என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, November 27, 2012

திருமண வாழ்வை தக்க வைக்கும் இனிமையான நினைவுகள்

திருமண வாழ்வை தக்க வைக்கும் இனிமையான நினைவுகள்!
இந்த மார்டன் உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறது. அவ்வாறு செல்லும் வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பதோடு, மண வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது.
ஒரு காலத்தில் திருமணம் நடந்தால், அந்த தம்பதிகள் என்ன நடந்தாலும் இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து வருவர். ஆனால் தற்போது, வாழ்வில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த வாழ்க்கை இறுதி வரை செல்லாமல், பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் விவாகரத்து வரை செல்வதோடு, அந்த விவாகரத்தும் எளிதில் கிடைத்து பிரிந்து விடுகின்றனர். வாழ்வில் சந்தோஷம் மட்டும் என்பதில்லை, கோபமும் தான் இருக்கும். அவற்றையெல்லாம் வெற்றி பெற்று வாழ்வை வாழ்ந்து காண்பிப்பது தான் சிறப்பான ஒன்று.
ஆகவே எந்த பிரச்சனைகள் வரும் போதும், நமது கோபத்திற்கு இடத்தை கொடுக்காமல், வாழ்க்கையின் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, விவகாரத்து தான் இதற்கு வழி என்று எண்ணாமல், மனதை அமைதிப்படுத்தி, ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அவ்வாறு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அந்த கஷ்டமான தருணத்தை மட்டும் எண்ணாமல், சந்தோஷமாக இருந்த தருணத்தை நினைத்து, மனதில் இருக்கும் கோபத்தை வெளியேற்ற வேண்டும். சரி, இப்போது பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை நினைக்காமல், எந்த மாதிரியான இனிமையான நினைவுகளையெல்லாம் நினைத்து, திருமண வாழ்விற்கு முற்று ஏற்படாமல், நீண்ட நாட்கள் நிலைக்க வைப்பது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் நாள்

முதல் நாள் உங்கள் துணைவரை நேருக்கு நேராக கண் இமைக்காமல் பார்க்கும் படி செய்த அல்லது உங்கள் மனதில் காதல் எண்ணத்தை ஊட்டிய அந்த நாள் மிகவும் ஸ்பெஷலான மறக்க முடியாத ஒரு இனிமையான நாள்.

நண்பர்கள்

நட்பு மற்றும் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு உறவின் முக்கியமான ஒரு பகுதி. இந்த நாட்களை வாழ்க்கை முடியப் போகும் தருணத்தில் நினைத்துப் பார்த்தால், அனைத்தும் கவலைகளும் மறந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

காதலில் விழுந்த நாள்

ஒருவருடன் பழகும் போது, நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவரின் மீது காதல் இருப்பது புரிய வரும். அப்போது உணர்ந்த அந்த இனிமையான அனுபவத்தை நினைத்தால், அது வாழ்வில் மற்றும் மனதில் ஒருவித குதூகலத்தை உண்டாக்கும்.

முதல் நெருக்கமான தருணம்

இது முதன் முதலில் இருவரும் முத்தம் கொடுத்ததாகவோ அல்லது வேறு ஏதாவதான ஒருவித உணர்வை உணர்ந்த நாளாக இருக்கும். அதிலும் இந்த தருணத்தின் போது எப்போதுமே இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கும்.

முதல் வெளிப்படுத்திய நாள்

எதிர் பார்க்காத நேரத்தில் வாழ்க்கைத் துணை அதிர்ச்சியூட்டும் வகையில் காதலை சொன்ன அந்த நாளை யாராலும் மறக்க முடியாது.

திருமணத்திற்கான ஷாப்பிங்

வீட்டில் திருமணத்திற்கான ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதோ நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே வாழ்வின் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கும்.

திருமண நாள்

வாழ்வில் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாள் தான் திருமண நாள். அந்த நாளன்று இதுவரை தனியாக, காதலராக இருந்தவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறீர்கள் என்று பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி சேர்த்து வைக்கும், மனதின் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நாள்.

தேனிலவு பயணம்

வாழ்வின் யாராலும் மறக்க முடியாத ஒரு பயணம் என்றால் அது தேனிலவு தான். அதிலும் இந்த பயணத்தின் போது அவர்கள் அந்த பயணத்தின் நினைவாக வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்துக் கொள்வார்கள்.

முதல் சண்டை

திருமணத்திற்கு பிறகு சண்டைகள் நிறைய வரும். ஆனால் முதல் சண்டையை மட்டும் யாராலும் மறக்க முடியாது.அதிலும் அவ்வாறு வரும் சண்டை ஏதேனும் ஒரு சிறு விஷயத்திற்காகத் தான் இருக்கும்.

பெற்றோர் ஆன நாள்

இந்த தருணம் தான், தம்பதிகளுக்கிடையே இருக்கும் அன்பின் அடையாளம். சொல்லப்போனால் இதுவரை சாதாரணமாக இருந்த அவர்கள் பெற்றோர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த நாள்

No comments:

Post a Comment