என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, January 31, 2012

ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிப்பு!


உலக அளவில் சிறந்த சினிமா படங்கள், நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உயரிய ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஹாலிவுட்டில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி நடக்கிறது.

இந்த விருதுகளை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம் பெறும் படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள சினிமா படத்துக்கான பட்டியலில் வார்ஹார்ஸ், தி ஆர்டிஸ்ட், மணிபால், டிசன்டன்ட்ஸ், ட்ரீ ஆப்லைட், மிட்நைட் இன்பாரீஸ், தி ஹெல்ப், ஹீகோ, எக்ஸ்ட்ரீம்லி லவுடு ஆகிய 9 படங்கள் உள்ளன.

சிறந்த நடிகர் தேர்வு பட்டியலில் டேமியன் பிசிர், ஜார்ஜ் குலூனி, ஜீன் துஜார்டின், காரி ஓல்டுமேன், பிராட் பிட் ஆகியோரும், சிறந்த நடிகை தேர்வு பட்டியலில் கிளன் குளோஸ், வயோலா டேவிஸ், ரூனி மாரா, மெரில் வ்ட்ரீப், மிச்சேலி வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் மைக்கேல் ஹஷானாவிசியஸ், அலெக்சாண்டர் பேய்னி, மார்டின் ஸ்கேள்சஸ், வுடிஆலன், டெரன்ஸ் மாலிக் ஆகியோர் உள்ளனர். ஒரிஜினல் திரைக்கதை பட்டியலில் தி ஆர்டிஸ்ட், பிரைட் மெய்ட்ஸ், மிட்நைட் இன்பாரீல், மார்ஜின், கால், எ செபரேசன் ஆகிய படங்களும், வேறு படங்களை தழுவிய திரைக்கதை பட்டியலில் தி டிசன்டன்ட்ஸ், ஹீகோ, தி இட்ஸ் ஆப் மார்ச், மணிபால், டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன.

சிறந்த துணை நடிகர் பட்டியலில் கென்னெத் பிரானா, ஜோனாஹில், நிக் நாலட், கிறிஸ்டோபர் பிளம்மர், மாஸ் வன்சிடோவும், துணை நடிகை பட்டியலில் பிரனீஷ் ஸஜோ, ஜெசிகா காஸ்டெய்ன், மெலிசா மெக்கார்தி, ஜானெட் மெக்டீர், ஆக்டா வியா ஸ்பென்சர் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஹீகோ என்ற படம் 11 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை டைரக்டர் மார்டின், ஸ்கோர்செசே இயக்கி உள்ளார். இதற்கு அடுத்த படியாக ஒதி ஆர்டிஸ்ட் என்ற படம் 10 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்ஸ் இயக்குனர் மைக்கேல் ஹஷானாவிசியஸ் டைரக்ட் செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட டேம் 999 என்ற படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் போட்டியில் பங்கேற்க அப்படம் தேர்வாகவில்லை. இதனால் அந்த படக்குழுவினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது

அமிதாப் பச்சனுடன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த்














அமிதாப் பச்சனுடன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். பூரி ஜெகன்னாத் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.

28 ஆண்டுகளுக்கு முன்பு ராமாராவ் தயாரித்த அந்தா கானூன் படம்தான் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்த கடைசி இந்திப் படமாகும்.

இதுகுறித்து பூரி ஜெகன்னாத் கூறுகையில், சமீபத்தில் நான் ரஜினி சாரை சந்தித்துப் பேசினேன். அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்கப் போகும் புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

மேலும் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் பரவசமாக உள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ஏற்பட்ட பரவசம் இது.

நீண்ட காலமாகவே ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முயற்சித்தும் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் கை கூடியுள்ளது. அதேசமயம், இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மலைப்பாகவும் உள்ளது என்றார் ஜெகன்னாத்.

ஏற்கனவே அமிதாப்பச்சனை வைத்து புத் ஹோகா தேரா பாப் என்ற படத்தை சமீபத்தில் இயக்கியவர்தான் பூரி ஜெகன்னாத் என்பது நினைவிருக்கலாம்

கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன்


மைனா’ தவிர்த்து பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் சாதிக்காத அமலாபால் போடுகிற ஆட்டங்களைச் சொல்லிமாளவில்லை.

படப்பிடிப்புக்கோ, ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கோ வரும்போது தனக்கு, அம்மாவுக்கு,அப்பாவுக்கு என்று பிஸினஸ் கிளாஸில் மூன்று டிக்கட்டுகளை பிடிவாதம் பண்ணி பெற்று விடுகிறார்.


