என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, November 30, 2012

திரையை அம்புக்குறி இல்லாமல் சுலபமாக படம்பிடிக்க

நண்பர்களே உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில் சிறந்ததாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்திலும் ஒரு குறை கணினி திரையினை படம்பிடித்தால் மவுஸின் அம்பு குறி இருக்கும். இதை தவிர்க்க என்ன செய்வீர்கள் சிலர் மவுஸினை திரையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு போய் வைத்துவிட்டு திரையினை படம் பிடிப்பார்கள். இப்படி செய்யாமல் இந்த மென்பொருளை பயனபடுத்தினால் உங்களுக்கு வேண்டும் என்றால் மவுஸின் அம்புக்குறியோடும் இல்லாவிடில் அம்புக்குறியை வேறு கலருக்கோ அல்லது அம்புக் குறி இல்லாமலும் கணினி திரையினை படம் பிடிக்க முடியும். இந்த மென்பொருளின் பெயர் AeroShot
Aero Shot 1.3
நீங்கள் ஏதாவது ஒரு கோப்பினை படம்பிடிக்க வேண்டும் என்றால் அதை திறந்து வைத்து கொண்டு எது வேண்டுமோ அதை நேரடியாக படம்பிடித்து கொள்ளலாம்.


இந்த மென்பொருளின் சிறப்புகள்



நீங்கள் படம்பிடிக்கும் கணினி திரையினை நேரடியாக உங்கள் யுஎஸ்பி ட்ரைவினில் சேமிக்க முடியும்.

எந்த வகை ரெசொல்யூசனில் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும்.

நீங்கள் வழக்கம் போல இந்த மென்பொருளை நிறுவி விட்டு உங்கள் விசைப்பலகையில் ( விசைப்பலகை = Key Board) விண்டோஸ் கீ + பிரிண்ட் ஸ்கீரின் பட்டன்களை கொடுத்தால் இந்த மென்பொருள் இயங்கி நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அங்கு சேமித்து விடும்.

இது ஒரு திறந்தநிலை மூல பொருள் என்பதால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கவலையில்லை

இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் 7 ஆகியவற்றில் இயங்கும்.

இந்த மென்பொருளின் அளவு வெறும் 256கேபி மட்டுமே.

இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும். தரவிறக்கி நேரடியாக உபயோகபடுத்த வேண்டியதுதான்

AeroShot மென்பொருள் தரவிறக்க சுட்டி

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.

அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.

கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.


Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.

Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.

இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

சென்னையில் IPTV பிஎஸ்என்எல் நிறுவனம் தொடக்கம்


பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னையில் தனது IPTV( Internet Protocol Television) எனும் தொலைகாட்சி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மைவே பிஎஸ்என்எல் (MyWayBSNL) என்ற பெயரில் ஸ்மார்ட் டிஜிவிசன் நிறுவனத்துடன் இணைந்து இது வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் இணையதளம் http://www.myway.in/

கேபிள் டிவி தொந்தரவுகளில் இருந்து டிஷ் டிவி DTH மூலம் தரமான சேவை தொலைக்காட்சி ஒளிபரப்பில் வழங்கப்பட்டு வந்தது. அதில் அடுத்தகட்டமான IPTV ல் பல மேம்படுத்தப்பட்ட சேவைகள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். IPTV என்பது உங்கள் Broadband இணைப்பு மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

DVD யை விட உயர்தர வீடியோ, ஈமெயில் , வீடியோ சாட், டிக்கெட் புக்கிங், பேரண்டல் கன்ட்ரோல் என்று மேலும் பல வியப்படைய வைக்கும் சேவைகளை அறிமுகம் செய்கிறார்கள். DTH உடன் IPTV ஒப்பீடு அட்டவணையை இங்கே பாருங்கள்.


கட்டணங்களும் மிக அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. 100 ரூபாயில் ஆரம்பித்து 280 ருபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். ஆரம்ப கட்டம் என்பதால் சன் டிவி உள்பட பல தொலைக்காட்சி சானல்கள் இதில் இல்லை. இது மிகவும் பின்னடைவான விஷயம்.

விரைவில் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் இந்த துறையில் தனது திட்டங்களை தமிழகத்தில் அறிமுகபடுத்தலாம். அப்போது சேவைகள் அதிகரிக்க / கட்டணம் குறைய வாய்ப்பு உண்டு. IPTV தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய புரட்சியை உண்டு பண்ணலாம்.

இந்த சேவை தொடர்பாக Airtel நிறுவனத்தின் இணையத்தளம். http://www.airtel.in/interactive/index.html
இந்த சேவையை உபயோகித்தவர் யாராவது இருந்தால் உங்கள் அனுபவத்தை கூறுங்களேன்

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்

இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.

பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.
இணைய தள முகவரி - http://convertico.org/

இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம்



இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்

தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அதிகமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.

வெப்பம்:


தாங்கள் வாங்க நினைக்கும் மடிக்கணினி எவ்வளவு வெப்பம் உமிழும் என நன்கு தெரிந்துகொண்டு வாங்கவும்.
விலை மலிவு என, சரியான கட்டமைப்பு இல்லாத மடிக்கணினி வாங்குவது தங்களின் தொடைக்கு தோசைக்கல் வாங்குவது போன்றது.
நினைவகம்:
பல நிறுவனங்கள் குறைந்தது 2 ஜிபி நினைவகம் உள்ள மடிக்கனினிகளை வெளியிடுகின்றன. ஆனால் அவை 4ஜிபி யாக எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ளும் வசதி படைத்தததா என விசாரித்து வாங்கவும்.
மின்கலம்:

இயன்றால் 9-ஸெல் மின்கலம் வாங்க முயற்சிக்கவும். தங்களின் கணினிப் பயன்பாடு அதிகம் என்றாள் 2 மின்கலங்களை வாங்கவும். நெடும் பயணத்தின் போது அவை பெரிதும் பயன்படும்.
ஆயுள்:
ஒரு லேப்டாப் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.
சேவை மையம்:
பல லேப்டாப் விற்கும் விற்பணையாளர்கள் சர்வீசிங் செய்து தருவது இல்லை. அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், லேப்டாப் ஐப் பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.

அளவு:


பெரிய திரை இருப்பது தான் பெருமை என நினைத்து பலர் கங்காரு போல் பெரிய லேப்டாப்பை மடியில் சுமந்து இருக்கிறார்கள்.லேப்டாப் அளவு சிறியதாக இருக்கும்போது எடுத்துச்செல்வது எளிதாகிரது.
ஒவ்வொரு நிறுவனமும் 4 வகை தயாரிப்புகளை வெளியீடு செய்கின்றன.
வகை 1 : 20000 முதல் 30000 வரை.
அம்சங்கள்: விலை குறைவு, குறைந்த தரக் கட்டமைப்பு மற்றும் வேகம்.
யாருக்கு உகந்தது: மின்னஞ்சல், இன்டர்நெட், ஆஃபீஸ் மட்டுமே பயன்படுத்துவோர் அல்லது லேப்டாப் என்று ஒன்று இருந்தால் போதும் என நினைப்போர்.

வகை 2: 30000 முதல் 45000 வரை.

முதுகலை மாணவர், அலுவலக மென்பொருள் பயன்படுத்துவோர், காலேஜ் ப்ராஜெக்ட்ஸ் செய்வோர். சற்று கணினி அதிகமாகப் பயன்படுத்தும் எவரும் வாங்கலாம்.

வகை 3: 45000 முதல் 60000 வரை.

Graphics Designers, Gamers, System Admins, Real Mobility Wanted Users.
வகை 4: 60000 முதல் 130000 வரை.
அப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.
தொழில்நுட்ப அம்சங்கள்:
1. Dual Core or Quad Core Processor
2. 2GB DDR2 RAM is Minimum
3. 160GB or 250GB HDD
4. Bluetooth
5. WiFi
6. Memory Card Reader Slot
7. Webcam
8. DVD RW Drive
மேற்கண்ட அனைத்தும் அவசியமாக இருக்கவேண்டும். முகம், கைரெகை பார்க்கும் லேப்டாப் பெருமை அடித்துக்கொள்ள உதவுமே அன்றி மிகவும் இன்றியமையாத் தேவை அல்ல.
புதிதாக லேப்டாப் பயன்படுத்தும் முன் வலது ஆள்காட்டி விரலில் தேங்காய் எண்ணை தேய்த்துப் பயன்படுத்தவும்.

Thursday, November 29, 2012

ரஜினி வரலாறு: பகுதி-2

ரஜினி வரலாறு: பகுதி-1ரஜினி வரலாறு: பகுதி-2



சின்ன வயதில் முரட்டு சுபாவம்  உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் குடிப்பது, பெண்களை விரட்டுவது என அவர் நடத்தியது நவீன கிருஷ்ண லீலை என்று அவரே பின்னாளில் கூறியுள்ளார்.
மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, போலீசில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால், ரஜினிக்கோ படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
வாலிப வயதில் அடியெடுத்து வைக்கும்போது, பருவத்தின் உந்துதலாலும், நண்பர்களின் பழக்கவழக்கங்களினாலும் தவறு செய்வோர் பலர்.
மகாத்மா காந்தி கூட தமது சுய சரிதையில் இதுபற்றி எழுதியிருக்கிறார். “மாமிசம் சாப்பிட்டால் பலசாலி ஆகலாம் என்று என் நண்பர் சொன்னதைக் கேட்டு, நான் ரகசியமாக மாமிசம் சாப்பிட்டேன். பின்னர் அது தவறு என்பதை உணர்ந்து, என்னை மன்னித்து விடும்படி தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, என் தந்தை கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீரில் என் பாவங்கள் கரைந்துவிட்டன” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இளமைப் பருவத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி, மையினால் மீசை வரைந்து கொள்வார். சிகரெட் பிடிப்பார்.
இதையெல்லாம், ஒரு சூப்பர் ஸ்டாரான பிறகு தனது பல பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் ஒளிவு மறைவு இல்லாமல் ரஜினி குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு கட்டுரையில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அது மாதிரி நான் வளர்ந்தேன். சின்ன வயதிலேயே ‘செக்ஸ்’ என்றால் என்ன வென்று எனக்குத் தெரியும். என்னைவிட வயதில் மூத்தவர்கள்தான் எனக்கு பிரண்ட்ஸ். அவர்கள் குடித்து விட்டு தாசிகள் வீட்டுக்கு போவார்கள். நின்று பார்த்திருக்கிறேன்.
அந்த சின்ன வயதிலேயே அதற்காக தாங்க முடியாத உதையும் வாங்கியிருக்கிறேன்.
16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது, இந்த அரகன்ஸ், முரட்டுத்தனம் எல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டன. பிரேயர், பிராணயாமம் எல்லாம் செய்தபோது, என் சுபாவங்கள் சற்று குறைந்தன.
ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள். முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சண்டை மாத்திரம் அல்ல. ‘நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன்’ என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்பவேண்டும் என்ற வெறி…”
ஒருமுறை, ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது, அவள் போலீசாரிடம் புகார் செய்ய, போலீசார் ரஜினியையும், அவருடைய நண்பர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
ரஜினியின் தந்தை தலைமை போலீஸ்காரர் என்பதையும், சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட போலீசார், ரஜினியை விடுவித்து, வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
நடந்ததை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் பொங்கியது. முரட்டுத் தம்பியை பின்னியெடுத்துவிட்டார். ஆனால் வெளியில் அத்தனை முரட்டுப் பிள்ளையாக இருந்தாலும், அண்ணனை எதிர்த்துப் பேசவோ, அடிப்பதை எதிர்க்கவோ முயலவில்லை ரஜினி. அமைதியாக தனது தவறுகளுக்கு தண்டனையை வாங்கிக் கொண்டார். இதை சத்தியநாராயண ராவே பல முறை கூறியுள்ளார்.
“தம்பி வெளியில் எவ்வளவு முரடனாக இருந்தாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் என்னிடம் அத்தனை மரியாதை, பயத்துடன்தான் நடந்து கொள்வார்…” என்கிறார் சத்யநாராயண ராவ்.
ரஜினிகாந்த், சிறு வயதிலேயே பயம் இல்லாதவராக – துணிச்சல் மிக்கவராக இருந்தார்.
அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள காட்டில் பூதச்சாமியார் என்று ஒரு சாமியார் இருப்பதாக மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். “பூதமாவது! சாமியாராவது! போங்கடா…” என்று ரஜினி கேலி செய்வார்.
“அப்படியானால், நீ காட்டுக்கு தன்னந்தனியாகச் சென்று அந்த சாமியாரைப் பார்த்துவிட்டு வா பார்க்கலாம்!” என்று மற்ற மாணவர்கள் சவால் விட்டனர்.
சவாலை ஏற்ற ரஜினி, தன்னந்தனியாக காட்டுக்குள் நுழைந்தார். கால் போன போக்கில் வெகு தூரம் சென்றுவிட்டார். சாமியாரைக் காணோம்.
நடு காடு. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆள் அரவமே இல்லை. ரஜினிக்கு லேசாக பயம் வந்தது.
அந்தச் சமயத்தில், “வா, மகனே வா!” என்று ஒரு குரல் கேட்டது. ரஜினி திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 60 அல்லது 70 இருக்கும். தலைமுடி, சடை சடையாகத் தொங்கியது.
ரஜினி அவர் அருகில் சென்றார். அவர் ஏதோ மந்திரம் சொல்லி, அதை திருப்பிச் சொல்லும்படி ரஜினியிடம் கூறினார். அதன்படி ரஜினி திருப்பிச் சொன்னார்.
“இப்போது நீ திரும்பிப் போ! நாளைக்கு வா!” என்று சொன்னார், சாமியார்.
ரஜினி காட்டுக்குள் போய் வெகு நேரமாகத் திரும்பி வராததால், அவருடைய நண்பர்கள் பயந்து போய்விட்டார்கள்.
அப்போது ரஜினிகாந்த், “பூதச்சாமியாரை பார்த்துவிட்டேன்” என்று கூறிக்கொண்டே ஓடிவந்தார்.
“நிஜமாகவா! சாமியாரை பார்த்தாயா!” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்டார்கள்.
நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறினார். தைரியமாக நடுக்காட்டுக்கு போய் சாமியாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ரஜினியை நண்பர்கள் வியப்புடனும் பயத்துடனும் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.
மறுநாள் பூதச்சாமியாரை ரஜினி போய்ப்பார்த்தார். தொடர்ந்து சில நாட்கள் சென்று வந்தார். ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் அந்த சாமியார்தான் கற்றுக்கொடுத்தார்.
பிறகு, “எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்” என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
-தொடரும்

