பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறாராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியிருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் தன்னைப் பற்றி தமிழ் பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ஏகப்பட்ட செய்திகள் வெளியாவதை அறிந்த நயன்தாரா, அந்த செய்திகளை படித்து தெரிந்து கொள்வதற்காகவே தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாராம். விரைவில் எழுதவும் கற்றுக் கொள்வேன் என்று கூறும் நயன்தாராவுக்கு ஏற்கனவே நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்பது கூடுதல் தகவல்.