ஜப்பானின் சுனாமி - நிலநடுக்கத்துக்கு காரணம் உலகைச் சுற்றி வரும் நிலவானது உலகுக்கு மிக அருகில் வந்தததால் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகினைச் சுற்றி வரும் நிலவு கடந்த மார்ச் 9 தேதி உலகுக்கு அருகில் வந்ததன் விளைவாகவே ஹவாயில் எரிமலை வெடிப்பும், ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவல்களை சில ஆய்வாளர்கள் மறுத்தும் வருகின்றனர். இதனால் பெரும் குழப்ப நிலை நிலவுகின்றது.
சுனாமி தகவல்கள் :
- - நேற்று நண்பகல் ஜப்பானில் வடகிழக்கு கரையில் இருந்து 80 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 8.9 அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- - இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் சுனாமி அலை கிளம்பி ஜப்பானின் கரையோரப் பகுதிகளைத் தாக்கியது
- - இந்த சுனாமி அலையானது சுமார் 60க்கும் அதிகமான நாடுகளையும் தாக்கியுள்ளது.
- - பசிப்பிக் கடல் நாடுகள் அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- - ஜப்பானில் 450 பேர் இறந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணமல் போயுள்ளனர்.
- - இந்த நிகழ்வு ஜப்பான் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இதன் தாக்கம் உலகெங்கும் இருக்கும் என பங்கு வர்த்தக செய்திகள் கூறுகின்றன.
- - ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும் அணு உலைகள் சேதமாகி உள்ளது. ஆனால் கதிர் வீச்சு வெளியாகவில்லை என அரசுக் கூறியுள்ளது.
- - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பல தீப்பற்றி எரிந்துள்ளன.
- - சுனாமி எச்சரிக்கை மேற்கு அமெரிக்க மாநிலங்களிலும், மேற்கு கனடாவிலும் விடப்பட்டு இருந்தது.
- - ஜப்பானுக்கு ஐநா சபை அவசரகால உதவிகள் செய்ய முன்வந்துள்ளன.
No comments:
Post a Comment