ராணுவம் தெரிவித்து வந்தது.
தற்போது அவனை ராணுவம் பிடித்து சென்று ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் உலக மக்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விடு தலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் போரில் சாகவில்லை. அவரையும் சிங்கள ராணுவம் பிடித்து சிறை வைத்து சித்ரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளத
Prabhakarans body 2 பிரபாகரனும் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்: திடுக்கிடும் தகவல்கள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதி மதியம் 1 மணிக்கு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிணம் கிடந்ததாகவும், அதை ராணுவம் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தது. பிரபாகரன் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் போட்டோவையும் வெளியிட்டது.
முன்னதாக இரவில் முல்லிவாய்க்கல் பகுதியில் தப்பி ஓட முயன்ற விடுதலைப்புலிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தது. அப்போது நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் சிலருடன் பிரபாகரனும் இறந்ததாகவும், மறுநாள் உடல் கண்டெடுக்கப் பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
பிரபாகரனின் உடல் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவரது உடலை சுற்றி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர். அவரது தலையில் “பேண்டேஜ்” (தலைகட்டு) போடப்பட்டிருந்தது. தலைப் பகுதியில் எலும்புகள் நொறுங்கி இருந்தன. அவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது மிக அருகில் இருந்து கனரக ஆயுதத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கண்கள் திறந்த நிலையில் இருந்தன. அதை வைத்து பார்க்கும் போது அவரை பிடித்து வந்த சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியில் கண்கள் திறந்தபடியே உயிர் பிரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
அவரது பிணம் கிடந்த இடத்தில் அதாவது தலையின் அடிப்பாகத்தில் ஏராளமான ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அக்காட்சி போட்டோவில் தெரிகிறது. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட 20 நிமிடத்தில் உடலில் இருந்து ரத்தம் வெளிவராது. உறைந்து விடுவதால் அது நின்று விடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முதல்நாள் இரவில் நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும, மறுநாள் தான் அவரது உடல் கண் டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் போட்டோவில் தலையின் அடியில் ரத்தம் வெளியாகி கொண்டிருப்பது தெரிகிறது. அதை வைத்து பார்க்கும்போது, நந்திக் கடல் பகுதியில் நடந்த போரில் பிரபாகரன் சாக வில்லை. அப்போது அவர் இறந்திருந்தால் ரத்தம் கடல் நீரில் கரைந்திருக்கும். பிரபாகரனை பிடித்து வந்து ராணுவ முகாமில் வைத்து சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் படம் பிடித்து டி.வி.யில் ஒளிபரப்பு செய்துள்ளனர் என்றும் நிபுணர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்

கோழியுடன் தன் கையையும் சேர்த்து பொரிக்கும் சமையற்காரர் (வீடியோ)


Chiang Mai என்ற தாய்வானிய சமையல்காரருக்கு யாருக்குமே இல்லாத சிறப்புத்திறமை ஓன்று இருக்கிறதாம், இவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்துவருபவர். கொதிக்கும் எண்ணைக்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்தே எடுக்கிறார் .... கோழி பொரிவது போல இவரின் கைகளுக்கு எதுவும் ஆவதில்லை என்பதுதான் அதிசயம் ..
Chiang Mai என்ற தாய்வானிய சமையல்காரருக்கு யாருக்குமே இல்லாத சிறப்புத்திறமை ஓன்று இருக்கிறதாம், இவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்துவருபவர். கொதிக்கும் எண்ணைக்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்தே எடுக்கிறார் .... கோழி பொரிவது போல இவரின் கைகளுக்கு எதுவும் ஆவதில்லை என்பதுதான் அதிசயம் ..

சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு எடுக்கும் லாவகமே அவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது. கொதிக்கும் எண்ணையில் கையை விடும் பொழுது அவரின் கைகளில் சிறு காயமோ , கொப்பளமோ ஏற்படுவதில்லை.

-

மகளின் காதலனுடன் குடும்பம் நடத்தும் தாய் (அதிர்ச்சி வீடியோ)

zதிருமணமாகி 22 ஆண்டுகள் கணவனுடன் ஒன்றாக வாழ்ந்து, 4 பிள்ளைகளை பெற்றெடுத்த‍ தாய், தனது கணவனையும், 4 பிள்ளைகளையும் தவிக்க‍ விட்டுவிட்டு, தனது மகளின் காதலுட னேயே ஓடிப்போய் தகாத உறவு டன் வாழ்ந்து வருகிறார். அத் தாயை மீட்டு, அவரது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்த் து வைக்கவும் மற்றும் அந்த மகளின் காதலனையும் அவனது பெற்றோருடன் சேர்ந்து வைக்க‍ வும் ஜி டிவி தனது சொல்வதெ ல்லாம் உண்மை நிகழ்ச்சியில் போராடும் காட்சிகள், “எனது அம்மாவிற்கு முன்பாகவே, என்னை காதலித்தான்” என்று அந்த தாயின் மகள் சொன்ன‍ தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது.

“ஏண்டா! என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு என்னோட வாழ்க்கையையும் கெடுக்க‍றீயே! ” என்று சொல்லி அவனை நாலு போடு போட்டு விட்டு, தனது கணவன் மற்றும் குழந்தையு டன் சேர்ந்து வாழ முடிவெடுக்க‍ வேண்டிய இந்த தாய்! அவனிடம், “எனக்கு முன்னே நீ யாரையாவது காதலித்தாயா என்று உன்னிடம் கேட்டேன் அல்ல‍வா?, நீ ஏன் என்னிடம் சொல்லாமல் இதை மறைத்தாய்!”

என்று சிணுங்குவது தான் கொடூரத்தின் உச்ச‍மாக தெரிகிறது. த‌னது மகளின் வாழ்க்கையை ஏன் இப்ப‍டி கெடுத்தாய் என்று அவனை ஒரு கேள்விக்கூட கேட்க இவளுக்கு தோன்றவில்லை. என்ன‍ கருமம்டா இது! இதை மேற்கொண்டு வரிகளாக வடிக்க‍ நான் விரும்ப‍வில்லை. ஆகையால் நீங்களே வீடியோவை பார்த்து முடிவை தெரிந்து கொள்ளுங்கள்

கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் பணியாரம் சுடும் பாட்டி


நெய்யில் பணியாரம் சுட்ட மூதாட்டி
கடந்த மகா சிவராத்திரி நிகழ்வு அன்று இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில்  பூசைகள் இடம்பெற்ற போது அங்கு உள்ள ஒரு மூதாட்டி பூசை நிகழ்வுகளின் போது கொதிக்கும் நெய்யில்  தனது வெறும் கைகளால் பணியாரம் சுட்டு அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பாக சன் செய்திகளில் வெளியாக காணொளி உங்கள் பார்வைக்காக.......
செய்தி வகை: 

17 வயது இளம்பெண்ணை 12 வது திருமணம் செய்த ஒபாமாவின் அண்ணன்வின் அண்ணன்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். இவருக்கு மொத்தம் 12 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்று கூறுகிறார் மாலிக். இருப்பினும் கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் இவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். இவருக்கு மொத்தம் 12 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்று கூறுகிறார் மாலிக். இருப்பினும் கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் இவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

இவருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் இடையே இன்னும் நல்ல தொடர்பு உள்ளதாம். அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்களாம். வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் போய் தம்பியைப் பார்த்து விடுவாராம் மாலிக். கணக்காளராகப் பணியாற்றி வரும் மாலிக், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வருகிறார். தனது தம்பி தங்களது குடும்பத்துக்குப் பணம் எதுவும் தருவதில்லை என்று வருத்தப்படும் மாலிக், தனது கென்ய குடும்பத்துக்கு ஒபாமா நிதியுதவி தரலாம். இருப்பினும் நான் அதை வலியுறுத்துவதில்லை என்றார்.

தம்பி பெயரைப் பயன்படுத்தி நான் புகழ் பெற பார்க்கிறேன் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது தவறு. என் தம்பியின் பெயரை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது என்று கோபமாக கேட்கிறார் மாலிக். மேலும் ஒபாமாவுக்கு முன்பேதான் பிறந்து விட்டதாக கூறும் மாலிக், எனக்குப் பின்னால் பிறந்தவர்தான் அமெரிக்க அதிபர் என்றும் மார் தட்டிச் சொல்கிறார். கடந்த வாரம் நடந்த நாடு தழுவிய தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். ஆனால் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதைப் பெரிய தோல்வியாக நினைக்கவில்லை. கென்ய அதிபராவேன். அது உறுதி. அதுதான் எனது ஒரே லட்சியம் என்று கூறுகிறார்.

