என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, April 29, 2011

GPRS செட்டிங்ஸ்கள்


இணைய வசதி இன்று சின்னஞ்சிறு கிராமம்  வரை பரவியுள்ளது, இதற்கு காரணம் மொபைல் போன் வசதி ஆகும். இந்த மொபைல் போன்களின் துணைக்கொண்டு இணையப்பக்கங்களை நம்முடைய மொபைல் போன்களில் பார்வையிட முடியும். இந்த இணைய வசதியினை பெறவேண்டுமெனில்  நம்முடைய மொபைல் போனில்  GPRS  வசதி இருக்க வேண்டும். மேலும் அதில் இணைய வசதியானது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர். அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு சில பொபைல் புரவைடர்கள் இந்த இணைய வசதிகளை அளிக்கிறனர். 

1.Airtel










Airtel Live settings

Account Name Airtel live
Access Point Name airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

Airtel Mobile Office settings  

Account Name : Mobile Office
Access Point Name airtelgprs.com
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

2.Vodafone 










Vodafone Live GPRS settings

Account Name Vodafone Live live
Access Point Name portalnmms
Username
Password
Proxy server Address 10.10.1.100
Proxy Port 9401
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

3.Aircel









Aircel GPRS settings

Account Name Aircel
Access Point Name aircelgprs.pr (postpaid customers use aircelgprs.po)
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

Aircel PockerInternet settings

Account Name Aircel
Access Point Name aircelwap.pr
Username
Password
Proxy server Address 192.168.35.201
Proxy Port 8081
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


4.Idea











Idea GPRS settings

Account Name idea_gprs
Access Point Name imis
Username
Password
Proxy server Address 10.4.42.15
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://wap.ideafresh.com

Idea Internet Settings

Account Name idea_internet
Access Point Name internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

5.Tata Docomo





Tata Docomo GPRS settings

Account Name tata docomo internet
Access Point Name tata.docomo.internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://internet.tatadocomo.com

Tata Docomo Dive In Settings

Account Name tata docomo dive in
Access Point Name tata.docomo.dive.in
Username
Password
Proxy server Address 10.124.94.7
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://divein.tatadocomo.com
  

6.Reliance


Reliance GPRS settings

Account Name smartnet (smartwap for wap users)
Access Point Name smartnet (smartwap for wap users)
Username
Password
Proxy server Address 97.253.29.199
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

இனி நீங்களே உங்களுடைய மொபைல் போனில் செட்டிங்குகளை உருவாக்கி மொபைல் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடவேண்டும்.

குறிப்பு: உங்களுடைய சிம்கார்டில் GPRS வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Saturday, April 23, 2011

புதுமையான செல்போன்

இங்கு கையில் இருப்பது ஏதோ கண்ணாடி துண்டு என்று நினைக்காதிர்கள், இது ஒரு புதிய செல்போன் வடிவம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆனால் உண்மை அதுதான்!



தென்கொரியா,ஜப்பான்,அமெரிக்க போன்ற நாடுகள், நம்மை போல ஜி.எஸ்.எம் நெட்வொர்க்கில் இல்லாமல், சி.டி.எம்.ஏ என்ற "சிம்கார்டு" இல்லாத நெட்வொர்க்கில், அதாங்க நம்ம ரிலைன்ஸ் செல்போன் போல இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன் அடுத்த கட்டமாக தென்கொரிய செல்போன் வடிவமைப்பாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் அதிநவீன தொழிநுட்ப வடிவமே இந்த செல்போன் இதன் பெயர் "விண்டோ மொபைல்".

இனி இந்த செல்போன் சிறப்பு அம்சத்தை பற்றி பாருங்கள்.

இருபக்கமும் ஒளி ஊடுருவும் வகையில் உள்ள ஒரு மெல்லிய கண்ணாடி போல் உள்ளது, இதன் நிறத்தை உங்களுக்கு பிடித்த நிறத்தில் மாற்றிக்கொள்ள முடியும், இதன் வெளி தோற்றம் வெயில், மேகமூட்டம், மழை அன்றைய வானிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைத்து இருகிறார்கள்.

இன்று பனி என்றால்:
____________________



இன்று மழை என்றால்:
_____________________



இதில் தனியாக கீபோர்டு எதுவும் இல்லை, ஆனால் உங்கள் நண்பரின் பெயரை அல்லது நம்பரை சொல்லி "வாய்ஸ்டயல்" பண்ண முடியும், அல்லது உங்கள் விரலால் வேண்டிய நம்பரை எழுதியோ அல்லது சேமித்த நம்பரை எடுத்தோ தேவையான நபரை அழைக்க முடியும்.



மற்றும் இதில் கேமிரா, எஸ்.எம்.எஸ் போன்ற அணைத்து வசதிகளும் இருக்கிறது, உங்கள் எஸ்.எம்.எஸ்-சை விரலால் தொட்டு எழுதியும் வேண்டிய படங்களை வரைந்தும் அனுப்ப முடியும்.



