என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Saturday, April 23, 2011

புதுமையான செல்போன்

இங்கு கையில் இருப்பது ஏதோ கண்ணாடி துண்டு என்று நினைக்காதிர்கள், இது ஒரு புதிய செல்போன் வடிவம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் உண்மை அதுதான்!



தென்கொரியா,ஜப்பான்,அமெரிக்க போன்ற நாடுகள், நம்மை போல ஜி.எஸ்.எம் நெட்வொர்க்கில் இல்லாமல், சி.டி.எம்.ஏ என்ற "சிம்கார்டு" இல்லாத நெட்வொர்க்கில், அதாங்க நம்ம ரிலைன்ஸ் செல்போன் போல இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் அடுத்த கட்டமாக தென்கொரிய செல்போன் வடிவமைப்பாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் அதிநவீன தொழிநுட்ப வடிவமே இந்த செல்போன் இதன் பெயர் "விண்டோ மொபைல்".

இனி இந்த செல்போன் சிறப்பு அம்சத்தை பற்றி பாருங்கள்.

இருபக்கமும் ஒளி ஊடுருவும் வகையில் உள்ள ஒரு மெல்லிய கண்ணாடி போல் உள்ளது, இதன் நிறத்தை உங்களுக்கு பிடித்த நிறத்தில் மாற்றிக்கொள்ள முடியும், இதன் வெளி தோற்றம் வெயில், மேகமூட்டம், மழை அன்றைய வானிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைத்து இருகிறார்கள்.

இன்று பனி என்றால்:
____________________



இன்று மழை என்றால்:
_____________________



இதில் தனியாக கீபோர்டு எதுவும் இல்லை, ஆனால் உங்கள் நண்பரின் பெயரை அல்லது நம்பரை சொல்லி "வாய்ஸ்டயல்" பண்ண முடியும், அல்லது உங்கள் விரலால் வேண்டிய நம்பரை எழுதியோ அல்லது சேமித்த நம்பரை எடுத்தோ தேவையான நபரை அழைக்க முடியும்.



மற்றும் இதில் கேமிரா, எஸ்.எம்.எஸ் போன்ற அணைத்து வசதிகளும் இருக்கிறது, உங்கள் எஸ்.எம்.எஸ்-சை விரலால் தொட்டு எழுதியும் வேண்டிய படங்களை வரைந்தும் அனுப்ப முடியும்.



இனி இந்த தொழில் நுட்பத்தை எந்த நிறுவனம் வாங்கி இந்த செல்போனை எப்போது வெளியிட போகிறது என்பது தான் இப்போது இங்கு பர பரப்பான பேச்சு.

அனேகமாக "சாம்சாங்" அல்லது "எல்.ஜி" நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை வாங்க கூடும் என்று பரவலான பேச்சு தென்கொரியர்கள் இடையே உலவுகிறது.

சமிபத்தில் தான் "சாம்சாங்" நிறுவனம் தன் ஆகசிறிய கைகடிகாரமாக பயன் படுத்த கூடிய S9110 என்ற செல்போன் வடிவத்தை அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்படதக்கது.



தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்பதை இங்கு பாருங்கள் ("டிஜிடல் கொரியா" புத்தகத்தில் இருந்து).

பதினோரு மாத காலம், இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு அதி நவீன புதிய போனை, வாங்கி விடுகிறார்கள்.

செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்ற வசதியுடன் கூடிய நவீன போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் அறுபத்திமூன்று சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஐம்பத்து சதவீததுக்கும் மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.



செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

தென்கொரிய மாணவர்களின் நாற்பது சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர், முப்பது சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு தோராயமாக நூறு எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர்.



இந்த தகவல்கள் சுவாரசியமாக இருந்தால், "ஓட்டளித்து உங்கள் நண்பர்களுடன்" இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளாமே?

1 comment: