என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, May 31, 2013

லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு? அறிய ஆவலா

செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ. வாடிக்கையாளர் தான் ராஜா. சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ.
இங்கு நீங்கள் செல்போன் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கோபுரோபோ என்பது ஆன்லைனில் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும் சர்ச் என்ஜின். நீங்கள் கடை கடையாக ஏறி இறங்கி விலையைக் கேட்டு அதன் பிறகு உங்களுக்கு பிடித்த செல்போனையோ, டாப்லெட்டையோ வாங்கத் தேவையில்லை.
லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு? அறிய ஆவலா.?

இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோபுரோபோ மூலம் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, பிளாக்பெர்ரி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து ஆன்லைனிலேயே வாங்கலாம். சிம்பயான், ஆன்ட்ராய்ட், படா ஓஎஸ், 3ஜி மற்றும் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுள்ள செல்போன்களை தேர்வு செய்யலாம்.
செல்போன்கள், டாப்லெட்டுகள், டச் போன்கள், ஆன்ட்ராய்ட் போன்கள், வின்டோஸ் போன்கள் உள்ளிட்டவற்றின் விலையுடன் வாடிக்கையாளரின் விமர்சனம், வீடியோ விமர்சனம், ரேட்டிங் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். இது சிறந்த தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்து வாங்க பெரிதும் உதவும்.

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.


http://www.gaijin.at/dlusbwp.php இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

http://www.net-studio.org/eng/usb-firewall.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

http://www.usb-guardian.com/ இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.

அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

Remote Control,computer,Android device

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

Video Guide:

முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம்

ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இதுகுறித்து கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜிதான் வேகமானதாக கருதப்படுகிறது. ஆனால், இதை விட பல நூறு மடங்கு வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம்  வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 கி.மீ. தூர இடைவெளிக்குள் அமைந்த கம்ப்யூட்டர்களுக்குள் ஒரு ஜிகாபைட் பைல் ஒரு விநாடியில் பரிமாறப்பட்டது.
வரும் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் 3டி படங்கள், நேரடி அறுவை  சிகிச்சை காட்சிகள், அல்ட்ரா ஹை டெபனேசன் பைல்கள் உள்ளிட்டவற்றை, அளவின்றி வெகு விரைவாக பெற முடியும்.
நேரடி காட்சிகளை, உடனுக்குடன்  காண்பதும் சாத்தியமாகும். இதற்காக 64 டைட்டன் தொழில்நுட்பத்தில் அமைந்த 64 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இவ்வாறு சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே பூமிக்கு அடியில் வயர்களை பதித்து அதிகளவில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்துள்ள நாடுகளில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் பேசும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர்

cameroon_tribes_tamil
எங்கும் வாழும் என்றும் வாழும் தமிழ்.

விஸ்வரூபம் 2 அக்டோபரில் ரிலீஸ்

கமல் ஹாஸன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Kamal S Viswarooam 2 Release October
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படத்தை முடித்திருந்தார் கமல். ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்தார். மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.
மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார் கமல்.
ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல்.
தாய்லாந்து படப்பிடிப்பில் கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தினை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்றால் தீபாவளிக்கு வெளியாகக் கூடும்.

18ம் நூற்றாண்டில் சுட்ட, ரஜினியின் லேட்டஸ்ட் ‘பஞ்ச்’ டயலாக்

பஞ்ச்' டயலாக் இல்லாத ரஜினியின் சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு ‘பஞ்ச்' மன்னன், நம்ம படையப்பா.
18ம் நூற்றாண்டு நாவலுக்கும், நம்ம சூப்பர் ஸ்டார் டயலாக்குக்கும் ஒரு தொடர்பு இருக்குமென உங்களில் யாராவது, எப்போதாவது நினைத்ததுண்டா?
சம்பந்தம் இருக்கிறது. ரஜினியின் பிரபல டயலாக் ஒன்று 18ம் நூற்றாண்டு நாவலாசிரியரான ஜானே அகஸ்டனின் நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் என தற்போது தெரிய வந்துள்ளது.

.