நாளை நடைபெற இருக்கும் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த அமலாபாலிடம் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்ரெட்குமார், தன்பட புரமோசனுக்கும் சில டி. வி. சானல்களுக்கும் பேட்டி அளித்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தாராம். இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்ட அமலா கேர்ள், சொன்ன நேரத்தை விட 2 மணி நேரம் லேட்டாக வந்து சொதப்பினாராம்.


விவாகாரம் அதோடு முடியவில்லை. ‘’எங்கிட்ட ரெண்டு சேனல்னு சொல்லிட்டு மூனு பேரை வரச்சொலியிருக்கீங்க. என்னால அந்த சேனலுக்கு இப்போ பேட்டி தர முடியாது. அவங்கள உடனே வெளியே அனுப்புங்க ‘’ என்று சற்றும் நாகரீகமில்லாமல் கத்தியிருக்கிறார்.

இதைக்கேட்டு டென்சனான அந்த மூனாவது சேனல் நிருபர்,’’ இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத.இந்த கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன் ‘என்று திட்டிவிட்டு, அங்கிருந்தபடியே சேனலின் நியூஸ் எடிட்டருக்கு போனில் பேச ஆரம்பித்தார்.

‘’சார் அவ நம்ம சேனலுக்கெல்லாம் பேட்டி குடுக்க மாட்டாளாம். அதுக்குப் பதில் பறவை முனியம்மா பேட்டி எடுத்துட்டு வர்றேன். இன்னும் கூட 100பேர் பாப்பாங்க சார்.

இப்படி ஒரு பதில் அட்டாக்கை சற்றும் எதிர்பாராத அமலா முனியம்மா லேசாக கலங்கித்தான் போனார்.

