TO
தமிழ்நாடு தேர்தல் ஆணையர்
Subject: அரசியல் கட்சிகளின் இலவச தேர்தல் அறிவிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுகோள்
மதிப்பிற்குரிய தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு,
தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கவிருந்த வாக்குக் கையூட்டு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒரு வாக்காளர் என்ற முறையிலும், சிறந்த அரசு தமிழ்நாட்டிற்குத் தேவை என்று விரும்பும் முறையிலும் தேர்தல் ஆணையத்திற்கு நான் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளும் வாக்காளர்களைக் கவர இலவசங்களை தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையாக அறிவித்து தங்களின் ஆட்சி நிலைபெற எண்ணம் கொண்டுள்ளது, இதை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையாளருக்கு சில கோரிக்கைகளை தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.
இப்படிக்கு,
அன்புடன் ஆனந்த்
http://www.rajaananth25.blogspot.com/
==============================================================
தமிழ் நண்பர்களே, மேற்கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தயவு செய்து நல்ல அரசு தமிழ்நாட்டிற்குத்தேவை என நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலாக அனுப்ப வேண்டுகிறோம்.
தேர்தல் ஆணைய மின்னஞ்சல் முகவரி:
To : ceo_tamilnadu@eci.gov.in
CC: syquraishi@eci.gov.in, vs-sampath@eci.gov.in, hs.brahma@eci.gov.in, , feedback@eci.gov.in
"இப்படிக்கு" என்பதின் கீழ் அவரவர் தங்கள் பெயரைக்குறிப்பிடவும்.
நன்றி

- அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச பொருட்களை அந்தந்த கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாக்குக் கையூட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், நாடும் நாட்டு மக்களும் முன்னேறும் வகையில் உள்ள திட்டங்கள் மட்டுமே இடம் பெறச்செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளதை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சிகள் அறிவித்திருக்கும் இலவச பொருட்களின் மதிப்பை தேர்தல் ஆணையம் கணக்கிட்டு அரசின் நிதி நிலைமையுடன் ஒப்பீடு செய்து அதை மத்திய அரசு, ஆளுநர் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வகை செய்ய வேண்டும், அல்லது இதை அந்தந்த அரசியல் கட்சிகள் அனுப்பி ஒப்புதல் வாங்கிய பின் அறிக்கையாக வெளியிட வகை செய்யவும்.
- அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் நிதி நிலமையை கணக்கில் எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்தும் திட்டங்களை மட்டுமே தேர்தல் அறிக்கையாக அறிவிக்க வகை செய்ய வேண்டும்.
- மக்களுக்கு அரசின் நிதிநிலமையை கருத்தில் கொள்ளாமல் இலவசங்கள் என்ற பெயரில் கையூட்டு கொடுப்பதை தேர்தல் ஆணையம் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும்.
- வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி உறுதி படுத்தப்பட்ட வேட்பாளர்களை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் அறிவித்து சிறந்தவர்களை மட்டும் வேட்பாளர்களாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிபடுத்தவும்.
இப்படிக்கு,
அன்புடன் ஆனந்த்
http://www.rajaananth25.blogspot.com/
==============================================================
தமிழ் நண்பர்களே, மேற்கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தயவு செய்து நல்ல அரசு தமிழ்நாட்டிற்குத்தேவை என நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலாக அனுப்ப வேண்டுகிறோம்.
தேர்தல் ஆணைய மின்னஞ்சல் முகவரி:
To : ceo_tamilnadu@eci.gov.in
CC: syquraishi@eci.gov.in, vs-sampath@eci.gov.in, hs.brahma@eci.gov.in, , feedback@eci.gov.in
"இப்படிக்கு" என்பதின் கீழ் அவரவர் தங்கள் பெயரைக்குறிப்பிடவும்.
நன்றி
No comments:
Post a Comment