இனி இந்த தொழில் நுட்பத்தை எந்த நிறுவனம் வாங்கி இந்த செல்போனை எப்போது வெளியிட போகிறது என்பது தான் இப்போது இங்கு பர பரப்பான பேச்சு.

அனேகமாக "சாம்சாங்" அல்லது "எல்.ஜி" நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை வாங்க கூடும் என்று பரவலான பேச்சு தென்கொரியர்கள் இடையே உலவுகிறது.

சமிபத்தில் தான் "சாம்சாங்" நிறுவனம் தன் ஆகசிறிய கைகடிகாரமாக பயன் படுத்த கூடிய S9110 என்ற செல்போன் வடிவத்தை அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்படதக்கது.



தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்பதை இங்கு பாருங்கள் ("டிஜிடல் கொரியா" புத்தகத்தில் இருந்து).

பதினோரு மாத காலம், இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு அதி நவீன புதிய போனை, வாங்கி விடுகிறார்கள்.

செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்ற வசதியுடன் கூடிய நவீன போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் அறுபத்திமூன்று சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஐம்பத்து சதவீததுக்கும் மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.



செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

தென்கொரிய மாணவர்களின் நாற்பது சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர், முப்பது சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு தோராயமாக நூறு எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர்.



இந்த தகவல்கள் சுவாரசியமாக இருந்தால், "ஓட்டளித்து உங்கள் நண்பர்களுடன்" இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளாமே?

Wednesday, April 13, 2011

அரசியல் கட்சிகளின் இலவச தேர்தல்

TO
தமிழ்நாடு தேர்தல் ஆணையர்

Subject: அரசியல் கட்சிகளின் இலவச தேர்தல் அறிவிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுகோள்


மதிப்பிற்குரிய தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு,
தமிழ்நாடு மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கவிருந்த வாக்குக் கையூட்டு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒரு வாக்காளர் என்ற முறையிலும், சிறந்த அரசு தமிழ்நாட்டிற்குத் தேவை என்று விரும்பும் முறையிலும் தேர்தல் ஆணையத்திற்கு நான் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளும் வாக்காளர்களைக் கவர இலவசங்களை தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையாக அறிவித்து தங்களின் ஆட்சி நிலைபெற எண்ணம் கொண்டுள்ளது, இதை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையாளருக்கு சில கோரிக்கைகளை தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.
  1. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச பொருட்களை அந்தந்த கட்சிகள் வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வாக்குக் கையூட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், நாடும் நாட்டு மக்களும் முன்னேறும் வகையில் உள்ள திட்டங்கள் மட்டுமே இடம் பெறச்செய்ய வேண்டும்.
  3. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளதை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
  4. அரசியல் கட்சிகள் அறிவித்திருக்கும் இலவச பொருட்களின் மதிப்பை தேர்தல் ஆணையம் கணக்கிட்டு அரசின் நிதி நிலைமையுடன் ஒப்பீடு செய்து அதை மத்திய அரசு, ஆளுநர் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வகை செய்ய வேண்டும், அல்லது இதை அந்தந்த அரசியல் கட்சிகள் அனுப்பி ஒப்புதல் வாங்கிய பின் அறிக்கையாக வெளியிட வகை செய்யவும்.
  5. அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் நிதி நிலமையை கணக்கில் எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்தும் திட்டங்களை மட்டுமே தேர்தல் அறிக்கையாக அறிவிக்க வகை செய்ய வேண்டும்.
  6. மக்களுக்கு அரசின் நிதிநிலமையை கருத்தில் கொள்ளாமல் இலவசங்கள் என்ற பெயரில் கையூட்டு கொடுப்பதை தேர்தல் ஆணையம் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும்.
  7. வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி உறுதி படுத்தப்பட்ட வேட்பாளர்களை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் அறிவித்து சிறந்தவர்களை மட்டும் வேட்பாளர்களாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிபடுத்தவும்.
மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை, வாக்காளர்கள் கையூட்டு பெறாமல் சிறந்த அரசை தேர்வு செய்து தங்கள் வாக்கு உரிமையை நேர்மையான முறையில் நிலைநாட்ட தேர்தல் ஆணையம் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,

அன்புடன் ஆனந்த்
http://www.rajaananth25.blogspot.com/

==============================================================
தமிழ் நண்பர்களே, மேற்கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தயவு செய்து நல்ல அரசு தமிழ்நாட்டிற்குத்தேவை என நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலாக அனுப்ப வேண்டுகிறோம்.
தேர்தல் ஆணைய மின்னஞ்சல் முகவரி:
To : ceo_tamilnadu@eci.gov.in
CC: syquraishi@eci.gov.in, vs-sampath@eci.gov.in, hs.brahma@eci.gov.in, , feedback@eci.gov.in
"இப்படிக்கு" என்பதின் கீழ் அவரவர் தங்கள் பெயரைக்குறிப்பிடவும்.
நன்றி