Monday, January 30, 2012

லேப்டாப் கம்ப்யூட்டர்

லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று பலரின் விசுவாசத் தொண்டனாக இயங்கி வருகிறது. சிலருக்கு அதுவே எஜமானனாகவும் உள்ளது. எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இதனைப் பயன்படுத்து வோருக்கு நடமாடும் அலுவலகமாகவும் இது செயல்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்து வருவதனாலும், வசதிகள் கூடுதலாகக் கிடைப்பதனாலும் இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப் கம்ப்யூட்டர் பிடித்து வருகிறது. இப்போது அரசே மாணவர்களுக்கு இலவசமாக இதனை வழங்கி வருவதால், அடுத்த சந்ததியினர் லேப்டாப் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை எழுந்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் புதியதாக அறிமுகமாகும் பலர் சின்ன சின்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அவற்றை எப்படி சந்தித்து, சமாளித்து, லேப்டாப் கம்ப்யூட்டரை நம் வசமாக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப் படுத்தும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என்றால் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் ஆட்/ரிமூவ் புரோகிராம் தேர்ந்தெடுத்து தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். விஸ்டா எனில் புரோகிராம்ஸ் அன்ட் பீச்சர்ஸ் தேர்ந்தெடுத்து நீக்குங்கள்.
அடுத்ததாக உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள். இவை எல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லேப்டாப்பில் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சார்பாக இருக்கும் ஐகான்கள். உங்கள் மவுஸின் கர்சரை, அவற்றின் மேலாகக் கொண்டு சென்றால் அந்த ஐகான்கள் எந்த புரோகிராம்களைக் காட்டுகின்றன என்று தெரியவரும். அவை வேண்டுமா என்று முடிவு செய்து, தேவையில்லை என்றால் உடனே அவற்றை நீக்கலாம்.
இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் இடம் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது. இதற்கு சிறிது செலவாகும். இப்போதைய லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ராம் மெமரியை அதிகப்படுத்தும் வசதி களோடுதான் வருகின்றனர். எனவே உங்களுடைய லேப்டாப்பில் 512 எம்பி மெமரி உள்ளது எனில் அதனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். அப்படி உயர்த்தினால் உங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டா நிச்சயம் சண்டிக் குதிரை வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.
இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக் கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியது தான்.
அடுத்ததாக லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பேட்டரி. காலப் போக்கில் இவை தங்களின் முழுத் திறனை இழக்கத் தொடங்கும். இதன் இடத்தில் புதிய பேட்டரிகளை வாங்கிப் பொருத்துவது நல்ல முடிவு என்றாலும், இப்போதைய லேப்டாப்களில் பேட்டரி மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் தரப்பட் டுள்ளன. அவற்றைப் பயன் படுத்தலாம். மெயின் இணைப்பி லிருந்து லேப்டாப் பினை நீக்கியவுடன், குறைவான மின்சக்தியைப் பயன்படுத்த இந்த சாப்ட்வேர்கள் இயங்கும். மேலும் தேவையில்லாத போது ஹார்ட் டிஸ்க்குகள் சுழல்வது நிறுத்தப்படும்.
இந்த ஏற்பாட்டினை நாமாகவும் மேற்கொள்ளலாம். கண்ட்ரோல் பேனல் சென்று பவர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுத்து அந்த விண்டோவில் தந்திருக்கும் ஒவ்வொன்றையும் செட் செய்திடலாம். இதில் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்கினை, லேப்டாப் எவ்வளவு நேரம் வேலை எதுவுமின்றி இருந்தால், நிறுத்தி வைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதனால் பேட்டரியின் சக்தி கணிசமாக மிச்சம் ஆகும். இதனால் பெரிய அளவில் மின்சக்தி மிச்சமாகும் என எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவிற்கு பேட்டரியின் வாழ் நாள் கூடும்.
நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த புரோகிராமின் பெயர் விஸ்டா பேட்டரி சேவர் (Vista Battery Saver). இதனை www.codeplex.com/vistabattery என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்கி விட்டால், அது தானாகவே, லேப்டாப் மெயின் இணைப்பிலிருந்து விலக்கப்படுகையில், அதிகம் பவர் எடுக்கும் ஏரோ ஸ்பேஸ் மற்றும் சைட் பார் டூல் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தற்காலி கமாக நிறுத்தி வைக்கும்.
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ளலாம். சிடி அல்லது டிவிடி ட்ரைவில் எந்த ஒரு சிடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிடி ஏதேனும் இருந்தால், நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கும் போதெல்லாம், இந்த டிரைவ் சுழன்று செயல்பட ஆரம்பிக்கும்.
புதிய பேட்டரி ஒன்றை லேப்டாப்பிற்கென வாங்குவதாக இருந்தால், லேப்டாப் தயாரித்த நிறுவனம் பரிந்துரைத்த பேட்டரியினை மட்டுமே வாங்கிப் பொருத்த வேண்டும். அந்நிறுவனத்தின் இணையதளத்தினைக் காண்பது இதற்கு உதவிடும். விலை குறைவாக உள்ளது என்று அதே போன்ற பேட்டரியினை வாங்கிப் பயன்படுத்துவது லேப்டாப்பிற்கு கேடு விளைவிக்கும்.
புதிய லேப்டாப்கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை. எடுத்துக் காட்டாக வெப் கேம், டிவி ட்யூனர் போன்றவற்றைக் கூறலாம். இது கம்ப்யூட்டர் உலகில் சகஜம் தான். தொடர்ந்து நமக்கான வசதிகள் பெருகி, நவீன சாதனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. இதனை எளிதாகச் சமாளிக்கலாம். நூற்றுக்கணக்கான சாதனங்கள் இன்று லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக டிவி ட்யூனரை இணைக்கலாம்; இணைத்த பின்னர் உங்கள் லேப்டாப் ஒரு டிவியாகவும், வீடியோ ரெகார்டராகவும் செயல்படும்.
இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத் தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள். அங்கு பி.சி. கார்ட் அல்லது எக்ஸ்பிரஸ் கார்ட் ஸ்லாட் இருக்கும். இதன் மூலம் கூடுதல் சாதனங்களை இணைக்கலாம்.
எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும். லேப்டாப் செயல்படாமல் போவதற்கான காரணங்களில் வெப்பமும் ஒன்று. லேப்டாப் பின் உள்ளே தரப்பட்டிருக்கும் சிறிய மின்விசிறிகள் இந்த வெப்பத்தைக் கடத்தி உள்ளே உள்ள சிப்களைக் காப்பாற்றும் என்றாலும், கூடுதலாக ஒரு கூலிங் பேட் ஒன்றை வாங்கி இணைத்துப் பயன்படுத்துவது இவ்வகையில் பாதுகாப்பினைத் தரும்.
லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம். மேலும் நாம் இதனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கையில், நாம் அறியாமல் மற்றவர் இதனைப் பயன்படுத்தவும் கூடும். இதனைத் தடுக்கக் கம்ப்யூட்டரில் ஒவ்வொரு விண்டோஸ் அக்கவுண்ட்டுக் கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது அவசியம். லேப்டாப்பினை இன்ஸூர் செய்வதும் நம் இழப்பை ஒரு வகையில் ஈடு செய்திடும்.
அடுத்ததாக உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப் பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தன் லேப் டாப் கம்ப்யூட்டரினை, அதற்கெனத் தயாரிக்கப்பட்ட கேரி பேக்கில் வைத்தே விற்பனை செய்கின்றன. எனவே அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின்சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இது மெயின் பவர் சாக்கெட்டுக்கும், லேப் டாப் அடாப்டருக்கும் இடையே அமர்ந்து தேவையற்ற மின் ஏற்ற இறக்கத்தினைச் சமாளிக்கின்றன.
எந்த சாதனமும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் தன் புதுமையையும், பயன்பாட்டுத் தன்மையையும் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கிவிடும். இருப்பினும் மேலே கூறப்பட்டுள்ள சில வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பயன்பாட்டு நலனை கூடுதலாகச் சில ஆண்டுகள் தக்கவைக்கலாமே!