ரஜினி வரலாறு: பகுதி-1

ரஜினி வரலாறு: பகுதி-1
இளமையிலேயே தாயை இழந்த ரஜினி
அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், இந்தியாவின் “சூப்பர் ஸ்டார்” ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளி நாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரத்தில் பறக்கிறது. அதற்காக அவர் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. எப்போதும் தன் தனித்துவத்தை இழக்காதது அவரது மிகப் பெரிய ப்ளஸ்.
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக “ரஜினிகாந்த்” என்று மாற்றி வைத்தவர், இயக்குநர் கே.பாலசந்தர்.
ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய்.
“கெய்க்வாட்” என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் “கெய்க்வாட்” என்று அழைக்கப்பட்டனர்.
ரஜினியின் முன்னோர்கள் சத்ரபதி சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான்.
ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.
ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார்.
ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து “ஹெட் கான்ஸ்டபிள்” ஆனார்.
ரானோஜிராவ் – ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த்.
1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி.
ரஜினிக்கு சத்தியநாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய்.
ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி.
ரஜினியின் பள்ளிப் பருவம்
குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார்.
ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.
ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார்.
உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதி விட்டார். கையை எடுத்து முத்தமிட்டார்.
அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார்.
விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை.
இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:
“சின்ன வயதில் அவன் (ரஜினி) ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான். அம்மா இறந்தபோது, அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது.
அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்ததை உணராமல், வீதியில் சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு.
மறுநாள், வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், “அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும்” என்று அழுதான்.
அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான்.
அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.
நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட தூங்கியது கிடையாது.
தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது. சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கமாட்டான். உடனே சமாதானமாகி, என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.”
தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில், “அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாச் சிறுவனாக இருந்தேன். இப்போது, எந்தத் தாயைப் பார்த்தாலும், எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் நான் நடித்தபோது, “அம்மா, நீ சுமந்த பிள்ளை” என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன்” என்றார்.
-தொடரும்

Tuesday, November 27, 2012

திருமண வாழ்வை தக்க வைக்கும் இனிமையான நினைவுகள்

திருமண வாழ்வை தக்க வைக்கும் இனிமையான நினைவுகள்!
இந்த மார்டன் உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறது. அவ்வாறு செல்லும் வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பதோடு, மண வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது.
ஒரு காலத்தில் திருமணம் நடந்தால், அந்த தம்பதிகள் என்ன நடந்தாலும் இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து வருவர். ஆனால் தற்போது, வாழ்வில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த வாழ்க்கை இறுதி வரை செல்லாமல், பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் விவாகரத்து வரை செல்வதோடு, அந்த விவாகரத்தும் எளிதில் கிடைத்து பிரிந்து விடுகின்றனர். வாழ்வில் சந்தோஷம் மட்டும் என்பதில்லை, கோபமும் தான் இருக்கும். அவற்றையெல்லாம் வெற்றி பெற்று வாழ்வை வாழ்ந்து காண்பிப்பது தான் சிறப்பான ஒன்று.
ஆகவே எந்த பிரச்சனைகள் வரும் போதும், நமது கோபத்திற்கு இடத்தை கொடுக்காமல், வாழ்க்கையின் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, விவகாரத்து தான் இதற்கு வழி என்று எண்ணாமல், மனதை அமைதிப்படுத்தி, ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அவ்வாறு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அந்த கஷ்டமான தருணத்தை மட்டும் எண்ணாமல், சந்தோஷமாக இருந்த தருணத்தை நினைத்து, மனதில் இருக்கும் கோபத்தை வெளியேற்ற வேண்டும். சரி, இப்போது பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை நினைக்காமல், எந்த மாதிரியான இனிமையான நினைவுகளையெல்லாம் நினைத்து, திருமண வாழ்விற்கு முற்று ஏற்படாமல், நீண்ட நாட்கள் நிலைக்க வைப்பது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் நாள்

முதல் நாள் உங்கள் துணைவரை நேருக்கு நேராக கண் இமைக்காமல் பார்க்கும் படி செய்த அல்லது உங்கள் மனதில் காதல் எண்ணத்தை ஊட்டிய அந்த நாள் மிகவும் ஸ்பெஷலான மறக்க முடியாத ஒரு இனிமையான நாள்.

