என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, July 22, 2011

கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய

உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். 
பயன்கள் :

  • உங்கள் கணினியை பற்றி முழு தகவல்களையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வசதி அதுவும் சரியாக. 

  • உங்கள் கணினி எந்த பெயரில் இருக்கிறது என்பதில் ஆரம்பித்து IP முகவரி, OS, RAM, PROCESSOR, WINDOWS KEY , MONITOR, BROWSER, இப்படி அடுக்கி கொண்டே செல்லலாம். 

  • மேலும் நம் கணினியில் எந்தெந்த மென்பொருட்கள் நிறுவி உள்ளோம் அதனுடைய versons என்ன என்றும் காட்டுகிறது.

  • மறைந்துள்ள மென்பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது.

  • மற்றும் கணினியில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவலையும் காட்டுகிறது. 

  • இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.

  • அளவு 1MB யை விட சிறியது. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
பயன் படுத்தும் முறை



  • கீழே உள்ள download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  

  • நேரடியாக ரன் செயுங்கள். உங்கள் கணினி ஸ்கேன் ஆகி வரும். மேலே உள்ள மூன்று பட்டன்களை தேர்வு செய்து கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான்...

    தகவலுக்கு நன்றி..!

    ReplyDelete