Sunday, January 1, 2012

ராஜபாட்டை விமர்சனம்

Tamil Flim Rajapattai

நடிகர் : விக்ரம்
நடிகை : தீக்ஷா ஷெத்
இயக்குனர் :சுசீந்திரன்

கலை படங்களையும், கமர்ஷியல் படங்களாக நடித்து ரசிகர்களை கவருவதில் வல்லவரான விக்ரம், முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ராஜபாட்டை".

சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் ஜிம்பாயாக சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் விக்ரம், ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் முதியவரான கே.விஸ்வநாத்தை காபந்து செய்து, தன் கூடவே தங்க வைத்து கொள்கிறர். விக்ரம்-தீக்ஷா சேத்தின் காதலுக்கு கலர்ஃபுல் டிப்ஸெல்லாம் தரும் கலக்கல் பெரியவரான கே.விஸ்வநாத் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம்! அதாகப்பட்டது, தன் மறைந்த மனைவி பெயரில் விஸ்வநாத் நடத்தி வரும் அனாதை சிறுவர்கள் ஆசிரமத்தை, தன் அரசியல் லாபத்திற்காக அடித்து பிடுங்குகிறார் அவரது மகன் அவினாஷ்! அதை அவரிடமிருந்து ஆட்டையை போடுகிறார் அரசியல் தலைவியும், நிலமோசடி ராணியுமான அக்கா ரங்கநாயகி எனும் சனா. அவருக்கு ஆதியும் அந்தமும் ஆதரவாக இருக்கிறார் வாப்பா எனும் பிரதீப் ராவத். மகன் அவினாஷிடமிருந்து பெரியவர் கே.விஸ்வநாத்தை காக்கும் விக்ரம், அக்கா சனா, வாப்பா பிரதீப் இருவரிடமிருந்து அனாதை ஆசிரம நிலத்தை மீட்டு மீண்டும் விஸ்வநாத் விருப்பபடி அந்த இடத்தில் அனாதை சிறுவர் விடுதிக்கு அடிக்கோள் நாட்டுவது தான் "ராஜபாட்டை" படத்தின் மொத்த கதையும்!

விக்ரம் ஜிம்பாயாக, பெரிய ஹீரோவாகும் ஆசையில் கோலிவுட்டை ரவுண்ட் அடிப்பது வரை ஓ.கே. அதில் சி.பி.ஐ. ஆபிஸராக, சீக்கிய ஆபிஸராக மாறி நிலமோசடி விவகாரத்தில் வாப்பாவை வதைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரிகிறது! இது மாதிரி படக்காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சிகளிலும் சேர்த்து 17 வேடங்களில் விக்ரம் வருவதெல்லாம் கதைக்கேற்ற காட்சிகளை பிடிக்காமல் இயக்குநருடன் சேர்ந்து விக்ரமும் கண்ணாமூச்சி காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது!

படத்தின் புதுமுகநாயகி தீக்ஷா சேத்திற்கே போதுமான சீன்கள் இல்லாத பட்சத்தில் க்ளைமாக்ஸ் முடிச்சு, ஸ்ரேயாவுடனும், ரீமா சென்னுடனும் விக்ரம் ஆடிப்பாடும் பாடல்காட்சி ஏதோ எடுத்து விட்டோம் காசை கொட்டி என வலிய திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தீக்ஷாவின் நடிப்பை அடுத்த படத்தில் பார்த்துவிட்டு தான் விமர்சிக்க முடியும்! இதில் அவ்வளவு சின்னரோல் அம்மணிக்கு பாவம்! கே.விஸ்வநாத், தம்பி ராமையா, பிரதீப்ராவ், அவினாஷ், சனா, அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்!

யுவனின் பின்னணி இசையும் (பாடல்கள் அல்ல...) மதியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்! வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை என யதார்த்தமான படங்களை எளிமையாகவும், இனிமையாகவும் இயக்கிய சுசீந்திரன், கமர்ஷியலாக இயக்கிய "நான் மகான் அல்ல" அளவிற்கு கூட ராஜபாட்டையில் கலக்காதது வருத்தமே!

தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலமோசடி விவகார வழக்குகளை விளையாட்டாக படமாக்கி இருக்கிறார்கள்! இன்னும் சற்று விளையாட்டை குறைத்து அதன் வீரியத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருந்தால் "ராஜபாட்டை", "ரசிக்கும் பாட்டை"யாக இருந்திருக்கும்