நண்பர்கள்

நட்பு மற்றும் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு உறவின் முக்கியமான ஒரு பகுதி. இந்த நாட்களை வாழ்க்கை முடியப் போகும் தருணத்தில் நினைத்துப் பார்த்தால், அனைத்தும் கவலைகளும் மறந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

காதலில் விழுந்த நாள்

ஒருவருடன் பழகும் போது, நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவரின் மீது காதல் இருப்பது புரிய வரும். அப்போது உணர்ந்த அந்த இனிமையான அனுபவத்தை நினைத்தால், அது வாழ்வில் மற்றும் மனதில் ஒருவித குதூகலத்தை உண்டாக்கும்.

முதல் நெருக்கமான தருணம்

இது முதன் முதலில் இருவரும் முத்தம் கொடுத்ததாகவோ அல்லது வேறு ஏதாவதான ஒருவித உணர்வை உணர்ந்த நாளாக இருக்கும். அதிலும் இந்த தருணத்தின் போது எப்போதுமே இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கும்.

முதல் வெளிப்படுத்திய நாள்

எதிர் பார்க்காத நேரத்தில் வாழ்க்கைத் துணை அதிர்ச்சியூட்டும் வகையில் காதலை சொன்ன அந்த நாளை யாராலும் மறக்க முடியாது.

திருமணத்திற்கான ஷாப்பிங்

வீட்டில் திருமணத்திற்கான ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதோ நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே வாழ்வின் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கும்.

திருமண நாள்

வாழ்வில் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாள் தான் திருமண நாள். அந்த நாளன்று இதுவரை தனியாக, காதலராக இருந்தவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறீர்கள் என்று பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி சேர்த்து வைக்கும், மனதின் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நாள்.

தேனிலவு பயணம்

வாழ்வின் யாராலும் மறக்க முடியாத ஒரு பயணம் என்றால் அது தேனிலவு தான். அதிலும் இந்த பயணத்தின் போது அவர்கள் அந்த பயணத்தின் நினைவாக வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்துக் கொள்வார்கள்.

முதல் சண்டை

திருமணத்திற்கு பிறகு சண்டைகள் நிறைய வரும். ஆனால் முதல் சண்டையை மட்டும் யாராலும் மறக்க முடியாது.அதிலும் அவ்வாறு வரும் சண்டை ஏதேனும் ஒரு சிறு விஷயத்திற்காகத் தான் இருக்கும்.

பெற்றோர் ஆன நாள்

இந்த தருணம் தான், தம்பதிகளுக்கிடையே இருக்கும் அன்பின் அடையாளம். சொல்லப்போனால் இதுவரை சாதாரணமாக இருந்த அவர்கள் பெற்றோர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த நாள்

பார்ட்டி கொடுத்து கொண்டாடினார் விஜய்


துப்பாக்கி சூப்பர் ஹிட்டானதை பார்ட்டி தந்து கொண்டாடினார் விஜய்.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து துப்பாக்கி அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவில் இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் படங்களின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது. அதேபோல் தெலுங்கில். முதலிரண்டு நா‌ட்கள் ஆந்திராவில் சில பிரச்சனைகளை துப்பாக்கி சந்தித்தது. பல இடங்களில் துப்பாக்கிக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது அந்தப் பிரச்சனையும் ஓய்ந்து படம் பிரமாதமான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இப்படியொரு வெற்றி விஜய்க்கு அமையவில்லை. அதற்கேற்ப விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மிகப்பெ‌ரிய பார்ட்டி ஒன்றை அளித்தனர். நண்பர்களுடன் முருகதாஸ் உள்ளிட்ட துப்பாக்கி டீமும் இந்த விருந்தில் கலந்து கொண்டது.

விஜய், சங்கீதா அளித்த விருந்து பிரமாதம் என்று முருகதாஸ் தனது ட்விட்ட‌ரில் வியந்திருக்கிறார்.

அடுத்தப் படத்துக்கு விஜய் இதைவிட‌ப் பெ‌ரிய பார்ட்டியாக தரட்டும்

வெண்ணெய் புட்டு



என்னென்ன தேவை?

புழுங்கலரிசி - 1 கப்,
வெல்லம் - முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைக்கவும். கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கெட்டியாகும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, அதையும், கலவையில் கொட்டி மறுபடி கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும். முதல் நாள் இரவே கூட செய்து வைக்கலாம். கெட்டுப் போகாது.

வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்க உதவும் புதுமையான தளம்.

தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.


இணையதள முகவரி : https://www.kareer.me


இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Monday, November 26, 2012

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய



VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். 


சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
  • APE (Monkey Audio)
  • Real Audio 2
  • Alaw/µlaw
  • AMR (3GPP)
  • MIDI 3
  • LPCM
  • ADPCM
  • QCELP
  • DV Audio
  • QDM2/QDMC (QuickTime)
  • MACE
இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று மற்றும் பல ஏனைய வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. 

VLC Media Player-ன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய- VLC 2.0.0 RC1

Tuesday, November 20, 2012

மடிக்கணினியில் வைஃபை (Wi-Fi) பயன்படுத்தும் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுகிறது

மடிக்கணினிகளில் (Wi-Fi) வைஃபை  மூலம் இணையத்தினை பயன்படுத்தும்போது ஆண்கள் அக்கணினிகளை தமது மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு மடியில் வைத்து மடிக்கணினிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் டப்லட் ஊடாகவும் வைஃபை பயன்படுத்தும் போதும் இது குறித்து அவதானமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்த ஆய்வின்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. வைஃபை இல்லாமல் மடிக்கணினியை பயன்படுத்தியோரை பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும் ஆனால் வைஃபை-ஐ பயன்படுத்தியபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மடிக்கணினிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மடிக்கணினிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து பயன்படுத்துவதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் சகாப்தம்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர் கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம...
் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஆர். முத்துக்குமார் ரகோத்தமனிடம் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி குமுதம் ரிப்போர்ட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அவசியம் கருதி முழுவடிவம் இப்போது உங்களுக்காக.

பதினெட்டு வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ராஜிவ் கொலை வழக்கு பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?
மொத்தம் மூன்று காரணங்களைச் சொல்லவேண்டும். நம்முடைய நாட்டில் நடந்த முக்கியப் படுகொலை இது. அதைப் பற்றிய புலன் விசாரணையைத் தொடங்கி, மூளை உழைப்பு, மனித உழைப்பு எல்லாவற்றையும் கொட்டி, ஏ டு இஸட் எல்லா விவரங்களையும் சேகரித்தோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திராசாமி செய்யச் சொன்னார் என்கிறார்கள். சிஐஏ உளவு அமைப்பின் கைங்கர்யம் என்கிறார்கள். இந்தத் திசை திருப்பல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ராஜிவின் மனைவி இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜிவ் காந்தியைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்துகொள்வது வெகு சுலபம். அவர்களாக ஏஜென்ஸி வைத்துக்கூட விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் தனது மகள் பிரியங்காவை அனுப்பி குற்றவாளி நளினியிடம், ‘என் அப்பாவைக் கொலை செய்தது யார்?’ என்று கேட்டதாக செய்தி வந்தது. எனில், ராஜிவ் குடும்பத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழுவையோ, அதன் குற்றப்பத்திரிகையையோ நம்பவில்லை என்றுதானே அர்த்தம். இது எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. உண்மையில் தடா நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பல சாட்சியங்கள், ஆவணங்கள் வெளியே வராமல் போய்விட்டன. அவை முறைப்படி எல்லோருக்கும் தெரியவந்திருந்தால் இந்த சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆதாரங்கள் கைவசம் இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை நான் தலைமைப் புலனாய்வு அதிகாரி. வழக்கின் பிரதம குற்றவாளியான பிரபாகரனும், அடுத்த நிலைக் குற்றவாளியான பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புலனாய்வு அதிகாரியான நான் – ஓய்வு பெற்றுவிட்டாலும் – அது குறித்துப் பேசக்கூடாது. அது சட்ட விரோதம். அதனால்தான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நான் அறிந்த உண்மைகளை இதுநாள் வரை வெளியில் பேசாமல் இருந்துவந்தேன்.

ஆனால் சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில், பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசே அறிவித்து, அந்த வழக்கை மூடிவிட்டார்கள். இனி இந்தியாவிலும் ராஜிவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நிச்சயம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கப்போவதில்லை. இதுதான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியது. எழுதிவிட்டேன். ஒருவேளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் புத்தகமே எழுதியிருக்கமாட்டேன்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
பரிபூரணமாக. இலங்கை அரசு நீதிமன்றத்திலே அதைப் பதிவுசெய்த பிறகு ஏன் நம்பாமல் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் எந்த நாடும் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறந்து போனவர் பிரபாகரன் என்று கருணாவே அடையாளம் காட்டியிருக்கிறார். ஆகவே, பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் எந்த அதிகாரியும் வைத்ததில்லை. புலனாய்வின்போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஓரிரு உதாரணங்களைச் சொல்லமுடியுமா?
கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன என்பதுதான் என்னுடைய வாதம். புலனாய்வு தொடங்கிய புதிதில் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்றார்கள். விசாரணை தொடங்கி, அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். இதுதான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையிலும் நடந்தது.

