என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, January 31, 2012

ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிப்பு!


உலக அளவில் சிறந்த சினிமா படங்கள், நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உயரிய ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஹாலிவுட்டில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி நடக்கிறது.

இந்த விருதுகளை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம் பெறும் படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள சினிமா படத்துக்கான பட்டியலில் வார்ஹார்ஸ், தி ஆர்டிஸ்ட், மணிபால், டிசன்டன்ட்ஸ், ட்ரீ ஆப்லைட், மிட்நைட் இன்பாரீஸ், தி ஹெல்ப், ஹீகோ, எக்ஸ்ட்ரீம்லி லவுடு ஆகிய 9 படங்கள் உள்ளன.

சிறந்த நடிகர் தேர்வு பட்டியலில் டேமியன் பிசிர், ஜார்ஜ் குலூனி, ஜீன் துஜார்டின், காரி ஓல்டுமேன், பிராட் பிட் ஆகியோரும், சிறந்த நடிகை தேர்வு பட்டியலில் கிளன் குளோஸ், வயோலா டேவிஸ், ரூனி மாரா, மெரில் வ்ட்ரீப், மிச்சேலி வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் மைக்கேல் ஹஷானாவிசியஸ், அலெக்சாண்டர் பேய்னி, மார்டின் ஸ்கேள்சஸ், வுடிஆலன், டெரன்ஸ் மாலிக் ஆகியோர் உள்ளனர். ஒரிஜினல் திரைக்கதை பட்டியலில் தி ஆர்டிஸ்ட், பிரைட் மெய்ட்ஸ், மிட்நைட் இன்பாரீல், மார்ஜின், கால், எ செபரேசன் ஆகிய படங்களும், வேறு படங்களை தழுவிய திரைக்கதை பட்டியலில் தி டிசன்டன்ட்ஸ், ஹீகோ, தி இட்ஸ் ஆப் மார்ச், மணிபால், டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன.

சிறந்த துணை நடிகர் பட்டியலில் கென்னெத் பிரானா, ஜோனாஹில், நிக் நாலட், கிறிஸ்டோபர் பிளம்மர், மாஸ் வன்சிடோவும், துணை நடிகை பட்டியலில் பிரனீஷ் ஸஜோ, ஜெசிகா காஸ்டெய்ன், மெலிசா மெக்கார்தி, ஜானெட் மெக்டீர், ஆக்டா வியா ஸ்பென்சர் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஹீகோ என்ற படம் 11 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை டைரக்டர் மார்டின், ஸ்கோர்செசே இயக்கி உள்ளார். இதற்கு அடுத்த படியாக ஒதி ஆர்டிஸ்ட் என்ற படம் 10 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்ஸ் இயக்குனர் மைக்கேல் ஹஷானாவிசியஸ் டைரக்ட் செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட டேம் 999 என்ற படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் போட்டியில் பங்கேற்க அப்படம் தேர்வாகவில்லை. இதனால் அந்த படக்குழுவினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment