என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, February 9, 2012

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு




கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் கூகுளின் மென்பொருட்கள் மட்டுமின்றி கூகுள் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype) உள்ளன.

இந்த மென்பொருட்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.

இந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கில் செல்லுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான உங்கள் கணணியில் இல்லாத மென்பொருட்களை டிக் செய்து கொள்ளுங்கள்.

தேவையானதை டிக் செய்து கீழே உள்ள தரவிறக்க பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும். பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
                                           

No comments:

Post a Comment