ஜானே அகஸ்டன், தற்போதைய நவீன பாஷையின் ராணி எனப்படுபவர், இவரின் நாவலில் தான் நமது சூப்பர் ஸ்டார் சுட்ட டயலாக் இருக்கிறது.

ஜானேயின் ‘எம்மா' நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் டயலாக் தான், சுரேஷ் கிருஷ்ணாவின் ‘பாட்ஷா'வில் வரும் பிரபல டயலாக் ஆகும்.

சரி, சுத்தி வளைக்காமா அந்த டயலாக் என்னணு சொல்லிடுறோம். ‘நா ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி'னு தலைவர் விரலை சுத்தி... சுத்தி சொல்லுவாரே, அதுதாங்க அந்த சுட்ட டயலாக்.
இதுலயிருந்து என்ன தெரியுதுனா... நம்ம சுரேஷ்கிருஷ்ணாவும் ஜானேயோட நாவல படிச்சிருக்காரு.


ரெண்டு நூற்றாண்டு காலமா பிரபலமாகாத ஒரு வசனம், தலைவரு சொன்னதுமே 'பஞ்ச் டயலாக்'-கா நிக்குதுன்னா, அது தான் சூப்பர் ஸ்டாரோட .

கிளாமரை விரும்பும் தாவணி லஷ்மி மேனன்

இப்படி ஆசைப்படுபவர் வேறு யாருமல்ல சுந்தர பாண்டியன் நாயகி நம்ம லஷ்மி மேனன்தான். நடித்த எல்லாப் படங்களிலும் தாவணியிலும், புடவையிலும் நடித்து... போரடித்து விட்டது. அதனால் எ‌ன்னைஅதுபோன்ற படங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்கிறார்கள். 


அதனால் நானும் மற்ற நடிகைகள் போல், விதவிதமான காஸ்ட்யூம் போட்டு என் அழகை காட்டப் போகிறேன். எல்லா உடைகளும் லஷ்மி மேனனுக்குப் பொருந்துகிறது என்று சொல்ல வேண்டும். அதற்காக ஒரு ஸ்டில் சூட் வைத்து பல விதமான போஸ்களில் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். 

அதை ஒவ்வொரு பெரிய பெரிய சினிமா நிறுவனங்களுக்கும் அனுப்ப போகிறேன். அப்போதாவது என் அழகை தெரிந்து கொண்டு எல்லாப் படங்களுக்கும் அழைக்கட்டும். என்கிறார் கிளாமருக்கு ஆசைப்படும் மேனன்.

15 வருடங்களாக தேளை உயிரோடு தின்னும் வினோதம்




ஈராக்கில் விவசாயி ஒருவர் தினமும் ஒரு தேளை உயிரோடு சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக இதை செய்து வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

ஈராக்கை சேர்ந்தவர் இஸ்மாயில் ஜசிம் முகமது (34). இவர் ஒரு விவசாயி. இவர் விவசாயத்தில் ஈடுபடும் போது, பல பூச்சிகள் மற்றும் தேள்களால் கடிப்பட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற அவர், உயிருடன் தேள்களை பிடித்து சாப்பிடத்துவங்கினார்


சுமார் 15 வருடங்களாக இதை செய்து வரும் அவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

தேள்களை உயிருடன் சாப்பிடும்போது பலமுறை வாயில் கடி வாங்கியதால், இவருக்கு விஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்!


டிசைன், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கார் அல்லது பைக்கை வாங்குகிறோம். ஆனால், எப்படிப் பயன்படுத்தினால் நமக்கு லாபம் என்ற விஷயத்தைக் கவனிக்கவும் கடைப்பிடிக்கவும் தவறிவிடுகிறோம். எந்த வாகனமாக இருந்தாலும், நாம் பயன்படுத்துவதில்தான் சூட்சுமமே இருக்கிறது. இதில், மைலேஜ் என்பது மிக முக்கியம். ஏனென்றால், நம் பர்ஸில் இருக்கும் காசை கரைத்துக் கொண்டே இருப்பதில், இதற்குத்தான் முதல் இடம். சரி, எப்படியெல்லாம் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும்? 
அணுகுமுறை முக்கியம்!
நீங்கள் கார் அல்லது பைக் ஒன்றை வாங்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குத் திருமணம் நடந்தது மாதிரிதான். வாகனத்துக்கும் உங்களுக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும். எல்லோரும் அட்வைஸ் செய்வார்கள். 'முதல் 2,000 கி.மீ வரை காரை அளவாக ஆக்ஸிலரேஷன் செய்யுங்கள். அப்போதான் இன்ஜின் செட் ஆகும்’ என்பார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்?
ஏனென்றால், முதல் 2,000 கி.மீ-க்கு நீங்கள் எவ்வாறு இன்ஜினைக் கையாள்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் பின்னாளில் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் மைலேஜும் அமையும். இதைத்தான் வாகனத் துக்கும் உங்களுக்குமான உறவு என்பார்கள். ஏனென்றால், எல்லா டிரைவர்களும் ஒரே விதத்தில் வாகனத்தை அணுகமாட்டார்கள். எனவே, ஒவ்வொரு ஓட்டுனரின் அணுகுமுறைக்கு ஏற்ப வாகனம் பின்னாளில் அவர்களுக்கான செலவுகளை தீர்மானிக்கும்.
புத்தம் புதிய வாகனத்தில் இருக்கும் இன்ஜினில் பிஸ்டன், சிலிண்டர், பிஸ்டன் ரிங்ஸுகள், பேரிங்குகள் என அசையும் பாகங்கள் அனைத்துமே புதியவை; உராய்ந்து கொண்டே இருப்பவை. இங்கே எது முக்கியம் என்றால், அவை உராயும் விதம். இந்த உராய்தல் சமமாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும். புதிய வாகனத்தைக் கண்டபடி ஆக்ஸிலரேஷன் செய்தால், செட் ஆகியிருக்காத பிஸ்டன் ரிங்ஸுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், எரிபொருள் கலவை எரியும் இடமான கம்பஷன் சேம்பரில் சரியான அழுத்தம் கிடைக்காது. அதனால் எரிபொருள், விரயமாகும்.
எனவே, புதிய வாகனத்தில் வீணாக ஆக்ஸிலரேஷன் செய்து விளையாடாமல், நிதானமாகவே ஓட்டுங்கள். கொஞ்ச நாள் பொறுமையுடன் ஓட்டி, வாகனத்தை உங்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் ஓட்டுகையில் மைலேஜ் கூடுதலாகவோ, குறைவாகவோ தருகிறதா என்று சோதியுங்கள். அதைப் பொறுத்து, நீங்கள் ஓட்டும் விதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்!
ஓட்டும் விதத்தைப் பொறுத்தே பர்ஸ் காலியாகும்!
சிலர், ஜாலியாக ஓட்டுகிறேன் எனத் தேவையில்லாமல் டவுன் ஷிஃப்ட் செய்து ஓட்டுவார்கள். அவசியம் இல்லாமல் குறைந்த கியரில் ஓட்டினால், இன்ஜின் அதிகமாக எரிபொருளைக் குடிக்கும். சரியான வேகத்தில் சரியான கியர் என்பதுதான் எப்போதும் சரி.
எந்த மனநிலையிலும் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். திடீர் திடீரென்று வேகமெடுத்து ஓட்டக் கூடாது. சிலர், பிக்-அப் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு சும்மாவே கிளட்சை அழுத்துவார்கள். இதனால், தேவையில்லாமல் இன்ஜின் அதிகமாக ஆக்ஸிலரேஷன் ஆவதுடன், பழைய ஆர்பிஎம்முக்கே திரும்பிவிடும். பிக்-அப் ஒருபோதும் அதிகரிக்காது.
காரில், மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் நெடுஞ்சாலையில் ஓட்டப் போகிறீர்கள் என்றால், ஜன்னல்களை ஏற்றிவிட்டு ஏ.சியுடன் பயணிப்பதுதான் சரி. ஏ.சி மைலேஜைக் குறைக்கும் என நினைத்து, நெடுஞ்சாலையில் ஜன்னகளைத் திறந்துவிட்டு ஓட்டினீர்கள் என்றால், காற்றால் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்பட்டு, காரை அலைக்கழிக்கும். இதனால், மைலேஜ் பாதிக்கப்படும்