மாலிக்குக்கு மொத்தம் 12 மனைவிகள். இதில் 12வதாக அவர் மணந்துள்ள பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது. அவரது பெயர் ஷீலா அன்யாங்கோ. வெறும் 24 பவுண்டு பணத்தை நன்கொடையாக கொடுத்து இப்பெண்ணை மணந்து கொண்டாராம் மாலிக். ஆனால் தன்னை மாலிக் எப்போது பார்த்தாலும் அடித்து உதைப்பதாக அந்தப் பெண் இப்போது புலம்புகிறார். மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டதுதான் நான் செய்த பெரிய தப்பு.எப்போது பார்த்தாலும் அடிக்கிறார். அசிங்கமாக பேசுகிறார். கத்திக் கொண்டு இருக்கிறார என்று புலம்புகிறார் ஷீலா. ஆனால் தான் மனைவியை அடிப்பதில்லை என்று மறுக்கிறார் மாலிக்.

ஒபாமா மற்றும் மாலிக்கின் தந்தை ஒருவர்தான். ஆனால் தோற்றத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. மாலிக் சுத்தமான கென்யர் போல தோற்றமளிக்கிறார். இருப்பினும் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே பாசப் பிணைப்பும், நட்பும் உள்ளதாம். திருமணத்திற்கு முன்பு ஒபாமாவின் மனைவி மிஷல் கென்யா வந்து ஒபாமா குடும்பத்தினரை சந்தித்துப் பேசி மகிழ்ந்தாரம். மிஷல் ஒரு அருமையான பெண் என்று பாராட்டுகிறார் மாலிக்

Monday, March 11, 2013

50 கோடிகளில் புரண்ட புரட்சிதலைவி, குவாட்டரில் புரண்ட விவசாயிகள்.


புரட்சிதலைவி விழாவில் கோடிகளில் புரண்ட ‘விவசாயிகள்’ குவாட்டரில் புரண்டனர்! 

தஞ்சை விவசாயிகளின் செல்வச் செழிப்பு தெரியவந்துள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகள் கோடிகளில் புரள்கிறார்கள் என்ற ரகசியமும் வெளியாகியுள்ளது. 

தஞ்சையில் நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் விவசாயிகள்’ ுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் விவசாயிகள் (!) ஐம்பது கோடி ரூபாயை தண்ணீர் போல செலவிட்டார்கள்! 

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தஞ்சையில் நேற்று நடைபெற்றது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாய சங்கங்களால் எப்படி இந்தனை கோடிகளை செலவளித்து பாராட்டு விழா நடத்த முடிந்தது என ஆச்சரியப்பட்டு போனார்கள் அப்பாவி பொதுமக்கள். 
“விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு” என்று மற்றைய அரசியல்வாதிகள் சும்மா பேச்சுக்கு சொல்வார்கள். ஆனால், விவசாயிகளை கோடிகளில் புரளவிடும் சாதனையை ஓசைப்படாமல் செய்து காட்டியிருக்கிறார், புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இனி, தஞ்சை விவசாயிகளும், நாஞ்சில் சம்பத் போல இன்னோவா காரில் பறந்து திரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடந்த மாதம் 27-ம் தேதி தான், தமிழ்நாடு காவேரி நீர்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் உள்ளிட்ட 14 பேர் தமிழக முதல்வரை சந்தித்தனர். அன்றே பாராட்டு விழா அறிவிப்பு வெளியானது. 

மிக குறுகிய நாட்களில், வியக்க வைக்கும் அளவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் உயரதிகாரியாக உள்ள ‘விவசாயி’ ஒருவர் தங்சாவூருக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார். மன்னார்குடி ட்ரவல்லர்ஸ் பங்களாவில் தங்கியிருந்த அந்த விவசாயி, தனது டொயோட்டா இன்னோவா காரில் பறந்து பறந்து ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார். 

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரிக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட, முட்புதர்களும் குப்பைகளும் நிறைந்த இடம் தடாலடியாக சுத்தம் செய்யப்பட்டு, விழாவுக்காக தயாரானது. 

முதல்வர் வழி நெடுகிலும் வைத்திருந்த ஃபிளக்ஸ்களில், “உழவர்களின் உயிரே… விவசாயிகளின் வாழ்வாதாரமே… காவிரி தாயே… இனி யானை கட்டி போரடிப்போம்” என்று விவசாயிகள் முதல்வருக்கு ஓவர் டோஸ் பாராட்டு மழை பொழிந்திருந்தார்கள். 

இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வருவதற்கான வாகன செலவை அ.தி.மு.க மாவட்ட கழகம் ஏற்றுக் கொண்டது. மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து எல்லாம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை திரட்டி வந்திருந்தார்கள். 

விழாவுக்கு வரும் கட்சி விவசாயிகளுக்கு தலைக்கு 200 முதல் 500 ரூபாய் ரேட் பேசப்பட்டிருந்தது. தவிர, இரண்டு வேளை சாப்பாடு பிளஸ் ஒரு குவாட்டர் செலவை உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவு! 

கழக கண்மணிகள் விழாவுக்கு வரும்போது கட்சிக்காரர்கள் போல வரலாமா? இதனால், கழக கண்மணிகள் கழனிவாழ் விவசாயிகள் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ஈரோடு, திருப்பூரில் இருந்து பண்டல் பண்டலாக பச்சை துண்டு வரவழைக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

விழாவுக்கு வந்தவர்களுக்கு இந்தத் துண்டுகளையும் போட்டு பந்தலுக்கு வழியனுப்பி வைத்தார்கள். 

பச்சைத் துண்டு போட்ட கழக விவசாயிகள், மதிய உணவுடன் வழங்கப்பட்ட குவாட்டர் தள்ளாட்டத்துடன் விழா பந்தலுக்குள் தடவிதடவி சேர் தேடிய காட்சி, விவசாயிகளுக்கே பெருமை சேர்க்கும் காட்சியாக அமைந்திருந்தது

விழா பந்தலில் போடப்பட்டிருந்த சேர்களின் எண்ணிக்கை 29,000 தான். ஆனால், திரட்டப்பட்ட விவசாயிகள் கூட்டமோ ஒன்றரை லட்சம் பேரை தாண்டும். 

மாலை 5 மணிக்கு தொடங்கி 7 வரை விழா நடைபெறும் என்றுதான் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் கூட்டத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்த முதல்வர், மற்றவர்களை நீண்ட நேரம் பேச அனுமதித்ததோடு, அழைப்பிதழில் இடம்பெறாத தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கோவிந்தராஜன், கு. தங்கமுத்து உள்ளிட்டவர்களையும் பேச சொன்னார். 

இதனால் இரவு 7.50 வரை விழா இழுத்தது. நேரம் ஆக, ஆக விவசாயிகள், “இரவு டிபனுடனும் குவாட்டர் உண்டுதானே?” என நிகழ்ச்சி அமைப்பார்களிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 

அ.தி.மு.க.-வின் கிளை அமைப்பான (தமிழக) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேச்சைக் கேட்டு பலமுறை குலுங்கிச் சிரித்தார் முதல்வர். “கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடித்தவர்களை மேன் ஆஃப் த மேட்ச் என்பார்கள். அந்த தொடர் முழுக்க தொடர்ச்சியாக சதம் அடித்தால் மேன் ஆஃப் த சீரிஸ் என்பார்கள். நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மேன் ஆஃப் த சீரிஸாக திகழ்கிறார்” என்றார் தா.பா. சீரியசாக! 

யாராவது விவசாயிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் கட்சிக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடியிருப்பார்கள். 

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவிரித் தாய்க்கு அலங்கார வளைவுகள், தஞ்சை முழுவதும் குழல் விளக்குகள், திருச்சி முதல் தஞ்சை வரை இருபுறமும் அ.தி.மு.க கொடிகள், ‘வரவேற்பு பதாதைகள், சுவரொட்டிகள், தஞ்சையில் இதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்ட ஹெலிபேடு, மிக பிரமாண்டமான விழா அரங்கம், மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கரும்பால் இருபுறமும் தோரணம். 

பத்தடிக்கு ஒரு வாழைமர வளைவு, என்று உச்சபட்ச ஆடம்பரமாக நடந்து முடிந்திருக்கிறது தஞ்சை விவசாயிகளால் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா. 

இதற்கான மொத்த செலவு ஐம்பது கோடி ரூபாயை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். 

கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு கையேந்தி கிடைக்காமல் வறுமையில் உழன்று தற்போது மாநில அரசிடம் நிவாரணம் கேட்டு கையேந்தி நிற்கும் விவசாயிகளுக்கு ஏது இந்தளவுக்கு பணம்? விவசாயிகள் செலவு செய்ய வேண்டுமென்றால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த (அரசு நிவாரணம் பெற்றுள்ள மற்றும் பெறப்போகும்) அனைத்து விவசாயிகளும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இந்த நிதி சேராது. 

விசாரித்தால், ஒரு ரூபாயை கூட நிஜ விவசாயிகள் செலவு செய்ய வில்லையாம். எல்லாம் ஆளும் கட்சி விவசாயிகளின் உபயம்தானாம். 

நிவாரணம் போதாது என்று சொல்லி விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், இந்த பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தவில்லை என்றால் முதல்வரிடம் டோஸ் வாங்க வேண்டும் என்று நினைத்த அ.தி.மு.க.வினரும், அமைச்சர்களும் தங்களுக்குள் வேலைகளை பிரித்துக் கொண்டு, ‘கணக்காக’ செய்து முடித்திருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு செலவை ஏற்றுக் கொண்டார்கள். 

எல்லாம் ஒரு இன்வெஸ்ட்மென்ட்தானே.. போட்ட காசை ஒரு கான்ட்ராக்ட்டில் பிடித்து விடலாம்! 

விவசாய சங்க பிரமுகர்களை வெறும் அலங்கார பொம்மைகளாக மட்டும் மேடையேற்றினார்கள். விழாவுக்கு வந்திருந்தவர்களில் உண்மையான விவசாயிகள் பத்து சதவிகிதத்தை தாண்டாது. 

நிஜ விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? “முதல்வர் விழாவிற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மறைமுகமாக செலவிடப்பட்ட கோடிகளை நிவாரண நிதியில் சேர்த்திருந்தால் தற்போது வெறும் ஐந்நூறும் ஆயிரமும் பெறும் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவாவது நிவாரணம் கிடைத்திருக்குமே” என்று ஆதங்கப்படுகிறார்கள். 

“ஆடம்பரத்தை வெறுத்து விட்டேன் தமிழக மக்களுக்காக வாழ்கிறேன்” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் முதல்வர் எப்படி இத்தனை ஆடம்பரமான ஒரு விழாவுக்கு சம்மதித்தார்? ஒருவேளை மம்மி ரிட்டர்னா

உயிர்போகும் நேரத்தில் ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறந்த பாடிகார்ட்

இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது. அதுவும் குழந்தைப் பிராயம் அமையவே கூடாது. அப்படிப்பட்ட சோகமான வாழ்வை வாழ்ந்து முடித்துள்ளான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன். பிரபாகரன் குடும்பத்தின் கதி என்ன என்பது பெரும் சோகமான மர்மமாக உள்ளது. மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டு விட்டார். மற்றவர்கள் குறித்துத் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றவர்கள் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சார்லஸ் ஆண்டனியாவது போரிட்டு உயிரிழந்தார். ஆனால் பாலச்சந்திரன் மரணம்... இதயத்தைப் பதற வைப்பதாக உள்ளது அந்த பாலகனின் கடைசி நிமிடங்கள். உயிருடன் பிடித்து உட்கார வைத்து, பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்து, துடிக்க துடிக்க நெஞ்சில் புல்லட்களை இறக்கி கொடூரமாகக் கொன்றுள்ளனர் இதயமே இல்லாத மனிதப் பதர்கள். இந்த நிலையில் பாலச்சந்திரனின் சிறு பிராயத்து வாழ்க்கை குறித்து அவரது பாடிகார்டுகளில் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளார். சுடரொலி பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது
.



எப்போதும் தனிமையில்:

பாலச்சந்திரன் எப்போதும் தனிமையிலேயே இருக்கும் நிலையில் இருந்து வந்தான். அவனது அண்ணன் சார்லஸ் ஆண்டனி எப்போதும் கம்ப்யூட்டரிலேயே மூழ்கியிருப்பார். சகோதரி துவாரகா புத்தகம் படித்தபடி இருப்பார். பாலச்சந்திரனுக்கு விளையாடக் கூட ஆள் இருக்காது

பாடிகார்டுகள் மட்டுமே துணை

 பாதுகாப்பு கருதி பாலச்சந்திரன் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. எனவே பேசவோ, விளையாடவோ தனது பாடிகார்டுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை பாலச்சந்திரனுக்கு.