ஒரு புலனாய்வு நடக்கிறது என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு எல்லா கோணங்களிலும் விசாரிக்க சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இவரைப் போய் விசாரிக்காதே அவரைப் போய் எதுவும் கேட்காதே என்று சொல்வது தவறு.

ராஜிவ் படுகொலைக்கு முன்பு அந்தப் பகுதியில் நடக்க இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அது ஏன் என்பது குறித்து விசாரிக்கவேண்டும். நான் கருணாநிதியை விசாரிக்கவேண்டும் என்று கார்த்திகேயனிடம் கேட்டேன். ஆனால் கார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா? ‘இனிமே இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாதீங்க’ இதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதியை விசாரிப்பதில் கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்றுதானே!

புலன் விசாரனையின்போது பல வீடியோ கேசட்டுகள் கிடைத்தன. அதில் ஒன்று, புலிகளின் குகையில் என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ. வைகோ இலங்கைக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவருடன் பேசியது போன்ற காட்சிகள் எல்லாம் அதில் இருக்கும். ஆகவே, புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று நினைத்தேன். பிறகு சின்ன சாந்தனிடம் விசாரணை செய்தோம். அப்போது அவர், ‘கொடுங்கையூரில் சிவராசனை வெள்ளை உடையில் வந்த ஒருவர் சந்தித்து, ‘இந்தக் காரியத்தை நல்லபடியாக முடியுங்கள். அடுத்த இலக்கு வைகோவை சி.எம் ஆக்குவதுதான் என்றார்’ என்று சின்ன சாந்தன் கூறினார். இது என்னுடைய சந்தேகத்தைக் கிளறியது.

பாளையங்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ‘பிரபாகரனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளது’ என்று விவரித்துப் பேசினார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அந்த உருவம் என்னுடையது. ஆனால் குரல் என்னுடையது அல்ல’ என்று பொய் சொன்னார். அது பத்திரிகையில் வெளியான செய்திதான். ஆனால் அதைச் சொல்வதற்கே தயங்கி, பொய் சொன்னார். இது என்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னேன். அனுமதி கொடுத்தார் கார்த்திகேயன். ஆனால் சந்தேகத்துக்குரியவராக அல்ல; முக்கியமான சாட்சியமாக மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று சொன்னார். விசாரணையை சரியான பாதையில் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

புலனாய்வு நடந்துகொண்டிருந்தபோது கார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி இருந்தது?
ஒருமுறை என் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். சிவராசனின் செயற்கைக் கண், துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் போன்ற தடயங்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். உண்மையில் அந்த தடயங்களைக் கொடுத்து பெரிய பெரிய அதிகாரிகள்தான். ஆனால் என்னைக் குற்றம்சாட்டியபோது அதை நான் ஆதாரத்துடன் மறுத்தேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தால் இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு என்னைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.

ராஜிவ் கொலைச் சம்பவம் அது நடப்பதற்கு முன்பே வைகோவுக்குத் தெரியும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர எது ஆதாரமாக இருந்தது?
இரும்பொறை என்பவருக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கு பற்றி எனக்குத் தெரியும் என்று யாரிடமும் பேசாதே. ரவிச்சந்திரனின் வீட்டில் விடுதலைப் புலிகளை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இந்தமுறை ராஜிவ் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. உடனே வைகோ, ‘மண்டல் கமிஷனை எதிர்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியே போக முடியாது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி விளக்கம் கொடுத்தார். அவர் என்ன பேசினார், என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்பதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக விசாரித்திருக்கவேண்டும்.

ராஜிவ் கொலைவழக்கு விசாரணையிலும் கொலைக்கு முந்தைய புலனாய்வு சேகரிப்பு நடவடிக்கைகளிலும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
தொடக்கத்தில் இருந்தே கொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று ’ரா’ அமைப்பின் இயக்குனர் பாஜ்பாய் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதிலும் பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி என்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமியும் இருந்துள்ளார். ‘புலிகள் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பிரதமர் சந்திரசேகர் கேட்டதற்கு, ‘என்னுடைய உளவாளி கிட்டு சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கமுடியும்?

புலிகள் செய்யவில்லை என்று கிட்டு சொன்னதை ராவின் தலைவரும் திரும்பத் திரும்பச் சொன்னால் இவருக்கும் அவருக்கும் என்னதான் வித்தியாசம்? குற்றவாளிகளை திரைபோட்டு மறைக்கப்பார்த்த பாஜ்பாய்தான் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துக்கொண்டேன். ராஜிவ் கொலை தொடர்பாக ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் இண்டலிஜென்ஸ் பியூரோவுக்குக் கிடைத்தது. வர்மா கமிஷன் சார்பாக அந்த வீடியோ கேசட்டைக் கேட்டபோது இறுதிவரை இண்டலிஜென்ஸ் பியூரோ தரவேவில்லை. அப்போது ஐ.பியின் இயக்குனராக இருந்தவர்

எம்.கே. நாராயணன். பாஜ்பாய் முழுப்பூசணிக்காயை மறைக்கிறார். எம்.கே. நாராயணன் கேசட்டைக் கொடுக்கத் தயங்கினார். இந்த அளவில்தான் ரா மற்றும் ஐ.பி என்ற இரண்டு உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தது.