சீரான வேகம்! இதுவும் நல்ல மைலேஜுக்கு வழி வகுக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துக்குக் கீழே சீராக ஓட்டுவது நல்லது. அதேபோல், பைக் என்றால், 40 - 60 கி.மீ வேகத்தில் ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
சிக்னலை நெருங்குகிறீர்களா? திரும்பப் போகிறீர்களா? வேகத்தடை முன்னே இருக்கிறதா? - ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுங்கள். அருகே சென்று பிரேக் செய்வதால், இரண்டு மடங்கு கூடுதலாக எரிபொருள் வீணாகும்!
மைலேஜ் நிறையக் கிடைக்கும் என சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ காரை நியூட்ரலில் ஓட்டாதீர்கள். திடீரென பிரேக் செய்ய வேண்டிய சமயத்தில், 'இன்ஜின் பிரேக்கிங்’ இல்லாமல் விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
நாலு தெரு தள்ளி இருக்கும் கடைக்கோ, கோவிலுக்கோ வாகனம் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு குட்டி நடை போட்டு வாருங்கள். வாகனத்துக்கும் நல்லது; உடலுக்கும் நல்லது.
இன்னும் இருக்கு!
டயர்களில் இருக்கும் காற்றின் அளவும் மைலேஜைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் டயர்களில் வாகன நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்பி வைத்திருங்கள். குறைவான காற்றழுத்தம் டயரின் சுழலும் திறனைக் குறைத்துவிடும். இதனால், மைலேஜ் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதிகமான காற்றழுத்தத்தில் இருக்கும் டயர்கள் சமமாக தரையில் பதியாது. எனவே, காற்றழுத்தம் எப்போதும் சரியான அளவிலேயே இருக்க வேண்டும்!
இன்னொரு முக்கியமான விஷயம், காரில் இருக்கும் தேவையில்லாத கூடுதல் எடை. எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான லக்கேஜை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
எப்படி நம் உடலுக்கும் அவ்வப்போது முழு செக்-அப் தேவைப்படுகிறதோ, அது போலத்தான் காருக்கும். கார் நிறுவனம் சொன்ன கி.மீ கணக்கில் வாகனத்தைக் கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், எரிபொருள் நிரப்பும் பங்க். நம் ஊரில் உள்ள பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். முடிந்த வரை ஒரு நல்ல பங்க்கை தேர்ந்தெடுத்து, அதிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புங்கள். எந்த பங்க்கில் நாள் முழுக்க கூட்டம் குழுமுகிறதோ, அது நிச்சயம் நல்ல பங்க்காகத்தான் இருக்கும்.
நகரத்தில் கார் வைத்திருப்பவர்கள் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியாது. நகரத்தில் பயன்படுத்தும் கார்களில், ஓடும் நேரத்தில் செலவாகும் எரிபொருளைவிட சிக்னலிலும், டிராஃபிக் நெருக்கடியிலும்தான் அதிகம் எரிபொருளைக் குடிக்கும். காரணம், குறைந்த கியர்களில்தான் இந்த சமயங்களில் இன்ஜின் இயங்க வேண்டி இருக்கும். அதனால், இன்ஜின் ஆர்பிஎம்கள் இந்த சமயங்களில் அதிக அளவில்தான் இருக் கும். அப்படியானால் மைலேஜும் குறையும்தானே? இதைத் தடுக்க, முடிந்தவரை பீக் ஹவரில் காரை எடுத்துக்கொண்டு செல்லாமல், அரைமணி நேரம் முன்னதாகக் கிளம்புங்கள். சிக்னல்கள் அதிகம் இருக்கும் சாலையைத் தேர்ந்தெடுக்காமல், சுற்றி வந்தாலும் நிதானமாக ஒரே வேகத்தில் செல்லக் கூடிய சாலையாகப் பார்த்து ஓட்டுங்கள்!
இறுதியாக, இனிவரும் காலங்களில் எந்த எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு இல்லை. எனவே, எரிபொருளைச் சேமித்தீர்கள் என்றால், உங்கள் காசை சேமிக்கிறீர்கள் என்றே பொருள். இந்தச் சேமிப்பை குடும்பத்துக்காக வேறு எதிலாவது சின்ன அளவில் முதலீடு செய்யலாம்