எப்போதாவதுதான் வருவார் பிரபாகரன்


 தலைவர் பிரபாகரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். எப்போதாவதுதான் அவர் குடும்பத்தினரை சந்திப்பார்.

பாலச்சந்திரன் பிறந்ததும் பார்க்க வரவில்லை


 பாலச்சந்திரன் பிறந்ததும் கூட அவனைப் பார்க்க உடனடியாக வரவில்லை பிரபாகரன். மாறாக சில காலம் கழித்தே அவர் தனது மகனைப் பார்க்க வந்தார்
.

கமாண்டர்களின் பிள்ளைகளுடன் விளையாடுவான்


 பாலச்சந்திரன் எல்டிடிஇ கமாண்டர்கள் சொர்ணம் மற்றும் சங்கர் ஆகியோரின் குழந்தைகளுடன்தான் பொதுவாக விளையாடுவான் பாலச்சந்திரன். ஆனாலும் கூட அவர்களும் அடிக்கடி வர மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் தனிமையிலேயே சிறைபட்டிருப்பான் பாலச்சந்திரன்.

விளையாட வருமாறு கெஞ்சுவான்


 எங்களிடம் அடிக்கடி வந்து விளையாட வாருங்கள் என்று கூறிக் கெஞ்சுவான். நாங்கள் மறுத்தால், வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மிரட்டுவான். இதனால் நாங்கள் அவனுடன் விளையாடப் போவோம்
.

வெளியில் கூட்டிச் செல்வோம்


 சில நேரங்களில் நாங்கள் எங்காவது வெளியில் போனால் கூட வருவதாக கூறுவான். சில சமயங்களில் நாங்களும் கூட்டிச் சென்றுள்ளோம். அங்கு நாங்கள் எங்கள் வேலையைப் பார்ப்போம், பாலச்சந்திரன் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். தனக்கு முன்பு பரந்து விரிந்து கிடக்கும் பூமியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான்.

அம்மா சாப்பாடு பிடிக்காது


 பாலச்சந்திரனுக்கு தனது அம்மா மதிவதனி செய்யும் சாப்பாடு பிடிக்காது. சரியாக சாப்பிட மாட்டான். இதனால் எங்களிடம் வருவான். நாங்கள் வைத்திருக்கும், நாங்களே சமைத்து சாப்பிடும் சாப்பாட்டை வாங்கி விரும்பி சாப்பிடுவான் என்று நினைவு கூர்ந்துள்ளார் அந்த முன்னாள் பாடிகார்ட். இந்த பாடிகார்ட் தனது பெயர் விவரங்களை கூறிக் கொள்ளவில்லை

இனி மொபைலிலும் வேலை தேடலாம்


இனி மொபைலிலும் வேலை தேடலாம் :
mobilejobsearch


வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்தும் தங்கள் கையடக்க கைபேசியிலேயே மேற்கொள்ளலாம் . . சமீபகாலமாக ஆன்லைனில் அதிகமான பேர்கள் வேலை தேடிவருகின்றனர் .  தங்கள் தகவல் சீட்டை ஆன்லைனில் பதிவேற்றி  (online resume upload ) தேடுகின்றனர் .

இப்படி வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தளமாக இருக்கும் ஒரு தளம் தான்

logo-small


monsterindia .இந்தியாவில் வேலை தேடப்படும் இணையதளங்களில் முக்கியமான அதிகம் தேடப்படும் தளம் ஆகும் .

இந்த பதிவிற்கு முன்னால் இதே போன்று ஒரு தளத்தை பார்த்தோம் .


வேலை  தேடும் இணையதளங்கள் பல இருந்தாலும் அனைத்து தளங்களும் கைபேசிக்கு ஏற்ற வாறு அமைக்க படுவது இல்லை  .
ஏன் என்றால் கைபேசியில் பயன்படுத்தும் இணைய இணைப்பின் வேகம் மிகவும் குறைவு .

மேலும் அண்ட்ராய்டு மொபைல் களிலும் பயன்படுத்த சில மொபைல் மென்பொருள்கள் இந்த தளமே தருகிறது .

இந்த மென்பொருள்களை பெற http://mobile.monsterindia.com/


இந்த தளத்தை மொபைலில் எளிமையாக பயன்படுத்த

m.monsterindia.com (மொபைல் உலாவியில் செல்லவும் )

நன்றி ...

முதியோர் இல்லம்


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது..கவிஞரைப் பாராட்டுவோம்.