சுப்ரமணியன் சுவாமியின் எந்தக் கருத்தையும் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்னும் நிலையில் ராஜிவ் கொலையை அடுத்து நடைபெற்ற அதிமுக்கியமான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் நடந்தவை பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதியதை நீங்கள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொடுத்திருக்கிறீர்கள். உளவுத்துறை மீதான சுவாமியின் விமரிசனங்களையும் ராஜிவ் கொலை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் நீங்கள் நம்புகிறீர்களா?
பொலிட்டிகல் அஃபயர் கமிட்டி கூட்டத்தில் பேசியதாக சுப்ரமணியன் சுவாமி சொன்னதை நான் நம்புகிறேன். அங்கே பேசப்படும் விஷயங்களுக்குப் பதிவுகள் இருக்கும். ஆகவே அந்த விஷயத்தில் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை என்னை அனுமதித்திருந்தால் அந்தப் பதிவையும் எடுத்துவந்திருப்பேன். திரும்பவும் சொல்கிறேன். சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

புலனாய்வின்போது ஏற்பட்ட ஏராளமான சயனைடு மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால்தான் நடந்தன என்பதற்கு உங்கள் பதில் என்ன?
சயனைடு என்பது விடுதலைப்புலிகளின் முக்கிய ஆயுதம். விடுதலைப்புலி ஒருவர் போலீஸாரால் பிடிபடுவதற்கான சூழல் ஏற்பட்டால் உடனடியாக குப்பி கடித்து சாக்வேண்டும் என்பது அவர்கள் இயக்கத்தின் ஆணை. சிவராசனை கர்நாடகாவில் சுற்றிவளைத்தபோது தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி அதிரடியாகப் பிடித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, டெல்லியில் இருந்து சிறப்புப் படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி ஒருநாளுக்கு மேல் தாமதம் செய்ததுதான் சிவராசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதைவிடக் கொடுமை, அவர் வசம் இருந்த ஆவணங்களை எல்லாம் அழிப்பதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுதான். அதிரடியாகச் செயல்பட்டிருந்தால் சிவராசனை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம்.

ஜெயின் கமிஷன் விசாரணையின்போது சிபிஐ ஒத்துழைப்பு தரவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
ஜெயின் கமிஷனை நியமித்த உடனே அவர் விசாரணையைத் தொடங்கவில்லை. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடியட்டும். அதைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுங்கள். அதன்பிறகு நான் விசாரணையைத் தொடங்குகிறேன் என்றார் ஜெயின். விசாரணைகள் எல்லாம் முடிந்ததும் திரட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்றை ஜெயின் கமிஷனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன் அப்படிச் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்று சிபிஐ பப்ளிக் பிராசிகியூட்டரால் போடப்பட்டு, வழக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற நபர்களுக்குக் கொடுக்ககூடாது என்று ஆர்டர் வாங்கப்பட்டது.

அதன்மூலம் ஜெயின் கமிஷனுக்கு எந்த விவரங்களையும் கார்த்திகேயன் தரவில்லை. இதன் பின்னணியில் ஜெயின் சொன்ன ஒரு கருத்து இருக்கிறது. ‘சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்காத நபர்களை எல்லாம் நான் விசாரிப்பேன்’ என்றுச் சொல்லியிருந்தார்.

தனக்குத் தகவல் கொடுக்காத ஆதங்கத்தில்தான் எல்லோருடைய அஃபிடவிட்டுகளையும் வாங்கி, விசாரித்து, இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விளைவாகவே குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு விசாரணை செய்வதற்காக கார்த்தியேகயனை அழைத்தார். அப்போது தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் நானும் சென்றிருந்தேன்.

‘என்னிடம் எந்த ஆதார நகலையும் தரவில்லை. எனக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியை நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஜெயின்.

உளவுத்துறைத் தலைவர் முதல் கலைஞர் வரை, மரகதம் சந்திரசேகர் முதல் வைகோ வரை இந்நூலில் ஏராளமானவர்கள் மீது நீங்கள் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?
அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரையும் குற்றம் சாட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. சாட்சி இருந்தால் எவரையும் விடக்கூடாது. இல்லையென்றால் ஒருவரையும் தண்டிக்கக்கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம்.